Monday, September 26, 2011

வழக்கு போட்டு வம்பில் சிக்கிய ஜாபர்

தி.மு.க. ஆட்சியில் தனி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்த முன்னாள் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட், இன்று சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறார். வீட்டு வசதி வாரிய த்தை ஏமாற்றி மோசடி செய்ததற்கான வழக்கில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் இருக்கிறார். தொலைபேசி ஒட்டுக் கேட்பு, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு, அனுமதியில்லாமல் வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து விருது பெற்றது என்று அடுத்தடுத்து இவர் மீது குவியும் புகார்களின் மீது விசாரணை நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அவராகவே தேடிக் கொண்ட சிக்கல் இன்று அவரை மேலும் சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.
04_1
மார்ச் 2010-ல், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு புகார் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகாரில், ‘‘53 தொலைபேசி எண்களைக் கு றிப்பிட்டு, இந்த எண்கள் அனைத்தும் ஜாபர்சேட் சார்பாக ஒரு தனியார் நிறுவனத்தால் ஒட்டுக் கேட்கப்ப டுகிறது. இதற்காக இந்த தனியார் நிறுவனத்துக்கு தமிழக காவல்துறையின் ரகசிய நிதியிலிருந்து நிதி ஒ துக்கப்படுகிறது, இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். பின்னாளில், அந்த 53 எண் களும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகளின் எண்கள் என்பது தெரிய வந்தது.

புகழேந்தி அளித்த இந்தப் புகாரினால், தனது புகழுக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும், 23 வருடங்கள் அப்பழுக்கற்ற பணியை காவல்துறையில் ஆற்றிய தம்மை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே புகழேந்தி இந்தப் புகாரை அனுப்பியிருப்பதாகவும், புகழேந்தி தனக்கு 50 லட்ச ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குதான் ஜாபர்சேட்டுக்கு சிக்கலை இழுத்துவிடப் போகிறது.

இந்த வழக்கில் ஜாபர்சேட் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு புகழேந்தி பதில் தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், “ஜாபர்சேட் காவல்துறையில் 23 வருடங்களாக அப்பழுக்கற்ற, புகழ்மிக்க பணியாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஜாபர் சேட் மீது, தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய நிலத்தை மோசடியாக வாங்கி, அதன் மூலம் லாபம் அடைந்து, கூட் டுச் சதி, ஏமாற்றுதல், தவறான நடத்தை ஆகிய குற்றங்களைப் புரிந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்துள்ள து. அவர் வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறது. இந்த வழக்கு அவர் கடந்த காலத்தில் உளவுத்துறைத் தலைவராக பணியாற்றிய காலத்தில் புரிந்த குற்றங்களுக்காகவே பதியப்பட்டிருக்கிறது. ஆகையால் இவர் அப்பழுக்கற்ற அதிகாரி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், ஒரு அரசு ஊழியர் குற்றம் புரிந்திருக்கிறார் என்ற தகவல் தெரிந்ததும், உரிய அதிகாரியிடம் புகார் தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்தக் கடமையைச் செய்த என்னை உள்நோக்கத்தோடு மிரட்ட வேண்டும் என்ற காரணத்தால் ஜாபர்சேட் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந் திருக்கிறார். இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்து ரிமையைப் பறிக்கும் செயலாகும். .

மேலும் ஜாபர்சேட் ஊடகங்களுக்கு நான் எனது புகார் குறித்து பேட்டி அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந் தாலும், ஊடகங்கள் மீது வழக்கு ஏதும் தொடுக்காமல் என் மீது மட்டும் வழக்குத் தொடுத்திருப்பது, என் னை மிரட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாகத்தான். சட்ட விரோதமாக முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற தகவல், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரானதாகும். ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே நான் புகார் அளித்தேன்.
pugalenthi_340
மேலும், இந்தப் புகாரை நான் அளித்தவுடன், எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஜாபர் சேட், அந்த நோட்டீஸில், நான் அனுப்பிய புகார் காரணமாக அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக தனக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும், குறிப்பிட்டிருந்தார். 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியவர், 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டுள்ளது என்ன காரணத்துக்காக என்று புரியவில்லை.

இது போன்ற கருத்துரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள ஜாபர் தொடுத்துள்ள இந்த வழக்கு உள்நோக்கம் கொண்டது. ஆகவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பதை நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்தோம்.

‘‘ஒருவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கும் ஒருவர் தனக்கு எவ்வாறு மான நஷ்டம் ஏற்பட்டது என் பதை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். அப்போது, தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சாட்சிகளையும் ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த சாட் சிகளையும், ஆதாரங்களையும், குற்றம் சாட்டப்பட்டவர் குறுக்கு விசாரணை செய்வார். மேலும், தான் அளித்த புகார் மானநஷ்டம் ஏற்படுத்துவதற்காக அனுப்பப்பட்டதில்லை என்பதற்கு ஆதாரமாக அவரும் சாட்சியங்களை ஆஜர்படுத்துவார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஜாபர் சேட்டை புகழேந்தி தரப்பு குறுக்கு விசாரணை செய்யும். அப்போது, ஜாபர்சேட் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள வழக்கு குறித்தும், வீட்டு வசதி வாரியத்தின் நிலத் தினை முதலில் தன் பெயருக்கும், பிறகு தனது மகள் பெயருக்கும், பிறகு தனது மனைவி பெயருக்கும் எப்படி குறுகிய காலத்தில் ஒதுக்கீடு பெற்றார் என்பது குறித்தும் விசாரிக்கப்படும். ரகசிய நிதி எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஜாபர்சேட் உளவுத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் அது எப்படி செலவு செய்யப்பட்டது, அந்த நிதிக்கு ஏதாவது ஆடிட் செய்யப்பட்டிருக்கிறதா, தொலைபேசி ஒட்டுக் கேட்பு உள் துறைச் செயலாளர் அனுமதியோடுதான் செய்யப்பட்டதா, அல்லது அனுமதி இல்லாமல் செய்யப்பட்டதா என்பது போன்ற விவகாரங்களில் கேள்வி எழுப்ப வாய்ப்பு உண்டு’’ என்கிறார்கள்.
Jaffer-cut-out.jpg.crop_display
மேலும், புகழேந்தி தரப்பு, தான் கொடுத்த புகாரின் மீது உள்துறைச் செயலாளர் என்ன நடவடிக்கை எடுத் தார் என்பதை விசாரிப்பதற்காக, முந்தைய உள்துறைச் செயலாளர் மாலதியையும் சாட்சியாக விசாரிக்க வாய்ப்பு உண்டு என்றும் தெரிகிறது. ஜாபர்சேட் மீது அனுப்பப்பட்ட புகாரின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடாமல், அந்தப் புகாரின் மீது கருத்துக் கூறுமாறு ஜாபர்சேட்டுக்கே மாலதி ஏன் அனுப்பினார் என் பது போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கலாம். ஜாபர்சேட் மீதான புகார் குறித்த ஃபைலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த வழக்கு குறித்து புகழேந்தியிடம் பேசிய போது, “வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது குறித்து கருத்து எதுவும் கூற முடியாது” என்று மறுத்து விட்டார்.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

No comments:

Post a Comment