Wednesday, April 4, 2012

மனிதன் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு

மனிதன் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு


லண்டன்: பால் மண்டலத்தில் பூமியைப் போல மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் (ரெட் ட்வார்ப்) உள்ளன. இதில் 40 சதவீதம் பூமியைப் போலவே (சூப்பர் எர்த்) உள்ளன.

அவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப உள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொ ன்றும் பூமியைப் போல 1 முதல் 10 மடங்கு பெரியதாக உள்ளன. எனினும், நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடும்போது 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது, மங்கலாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜூபிடர் மற்றும் சனி கிரகங்களைப் போல மிகமிக தொலைவில் இவை அமைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment