டி.வி., நடிகர் டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர் டிங்கு. கமல்ஹாசனுடன் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மனைவி சுப்ரியா. இவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. டிங்குவின் அக்காள் சோனியா. இவர் சினிமா நடிகை, டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் போஸ் வெங்கட். சீரியல்களில் நடித்து சினிமாவிலும் தலை காட்டியவர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிங்குவின் மனைவி சுப்ரியா, தனது கணவர் தனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ததாகவும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் இதற்கு டிங்குவின் அம்மா மற்றும் அவரது அக்காவும், நடிகையுமான சோனியாவும் உடந்தை என்று தமது புகாரில் கூறியிருந்தார். சுப்ரியாவின் புகாரையடுத்து நடிகர் டிங்கு, கோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி தனது மனைவி சுப்ரியா கூறுவதில் உண்மையில்லை என்றும் தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாகன வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் சுப்ரியாவின் புகாரின்பேரில், டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை பிடித்து, விசாரிக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் கவிதாவோ தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து கவிதாவைக் கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்
|
No comments:
Post a Comment