Thursday, September 6, 2012

நவீன வசந்த மாளிகையான கிரானைட் சுரங்கம். (பிரமிப்பூட்டும் படங்களுடன்)




'கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?’ என்பது பழைய பாட்டு. ஆனால், மதுரையில் எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் கிரானைட்களாக இருந்திருக்கின்றன என்பதை இந்தப் படங்களைப் பார்க்கும் போது நீங்களே உணர முடியும்!
பி.ஆர்.பி-யின் கிரானைட் சுரங்கத்துக்குள் போலீஸுடன் சேர்ந்து நம்முடைய கேமராவும் நுழைந்தது. வெளிநாட்டு 'பையர்’களைச் சுண்டி இழுப்பதற்காக, மதுரையை அடுத்த தெற்குத்தெரு யூனிட்டில் பிரமாண்டமான  டிஸ்பிளே வளாகம் ஒன்றை பி.ஆர்.பி. அமைத்திருக்கிறார். மரங்களால் 'செட்’ போட்டு உள்ளுக்குள் கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டுள்ள இந்த நவீன வசந்த மாளிகைக்குள் கடந்தவாரம் கால் பதித்த போலீஸாரும் மீடியாகாரர்களும் பிரமித்தே விட்டனார். முழுக்க, முழுக்கக் குளிரூட்டப்பட்ட இந்தப் பூலோக சொர்க்கத்தில், இத்தாலி தொழில்நுட்பத்தைக் கொண்டு கிரானைட் கற்களை தாங்கள் நினைத்த வடிவில் எல்லாம் செதுக்கி இருக்கிறார்கள். இங்குள்ள கிரானைட் பொக்கிஷங்களைக் கணக்கு எடுத்தாலே கோடிகளின் எண்ணிக்கை கண்ணைக் கட்டும் என்கிறார்கள் கிரானைட் தொழிலில் இருப்பவர்கள்!

No comments:

Post a Comment