Thursday, September 20, 2012

இங்க கனியும் கிடையாது.. மொழியும் கிடையாது! விழுப்புண் போட்ட விழுப்புரம்


ஸ்டாலின் தலைமையை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிட்டது விழுப்புரம் மாநாடு! 
தி.மு.க-வில் சாதாரணப் பொதுக் கூட்டம் நடந்தாலே, அதில் உள் கட்சி பாலிடிக்ஸ் தூள் கிளப்பும். விழுப்புரத்தில் கடந்த 15-ம் தேதி நடந்ததோ தலைமைக் கழகம் நடத்தும் முப்பெரும் விழா. உள்குத்துகளுக்குப் பஞ்சமே இல்லை.
'பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், தளபதி ஸ்டாலின் ஆகிய ஐவர் படம் தவிர வேறு யார் படமும் மாநாட்டு விளம்பரங்களில் வைக்கக் கூடாது’ என்று விழுப்புரம் மாவட்டச் செய லாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி வெளிப்படையாக அறிவித்து இருந்தார். 'அழகிரி, கனிமொழி ஆகியோர் படம் வைக்கக் கூடாது என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் பொன்முடி இப்படிச் சொன்னார்’ என்று விழுப்புரம் ஆட்களே சொன் னார்கள். இதைவிட முக்கியமாக, அழகிரிக்கும் கனிமொழிக்கும் முப்பெரும் விழாவுக்கான அழைப் பிதழ்கூட முறைப்படித் தரவில்லையாம். பொதுவாக அழகிரி இதுபோன்ற கூட்டங்கள், விழாக்களில் கலந்துகொள்வது இல்லை. ஆனால் கனிமொழி தனக்கு அழைப்பு வரும் என்று கடைசி வரை காத்திருந்தார். வரவில்லை.
விழுப்புரம் செல்லத் தயாரான கருணாநிதி, 'நீயும் வாம்மா’ என்று அழைக்க... 'என்னை யாருமே கூப்பிடலைப்பா.... நான் எப்படி வருவது?’ என்றா ராம். 'நான் தலைவர் கூப்பிடுறேன்... வாம்மா!’ என்று உரிமையோடு கருணாநிதி அழைக்கவே, கனிமொழி யால் தட்ட முடியவில்லை.
பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் படங்களைத் தவிர வேறு முகத்தையே விளம்பரங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.கே.செல்வநாயகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பில் மட்டும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோ ருடன் சேர்த்து கனிமொழியின் படமும் இருந்தது. அவர் 20 பேனர்கள் வைத்ததைக் கேள்விப்பட்ட பொன்முடி நேரில் பார்த்து மிரட்டினாராம். ''இங்க கனியும் கிடையாது மொழியும் கிடையாது'' என்று பொன்முடியுடன் சென்றவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் 14-ம் தேதி இரவு நடந்தது. மறுநாள் வழக்கறிஞர் செல்வநாயகம் வைத்த பேனர்களில் ஒன்றுகூட காணவில்லை. காந்தி சிலை அருகே ஒரு பேனரில், பேனர் வைத்தவரின் படம் மற்றும் பெயரை மட்டும் கிழித்து இருந்தனர். 'பொன்முடியின் உதவியாளர் செல்வராஜ்தான் மாவட்டத்தில் அதிக அதிகாரம் செலுத்துகிறார். அதனால் அவர் வைத்த பேனர் களை, அவரது எதிரிகள் முகத்தை மட்டும் சுரண்டி இருக்கிறார்கள்’ என்று விளக்கம் சொன் னார்கள் விழுப்புரம் உடன்பிறப்புகள்.
விழா வளாகத்துக்கு கனிமொழியுடன் கருணா நிதி வருவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. காலை நிகழ்ச்சியாக திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. அதனை முன் வரிசையில் இருந்து கருணாநிதி பார்க்க, அவருக்கு வலப்புறத்தில் ஒரு சேர் தள்ளி ஸ்டாலினும் இடப்புறத்தில் மூன்று சேர் தள்ளி கனிமொழியும் உட்கார்ந்தார்கள். ''பெரி யார், அண்ணாவின் ஒட்டுமொத்தக் குரல்தான் கருணாநிதியின் குரல். அதேபோன்று பெரியார், அண்ணா, கருணாநிதியின் ஒட்டுமொத்தக் குரல் யார் தெரியுமா?'' என்று கேட்டு, மு.க.ஸ்டாலின் குரலில் பேசினார் லியோனி. அவர் கடைசி வரை அழகிரி, கனிமொழியைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை!
மாலையில் விழுப்புரம் மாவட்ட அலுவலகக் கட்டடமான கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா சிலை திறப்பு விழாவை நடத்தினார் கருணாநிதி. அப்போது, 'தளபதி மன்றத்தின் சார்பாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது’ என்று பொன்முடி அறிவிக்க... பலருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், 'தனி மனிதர்களின் பெயரில் எந்த அமைப்பும் வைக்கக் கூடாது என்பது தலைமைக் கழகத்தின் உத்தரவு. அதனை மீறி விழுப்புரத்தில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, 'தளபதி மன்றம்’ நடத்தி வருகிறார். அதன் சார்பில் மாவட்டக் கட்சி அலுவலகத்தில் சிலை அமைத்திருக்கிறார். அந்த சிலையைத் தலைவர் திறந்திருக்கக் கூடாது’ என்று பலரும் வருந்தினார்கள்.
மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தை ஸ்டாலின், பொன்முடி ஆகிய இருவர் மட்டுமே முழுமையாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்கள். தன்னோடு கனிமொழியை மேடை ஏற்றி, சற்குணபாண்டியன் அருகில் ஒரு நாற்காலியைப் பிடித்துக் கொடுத்தது மட்டும்தான் கருணாநிதியின் ஒரே சாதனை. 'கருணா நிதிக்குத் தன்மானம் இருக்கிறதா?’ என்று சமீபத்தில் ஜெயலலிதா கேட்டதை, கடுமையாக விமர்சித்தார் கனிமொழி. அதையே ஸ்டாலின், அன்பழகன் ஆகியோர் வழிமொழிந்தனர்.
கருணாநிதி ஆரம்பித்ததே அமர்க்களம். ''இங்கே நான் இளைஞர்களின் எழுச்சியைக் காண்கிறேன். ஆகவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர் அணியினருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க இருக்கிறேன். இதைப் பற்றி பேராசிரியரிடம் பேசிவிட்டுத் தகவல் சொல்கிறேன். அதேபோல், பெண்களுக்கும் ஐந்து சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்'' என்றார்.
இளைஞர் எழுச்சியைப் பற்றி கருணாநிதி பேசத் தொடங்கியதும், ஸ்டாலின் பற்றி ஏதோ அறிவிக்கப் போகிறார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஸ்டாலின் பெயரைச் சொன்ன நேரத்தில் எல்லாம் அத்தனை வரவேற்பு இருந்தது. அதனைத் திசை திருப்பவே தேர்தலில் இடஒதுக்கீடு பற்றி அறிவிப்பு செய்து, தப்பிவிட்டார் கருணாநிதி.

No comments:

Post a Comment