Tuesday, September 25, 2012

கறிவேப்பிலைக் கட்டு 100 ரூபா! வதைக்க வரும் சில்லறை வர்த்தகம்!


நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு விவகாரத்தில் கரி பூசிக்கொண்ட மன்மோகன் சிங்கின் அரசியல் கௌரவம், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கும் பிரச்னையால் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பைச் சம்பாதித்து இருக்கிறது! 
சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு சமீபத்தில் அனுமதி வழங்கியிருக்கிறது மன்மோகன் தலை மையிலான மத்திய அரசு. இதை, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் சிலவும் மிகக்கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்நிய முதலீட்டு முடிவை தங்கள் சந்தையினுள் ஏற்றுக்கொள்வது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் என்று மத்திய அரசு மழுப்பி இருப்பதை மக்கள் நம்புவதாக இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் விளையும் ஆபத்துகள் பற்றி வர்த்தக சங்கங்கள், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.
''சில்லறை வணிகத்தில்தான் என்று இல்லை... ஒட்டுமொத்தமாகவே நம்ம நாட்டின் வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கவே கூடாது. இந்திய சாஃப்ட் டிரிங்ஸ் மார்க்கெட்ல 95 சதவிகிதத்தைக் கையில் வச்சிருப்பது கோகோ கோலா, பெப்சி கம்பெனிகள்தான். ஒரு காலத்தில் இங்கே சக்கைபோடு போட்டுவந்த கோலி சோடா, இஞ்சி சோடா, பன்னீர் சோடா எதுவும் இன்னைக்கு இல்லை.
நம்ம சில்லறை மார்க்கெட்ல வால்மார்ட் போன்ற அமெரிக்க முதலை கம்பெனிகள் நுழைஞ்சுதுன்னா, நம்ம மார்க்கெட் சின்னாபின்னமாகிப் போகும். சில்லறை சமாசாரம்னு இதை நினைக்கக் கூடாது'' என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த.வெள்ளையன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, ''சில்லறை வர்த்தகத்தை நம்பி தமிழகத்தில் 20 லட்சம் வியாபாரிகளும் அவங்களைச் சார்ந்து சுமார் ஒரு கோடி மக்களும் இருக்காங்க. 'இந்த முடிவை ஏற்றுக்கொள்வது அந்தந்த மாநிலங்களின் விருப்பம்’னு சொல்றதுல அர்த்தமே இல்லை. நம்ம மாநிலம் எதிர்த்து, பக்கத்தில் இருக்கிற கேரளாவும் ஆந்திராவும் இந்தத் திட்டத்தை ஆதரிச்சா, பலவிதமான குழப்பங்கள்தான் வரும். சில்லறை வர்த்தகத்தில் முதலீடு பண்ற அயல்நாட்டு கம்பெனிக்காரன் கறிவேப்பிலையில ஆரம்பிச்சு அத்தனை பொருட்களையும் விற்கிறதுக்கு வந்து நிற்பான். மார்க்கெட்டைப் பிடிக்கிறதுக்காக, தொடக்கத்துல மிகமிகக் குறைஞ்ச விலையில் பொருட்களைக் கொடுப்பான். அப்படிக் கொடுக்கிறதாலே எத்தனை கோடிகள் நஷ்டம் வந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை. உலகம் முழுக்க சில்லறை வர்த்தகத்துல பல லட்சம் கோடி லாபம் அடைஞ்சு இருக்காங்க வால்மார்ட் மாதிரியான கம்பெனிங்க. மக்களை மயக்கி மார்க்கெட்டை பிடிச்சுட்டாங்​கன்னா, அப்புறம் அவங்க வெச்சது தான் விலை. ஒரு கட்டு கறிவேப்பிலை 100 ரூபாய்னு சொன்னாலும் வாங்கித்தான் ஆகணும். நம்ம ஊர் அண்ணாச்சி கடையே இருக்காது. நஷ்டத்துல அத்தனை அண்ணாச்சி களும் கடையை இழுத்து மூடிட்டு ஓடியிருப்பாங்க. மார்க்கெட்டை பிடிச்சதும் விலையை ஏத்துறது மட்டுமில்லாம, செயற்கையான தட்டுப் பாட்டைக் கொண்டுவர்றதும் இந்த கம்பெனிங்களோட ட்ரிக். ஆயிரக்கணக்கான டன் பொருட் களை டேமேஜ் ஆகாமப் பாதுகாத்து வெக்கிறதுக்காக குடோன் வெச்சிருக்காங்க. வால்மார்ட் கம்பெனியோட குடோன்களோட நீளம் நூத்துக்கணக்கான கிலோ மீட்டர்களில் இருக்குதாம். இவங்க நம்ம மார்க்கெட்டைப் பிடிச்சா நிலைமை என்னவாகும்? கீரை விக்கும் பாட்டி, முறுக்கு சீடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பங்கள்னு அத்தனை பேரும் ஆண்டியாகி ரோட்டுல நிற்க வேண்டியதுதான். இதையெல்லாம் பற்றி கவலைப்படாம மத்திய அமைச்சர் நாராயணசாமி, 'இடைத்தரகர்களை இது ஒழிக்கும்’னு வியாபாரிகளை நக்கலடிச்சுப் பேசியிருக்கார். திட்டம் நடைமுறைக்கு வந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும், அப்போது இந்த நக்கல்களுக்குப் பதில் கிடைக்கும்'' என்று எச்சரித்தார்.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் முன்னாள் செயலாளரான பாலசுப்ரமணியன், ''சில்லறை வர்த்தகத்துல அந்நிய முதலீடு வர்றது மூலமா மிகக் கடுமையாகப் பாதிக்கப்படப்போவது நுகர்வோர்கள்தான். இன்னைக்கு அந்நிய முதலீட்டுக்காக கதவைத் திறந்துவிடுகிற அரசாங்கம் நாளைக்கு இவங்களோட விற்பனை உயர்வுக்காகச் சட்டத்தை வளைக்கிற அவலத்தையும் அரங்கேற்றும். இப்பவே அதுதானே நடக்குது. 'நாட் ஸ்டேண்டர்டு பேக்கிங்’னு ஒரு வாக்கி யத்தை சின்னதாப் போட்டுட்டு ஒரு கிலோ கொள்ளளவு உள்ள பேக்கிங்ல 750 கிராம், 800 கிராம்னு அளவைக் குறைச்சுவெச்சு, விலையை மட்டும் குறைக்காம பிசினஸ் பண்றாங்களே... இந்த ஏமாற்று வேலைக்கு அரசாங்கம் வளைஞ்சு கொடுக்கத்தானே செய் யுது? நம்ம நாட்டிலேயே பற்பசை, சோப் எல்லாம் தயாரிக்கிற கம்பெனிகள் பல இருந்தாலும்கூட, அந்நிய கம்பெனி களோட பொருட்கள் தான் செமத்தியா சேல்ஸ் ஆகுது. சில கோடிகளை அள்ளி வீசி தன் பொருளைக் கவர்ச்சியா விளம்பரம் பண்ணி பலப்பல கோடிகள் சம்பாதிக்கிறதுதான் இந்த கம்பெனிகளோட குணம். நம்ம மக்களுக்கும் ஃபாரின் மோகம் இருக் கிறது பெரிய துரதிர்ஷ்டம். 2020-ல் வல்லரசாகிவிடுவோம்னு நாம நம்பிட்டு இருக்க, இவங்களோ சோமாலியா ரேஞ்சுக்கு நம்மளைக் கொண்டுபோய் தள்ளிடுவாங்க போலிருக்கே?'' என்று பதறுகிறார்.
மக்கள் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டும் மத்திய அரசு!

No comments:

Post a Comment