1. ''எப்பண்ணா கட்சி தொடங்கப் போறீங்க?'
''அவசரப்படாதீங்கண்ணா!''
''அது அவரோட தனிப்பட்ட முடிவு!''
3. ''உங்கள் ரசிகர்கள் இன்று மக்கள் இயக்கத் தொண்டர்கள்... என்ன வித்தியாசத்தை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்?''
''தோரணம் கட்டுறது, போஸ்டர் ஒட்டுறதுன்னு என் படம் ரிலீஸாகும்போது சந்தோஷப்பட்டுக்கிறவங்க என் ரசிகர்கள். அப்பவே நான் அவங்க கிட்ட ஒரே ஒரு விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருப்பேன்.
'முதல்ல உங்க அம்மா, அப்பா, குடும்பத்தைக் கவனிங்க. உங்க வேலை யைக் கவனமா செய்யுங்க. ரசிகர் மன்றப் பணிகளை அப்புறம் நேரம் இருக் குறப்ப பார்த்துக்கலாம்’னு கட்டாயப் படுத்திட்டே இருப்பேன். அவங்க எப்பவும் 'ரசிகன்’னு ஒரு அடையாளத் தோடு, அதே நிலைமையில் தேங்கிடணும் என்பதில் எனக்கு எப்பவும் உடன்பாடு இல்லை.
இப்போ எங்க ரசிகர் மன்றம், 'மக்கள் இயக்க’மாக ஒரு வடிவம் எடுத்துருச்சு. இப்போ எந்தச் சின்ன காரியத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் யோசிச்சு தான் செயல்படுறாங்க. ஊருக்கு ஒரு பிரச்னைன்னா, அதுக்குக் குரல் கொடுக்க முன்னாடி நிக்கிறாங்க. அந்த அளவுக்கு அவங்க பார்வை விரிவு அடைஞ்சு இருக்கு.
என் ரசிகர்கள் அவங்களை அறியாமல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துட்டு இருக்காங்க. அதை ரொம்ப சீக்கிரமே அவர்களும் உணர்வார்கள்!''
4. ''நடிப்பில் உங்களுக்குப் போட்டி யார்?''
''மக்கள் மனசைச் சந்தோஷப் படுத்தி, ஓஹோன்னு ஓடி ஜெயிக்கிற ஒவ்வொரு படமும் எனக்குப் போட்டி தாங்ணா. ஆனா, இது ஆரோக்கியமான போட்டி!''
5. ''மனம்விட்டு அழுத சம்பவம்?''
எனக்கு அழுகை பிடிக்காது. அதுவும் அழுறவங்களைப் பிடிக்கவே பிடிக்காது. என்னோட லைஃப்ல ஒரே ஒரு முறைதான் அழுதேன். அது என் அன்புத் தங்கச்சி வித்யா, சின்ன வயதில் இறந்தப்போ!''
6. ''விழுந்து விழுந்து சிரிக்கவெச்ச சினிமா?''
''இப்போ, 'பாஸ் (எ) பாஸ்கரன்’. சிரிச்சுச் சிரிச்சு வயிறே புண்ணாச்சு. 'அவனவன் பத்துப் பதினஞ்சு ஃப்ரெண்டுகளை வெச்சிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கான். ஆனா, ஒரே ஒரு ஃப்ரெண்டை வெச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே... அய்யய்யய்யய்யோவ்’னு சந்தானம் புலம்புற டயலாக்கை ரசிச்சுப் பார்த்தேன்!''
7. ''நீங்கள் முதல்வரானால், கையெழுத்துப் போடும் முதல் உத்தரவு?''
''இதுபோல எடக்கு மடக்காக் கேள்வி கேட்கிற வங்களுக்கு, ஆறு மாசம் ஜெயில் என்கிற உத்தர வில் கையெழுத்துப் போடுவேன்!''
8. ''நேரில் சீரியஸ்... திரையில் மட்டும் காமெடிக் காட்சிகளில் அசத்துறீங்களே... எப்படிங்ணா?''
''எப்பவுமே காமெடின்னா ரொம்பப் பிடிக்கும். ஜாலியா, கலகலன்னு பேசுற கேரக்டர்களை ரொம்ப ரசிப்பேன். நான் படிக்கிற காலத்துல இருந்து இப்போ வரைக்கும் எப்பவுமே என்னைச் சுத்தி ஜாலியாப் பேசுற நண்பர்கள் கூடவே இருக்காங்க. நண்பர்களோடு மனம்விட்டுப் பேசிச் சிரிச்சா, மனசுல இருக்குற பாரம் எல்லாம் அப்பிடியே ஐஸ் கட்டி மாதிரி கரைஞ்சு லேசாகிடும். என்னை மாதிரியே மக்களும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்காகத் தான் என்னோட படத்தில் காமெடி ஸீன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 'வேலாயுதம்’ பாருங்க... விளையாடி இருக்கோம்!''
9. ''வில்லன் வேஷத்தில் விஜய்யைப் பார்க்க ஆசை?''
''ஏற்கெனவே 'பிரியமுடன்’ படம் நடிச்சேனே? அந்தப் படத்தைப் பார்த்த எங்க அம்மா 'இனிமேல் இந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காதப்பா’னு சொன் னாங்க. அதுக்கு அப்புறமும் நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் தேடி வந்துச்சு. அம்மாவோட அன்புக் காக நடிக்காமத் தவிர்த்துட்டேன். ஆனாலும் செந்தில்... நீங்க ஆசைப்படுற மாதிரி எனக்கும், வில்லன் வேஷத்து மேல ஆசை இருக்கு!''
10. ''அவுட்டோர் படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போது என்ன செய்வீர்கள்?''
''கிராமங்களுக்கு கார்ல போறப்ப, வழியில் இருக்கும் பாலங்கள், அணைக்கட்டுகள், ஏரி, குளம்னு எல்லாத்தையும் ஒண்ணுவிடாமப் பார்த்துக் கிட்டே போவேன். மனசுக்குப் பிடிச்ச இடத்தில் இறங்கி நின்னா... ஆசையா ஓடி வர்ற மக்களிடம் பேசுறது வழக்கம். அப்போ, 'இந்தப் பாலத்தை காமராஜர் கட்டினார்... காமராஜர் இல்லேன்னா, இந்த அணைக்கட்டு வந்து இருக்காது’னு அவரை வாயார, மனசார வாழ்த்துவாங்க.
இன்னிக்கு இருக்குற மாதிரி ஹைடெக் வளர்ச்சி அப்போ கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில, விவசாயத்துக்காக அய்யா காமராஜர் செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்தால்... ஆச்சர்யமா இருக்கும். எல்லோரும் பாராட்டுற மாதிரி காமராஜர்... ஒரு கர்ம வீரர் மட்டும் இல்லே... விவசாய விஞ்ஞானியும்தான்!''
இன்னிக்கு இருக்குற மாதிரி ஹைடெக் வளர்ச்சி அப்போ கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில, விவசாயத்துக்காக அய்யா காமராஜர் செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்தால்... ஆச்சர்யமா இருக்கும். எல்லோரும் பாராட்டுற மாதிரி காமராஜர்... ஒரு கர்ம வீரர் மட்டும் இல்லே... விவசாய விஞ்ஞானியும்தான்!''
11. ''உங்க மானசீக குரு யார்?''
''என்னோட அப்பா!''
12. ''நடிப்பில் பொறாமைப்படவைக்கும் நடிகர்கள் யார்... யார்?''
''உலக நாயகன் கமல் சார்தான்!''
- அடுத்த வாரம்...
'' 'காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?''
''வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?''
''அமோக வெற்றி பெற்ற அம்மாவைச் சந்தித்த அனுபவம்பற்றி?''
No comments:
Post a Comment