தமிழ் சினிமாவின் சாகா வரம் பெற்ற காட்சி அது. வீட்டை விட்டு வெளியேறும் ஹீரோ, ''சென்னை போய் பொழைச்சுக்கிறேன்'' என்று சபதம் போடுவதும், சென்னை வந்து கோலோச்சுவதும். ஆனால், இனி வரும் காலங்களில் அப்படி ஒரு காட்சிக்குத் தேவை இருக்காது. படங்களில் மட்டும் அல்ல; நிஜத்திலும். சென்னையின் பிரமாண்ட மால்கள், மல்டிப்ளக்ஸ்கள், பெரிய சிறிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... எங்கும் இப்போது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்கள்!
சென்னையின் பொருளாதாரம் நீண்ட காலமாகவே ராஜஸ்தானியர்களிடமும் குஜராத்திகளிடமும்தான் இருக்கிறது. சென்னையில் எந்த ஒரு தொழிலிலும் மொத்த விற்பனையாளர்கள் - முதலாளிகள் அவர் கள்தான். ஒருவேளை அவர்கள் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடவில்லை என்றால், வட்டித் தொழில் மூலம் அவர்களுடைய கரங்கள் அந்தத் தொழிலில் பிணைந்து இருக்கும். இப்போது தொழிலாளர்கள் நிலையிலும், வெளி மாநிலத்தவர்களின் - குறிப்பாக - வட இந்தியர்களின் கை ஓங்குகிறது!
தமிழர்கள் நஹி ஹை!
எப்போதுமே வெளியூர்களில் இருந்து வேலை தேடி வருவோருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு, கட்டுமானப் பணி. சென்னையின் வரலாற் றிலேயே அதிகமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட அடைபட்டு விட்டதாகவே தோன்றுகிறது. சென்னையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 80 சதவிகிதத்தினர் வட மாநிலத்தவர்கள்.
தென் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற் பேட்டையில் பணியாற்றுவோரில் 70 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இந்தத் தொழிற்பேட்டை, சென்னையின் வேலைவாய்ப்புகேந்திரங் களில் மிக முக்கியமானது. ''வெளிமாநிலத் தொழிலாளர்களைத் தவிர்த்துவிட்டு, இன்றைய தொழிற்பேட்டையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அவர்கள் இல்லாவிடில், தொழிற்பேட்டை யையே மூடிவிட வேண்டியதுதான்''.
அடிமைகள் Vs அடிமைகள்!
வெளி மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை அப்படி ஒன்றும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாக, அடிமட்ட வேலைகளில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்கள் தங்க வைக்கப்படும் இடம் அனல் கக்கும் தகரக் கொட்டகைகள். கூலி தவிர்த்து, வேறு எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவது இல்லை. கூலியும் தமிழர்களைவிடக் குறைவுதான். இந்தக் குறைந்தபட்சக் கூலியிலும் சரி பாதியை அவர்களை இங்கு அழைத்து வந்த ஏஜென்ட்டுகள் வாங்கிக்கொள்கிறார் கள். கிட்டத்தட்ட அந்தத் தொழிலாளர்கள் விலங்குகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஒரு காலத்தில், அரபு நாடுகளில் வேலைக்குப் போய் கொத்தடிமைகளாகச் சிக்கிய சக தமிழர்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட தமிழ்ச் சமூகம், இப்போது எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்தக் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கிறது. ஆனால், இவ்வளவு பரிதாபத்துக்கு உரிய நிலையில் இருக்கும் இந்தத் தொழிலாளர்கள்தான் அதே வறிய நிலை யில் இருக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு மறைமுகமான போட்டியாளர்களாக மாறுகிறார்கள்.
''தமிழ் ஆட்கள் கிடைக்கலை. அப்படியே கிடைச்சாலும் நம் ஆட்களைவெச்சு வேலை வாங்க முடியலை. அவங்க அப்படி இல்லை. மாடு மாதிரி உழைக்கிறாங்க. தேவை இல்லாமப் பேசுறது இல்ல. லீவு எடுக்குறது இல்ல. ஞாயிற்றுக்கிழமைகூட வேலை செய்றாங்க. நம்ம ஆளு ஒருத்தனுக்குக் கொடுக்குற சம்பளத்துல பாதியைக் கொடுத்து, அவன்கிட்ட ரெண்டு ஆளு வேலை வாங்கிடலாம்.'' - வெளி மாநிலத் தொழிலா ளர்களை வேலையில் அமர்த்த சென்னை முதலாளிகள் சொல்லும் பொதுவான நியாயம் இது. இது இங்கு மட்டும் இல்லை. வெளி நாடுகளில் இது சகஜம்.தமிழ் ஆட்கள் கிடைக்காமல் இல்லை. ஒரு தொழிலாளிக்கு என்று இருக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளையும் வேலை செய்வதற்கு ஏற்ற சூழலையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இன்றைய சென்னை முதலாளிகளுக்குத் தர விருப்பம் இல்லை. இந்தப் பிரச்னைக்கு மாற்றாகவே வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துகிறார்கள்.
அந்நிய நகரம்!
இந்தியாவில் வேலை தேடிப் பிற மாநிலங்களை நோக்கிச் செல்வோரின் முதல் தேர்வு இப்போது சென்னைதான். ஏனைய இந்திய நகரங்களைப்போல உள்ளூர்வாசிகள் தொந்தரவு தராதது இங்கு வேலைத் தேடி வருவோரை வசீகரிக்கிறது. ஆனால், இந்த நகரமோ, மக்களோ அவர்களுக்குப் பிடித்தமானவர்களாக இல்லை என்பதையும் உணர முடிகிறது.'எதிர்காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் இது ஒரு பெரிய சமூகப் பிரச்னையாக மாறும்'' சமூகவியலாளரும் கலை விமர்சகருமான தேனுகா. ''இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கிவிட்டால்? கொல்கத்தா ஓர் உதாரணம். கொல்கத்தாவை நீங்கள் எல்லாம் வங்காளிகளின் மாநகர மாக நினைத்துக்கொண்டு இருப்பீர்கள். உண்மை என்ன தெரியுமா? இந்தியாவி லேயே அதிகம் இந்தி பேசுபவர்கள் வாழும் நகரம் அது. இன்றைய கொல்கத்தாவின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு எல்லாம் இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது''
தளரும் பிடி!
உலகமயமாக்கல் பின்னணியில் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி என்பது உலக அளவிலான ஒரு பிரச்னை. உலகம் முழுவதும் இன்றைய தேதியில் 21.4 கோடித் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகக் கூடும். வளர்ந்த நாடுகள் பலவும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. அமெரிக்காவுக்கு மெக்ஸிகோகாரர்கள், இங்கிலாந்துக்கு ஆசியர்கள், பிரான்ஸுக்கு ஆப்பிரிக்கர்கள், ஜெர்மனிக்கு கிரேக்கர்கள் மற்றும் துருக்கி யர்கள் என்று எல்லா வளர்ந்த நாடுகளுமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. இடப் பெயர்ச்சியைத் தடுக்க தீவிர நட வடிக்கைகளையும் எடுக்கின்றன. ஆனால், இந்தியாவில் இது உள்நாட்டுப் பிரச்னை. கதம்பம் போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு நாட்டில் இந்தப் பிரச்னையை அணுகுவது சிக்கலானது. இப்போதைக்குத் தீர்வுகள் புலப்படவில்லை. ஆனால், பிரச்னை தெளி வாகத் தெரிகிறது...
தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை!
No comments:
Post a Comment