Tuesday, April 3, 2012

அருள் மழை - 51


நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.

சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவாகாஷ்ட மௌனத்துலஇருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலைஎன அருகில்இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒருசேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வான்னு தகவல்.பறந்தடிச்சுண்டுபெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகாபெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணுஎழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோடஅழைப்பையும்மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

அவனை உள்ளே கூப்பிடுன்னு பெரியவாளோட குரல் நன்னாக்கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சிமகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு,சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கேபுஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம்பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுலஇருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களாலஅலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்துஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப்பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே!மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னுகேட்டார்.

அடியேனுக்குக்காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவான்னுசொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்;கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்லகண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன்.அதன் அர்த்தம் இதுதான்

எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின்சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம்முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டுவிளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம்சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடையஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால்சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில்கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வமாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்தமகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின்மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ-அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை,அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்தநிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்தபூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீதுதூவிக்கொண்டார், பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம்முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவேஅலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின்நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சிதந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலைஅடியேன் எழுதியதும்ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங்கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவாஎன்னைஅழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என்பாக்கியம்! வேறென்ன சொல்றது?!”

நன்றிசக்தி விகடன்

No comments:

Post a Comment