Monday, September 17, 2012

கேள்விகளை அம்பலப்படுத்தியதா பனியன் டெக்னிக்? குரூப் 2 கிறுகிறு!


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் திடீர் திருப்பம்! 

இந்தத் தேர்வின் வினாத்தாள் கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் தயாரானதாம். அப்போது அங்கு வேலை செய்யும் ஒரு ஊழியர் டெக்னிக்கலாக ஒரு காரியம் செய்திருக்கிறார். கேள்வித்தாளை பிரின்ட் பண்ணும் மிஷின் திடீரென பழுதாகுமாம். அந்த நேரத்தில் வெளியே தள்ளப்படும் வேஸ்ட் பக்கங்களை யாருக்கும் தெரியாமல் தனது பனியனுக்குள் எடுத்து வைக்கும் அவர், அதனை வெளியே கொண்டுவந்துவிடுவாராம். அந்த அச்சகத்தில் பலத்த காவல் இருந்தும், இந்த பனியன் டெக்னிக்கை கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டது ஆச்சர்யம்தான். வெளியே வந்த ஊழியர் அங்கு காத்திருக்கும் ரகசிய ஏஜென்ட் ஒருவரிடம் வேஸ்ட் பக்கங்களை உடனே கைமாற்றிவிடுவாராம்.  இப்படியாக தேர்வில் முக்கால்வாசி கேள்விகளை அந்த ஊழியர், அடுத்த கட்ட நபருக்குப் பாஸ் செய்திருக்கிறார். இப்படியாக ரிலே ரேஸ் மாதிரிதான் கேள்வித் தாள் லீக் ஆகி இருக்கிறது.
இந்தத் தகவலை நம்மிடம் சொன்ன ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், அடுத்துச் சொன்னதும் அதிர்ச்சி ரகம்தான்!
கொல்கத்தா டு ஈரோடு... ரூட் போட்ட பாஸ்!
''இந்த ஒரு தேர்வு என்றில்லை. இதற்கு முன்பு நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் ஆகியவற்றின் கேள்வித் தாள்கள் எங்கே பிரின்ட் ஆகிறது என்பதை மோப்பம் பிடிப்பதில் கொல்கத்தாவைச் சேர்ந்த பானர்ஜி என்பவர் கில்லாடி. இவர் முழுப் பெயர் தெரியவில்லை. ரியல் எஸ்டேட், மத்திய, மாநில அரசுகளை ஆளும் அரசியல் தலைவர்களுடன் நெருக்கம், போலீஸுக்குத் தோழன் என்று இவருக்குப் பல முகங்கள் உண்டு. இவர்தான் கொல்கத்தா டு ஈரோடு வரை வினாத்தாள் லீக் ஆக ரூட் போட்டுக்கொடுத்த பாஸ்!
இந்தியாவில் எங்கே பிரின்ட் ஆனாலும், அங்கே பணியாற்றும் யாராவது ஒரு ஊழியரை முதலில் வளைப்பார் பானர்ஜி. அவர் மூலம் வினாத் தாளின் நகலைக் கைப்பற்றி இந்தியா முழுவதும் உள்ள ரகசிய நெட்வொர்க் ஏஜென்ட்களிடம் விற்றுவிடுவார். மேற்கு வங்காளம், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் பானர்ஜிக்கு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களில் மாநிலத் தலைமை ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். ரகசிய ஏஜென்ட்கள் சின்ன ஊர்களில் இருப்பார்கள். ஆசிரியர்கள், வினாத்தாள் லீக் ஆனதன் மூலம் அரசு வேலையில் அமர்ந்தவர்கள், டுடோரியல் கல்லூரிகள் நடத்து கிறவர்கள், அரசுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகளை நடத்தும் நபர்கள் ஆகியோர்தான் ரகசிய ஏஜென்ட்களாகச் செயல்படுகிறார்கள். இவர்கள்தான் குரூப் 2 வினாத் தாள் லீக் விவகாரத்தில் ஈடுபட்டு இப்போது சிக்கி இருக்கிறார்கள். பானர்ஜியை இன்னும் ஈரோடு போலீஸ் பிடிக்கவில்லை. அவரைப் பிடித்தால்தான், முழு நெட்வொர்க் தெரியவரும்'' என்றார் அந்த அதிகாரி.  
யார் அந்த கடலூர் பார்ட்டிகள்?
பொதுவாக அரசுத் தேர்வுகளில் வெற்றிபெறுபவர் களில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பல்வேறு சமூகக் காரணங்கள் இதற்கு உண்டு.  ஆனால், கடந்த சில வருடங்களில் அரசுப் பணியாளர் தேர்வுகள் மூலம் அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் லிஸ்டை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கிராஃப் போட்டுப் பார்த்தபோது, இந்த இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தேர்வுகளில் பாஸ் ஆகி அரசுப் பணியில் சேர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலான வர்கள்  ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள். இந்த விவரங்கள் இப்போது அம்பலத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.
இந்த ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு முந்தைய நாள் சுமார் 50 நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு வினாத் தாள்களை விநியோகித்துள்ளது ஒரு கும்பல். இந்தக் கும்பலில் ரவி, குரு இருவரும்தான் முக்கியமானவர்கள். ரயில்வேயில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் ராவ் மூலம் இவர்கள் இந்தத் தொழிலுக்கு வந்தார்கள். இந்தக் கடலூர் பார்ட்டிகளும் தற்போது போலீஸில் சிக்காமல் தலைமறைவாக இருக்கிறார்கள்.  
நூற்றுக்கு நூறு வாங்கிய மர்மம்!
கடலூரில் செயல்பட்ட வினாத்தாள் லீக் செய்யும் கும்பல்கள் பற்றி போலீஸுக்குத் தெரியவந்துள்ளது. அவர்களில் முக்கியமானவரான ரவி, இதற்கு முன்பு நடந்த குரூப் 2 தேர்வில் முறைகேடாகத் தேர்வாகி அரசுப் பணியில் உட்கார்ந்துவிட்டாராம். கோட்டை  என்று முடியும் ஊரில் மட்டும் சுமார் 50 பேர் ஒரே நேரத்தில் வி.ஏ.ஓ. தேர்வு எழுதி பாஸ் ஆகி பணியில் அமர்ந்தது அவர் உபயத்தில்தான் என்கிறார் கள். பொதுவாக வி.ஏ.ஓ. தேர்வுகளில் 200-க்கு 200 மார்க் வாங்குவது என்பது அரிதினும் அரிது. 2011-ம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ. தேர்வில் சுமார் 600 பேர் 200-க்கு 200 வாங்கி இருக்கிறார்கள். இதன் பின்ன ணியை விசாரிக்கச் சொல்லி டி.என்.பி.எஸ்.சி-க்குப் புகார்கள் பறந்திருக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை தொடர்புடைய ஜெயமான ஒருவரும் சிதம்பரம் அருகே  பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் வேலானவரும் இம்மாதிரியான ஏஜென்ட்களில் முக்கியமானவர்கள். இந்த இருவரில் ஜெயமானவர், 2010 மற்றும் 2012-ம் வருடங்களில் நடந்த குரூப் 2 தேர்வுகள், வி.ஏ.ஓ. என்று அனைத் திலும் தேர்வாகி சாதனை படைத்துவிட்டு, இதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு பசை உள்ள துறையில் போய் உட்கார்ந்துவிட்டாராம். இவரை 2011-ல் போலீஸ் பிடித்து விசாரிக்க... பல லட்ச ரூபாயைத் தட்சணையாகக் கொடுத்துத் தப்பித் தாராம்.
இந்த விவகாரத்தில் தோண்டத் தோண்ட இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவரப் போகின்றனவோ?

No comments:

Post a Comment