மின் கட்டணத்தை நிறைய ஏற்றிவிட்டு, கொஞ்சமாக குறைத்திருக்கிறது தமிழக அரசு. இந்த மின் கட்டண உயர்வினால் மாத பட்ஜெட்டில் துண்டு விழாமல் புத்திசாலித்தனமாகச் சமாளிக்க இதோ சில யோசனைகள்:
60 வாட்ஸ் பல்புகளை மாற்றி விட்டு 15 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சி.எல்.எஃப். விளக்குகளை பயன்படுத்தலாம்.
சார்ஜர் ஏற்றும் நேரம் போக மற்ற நேரங்களில் பிளக் போர்டுகளிலிருந்து சார்ஜர்களைக் கழற்றி சுவிட்சை ஆஃப் செய்துவிடவும்.
ஏ.சி. பயன் படுத்துபவர்கள் அதை தொடர்ச்சியாக இயக்குவதை விடுத்து, இடையிடையே நிறுத்தி இயக்கலாம்.
ஃபிரிட்ஜை அடிக்கடி திறந்து மூடாமல், அவசியத்துக்கேற்ப பயன்படுத்தினால் அதற்கான மின்சாரத் தேவையை குறைக்கலாம்.
குறைந்த விலையில் கிடைக்கும் சோலார் பவர் டார்ச் லைட், ஸ்டடி லேம்ப் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
தாமிரம் அல்லது அலுமினிய சோக்குகள் உள்ள மின்விளக்குகளிலிருந்து எலெக்ட்ரானிக் சோக் பொருத்திய மின்விளக்கு களுக்கு மாறுவது நல்லது.
வெளிச்சம் குறைவாக தேவைப்படும் இடங்களில் குறைந்த மின்சாரத்தை எடுக்கும் ஹை பவர் எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம்.
பழைய ஃபேன் ரெகுலேட்டர்களை மாற்றிவிட்டு எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை பயன் படுத்தலாம்.
இந்த யோசனைகளின்படி மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்தினால், மின் தேவையை 25 முதல் 30 சதவிகிதம் வரை குறைக்க வாய்ப்புண்டு. இதனால் கணிசமான ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும்.
விகடன்
No comments:
Post a Comment