Monday, October 24, 2011

பத்தாவதுக்குப் பிறகு பி.ஈ. படிக்கலாம்!


பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்துகிற ஆன்லைன் மூலமான தொழில் நுட்பப் போட்டித் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் தங்களின் திறன் மேம்பாட்டுக்காக, பங்கேற்பது வழக்கம். அது போன்ற போட்டித் தேர்வுகளில் ஒன்றுதான், (Oracle 11G) ஆரக்கிள் லெவன்ஜி. இதில் விக்னேஷ்வரன் என்கிற 13 வயது திருநெல்வேலி சிறுவன் எண்பத்து மூன்று சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான். இவன் பாளையங்கோட்டை ஜெயேந்திரர் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன்.அப்பா கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலியில் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையின் ஆய்வாளர்; அம்மா ரேவதி, மானூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் ஆசிரியை. இவர்களின் ஒரே மகன் தான் விக்னேஷ்வரன்.ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாளை, பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தான். அங்கு மூன்றாம் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கிளாஸில், பேஸிக் கற்றுத் தந்தனர். அப்போதே கம்ப்யூட்டரில் படம் வரைந்து, அதில் படிப்படியாக வளர்ச்சி பெற்றான். இயல்பாகவே அவனுக்குக் கணிதம் நன்றாக வரும். அம்மா - அப்பா நாங்கள் இருவருமே கம்ப்யூட்டர் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள். மிகச் சின்ன வயதில் அவன் கம்ப்யூட்டரை ஹேண்டில் பண்ணுவதைப் பார்த்தே, அவனது தனித் திறமையினை அடையாளம் கண்டோம்!" என்கிறார் ரேவதி.


ஆறாம் வகுப்பிலிருந்து, பாளையங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் அவனைச் சேர்த்து விட்டோம். அங்கு படிக்கும்போதே விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் வகுப்புகளுக்குச் சென்று வந்தான். வீட்டில் சிஸ்டத்தில் அமர்ந்தும் ஏதேனும் ஒன்று செய்துகொண்டே இருப்பான். பவர் பாயண்ட்டில் ஸ்லைடு சிஸ்டமாக படங்களை உருவாக்குதல், இயக்குதல், ஒலி எழுப்புதல், அதில் பல மாயாஜாலங்களைச் செய்தல் என கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடுவான். ஏழாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு விடுமுறையில், அவனை பாளையங்கோட்டை Tandem Instituteடின் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்தோம். அதன் இயக்குநர் சுந்தர பாண்டியன், எங்கள் மகனிடமிருக்கும் தனித் திறமையைச் சட்டென அடையாளம் கண்டு கொண்டார். அவரது பயிற்சி மற்றும் வழி காட்டுதல் அடிப்படையிலே விக்னேஷ்வரன், ஆன்லைன் வாயிலான தொழில் நுட்பப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றான்!" என்கிறார் கிருஷ்ண மூர்த்தி.இந்தத் தேர்வில் வெற்றி பெற கடுமையான உழைப்புடன் புத்திசாலித்தனமும் தேவை. விக்னேஷ்வரன் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் நேரடியாக பி.ஈ. அல்லது பி.டெக்., படிப்பில் சேரலாம்!"என்கிறார் பயிற்சியாளர் சுந்தர பாண்டியன்.

டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் Oracle OCP ஆன்லைன் போட்டித் தேர்வு எழுத இருக்கிறேன். CISCO சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்த விருக்கிற CPNA ஆன்லைன் போட்டித் தேர்வில் கலந்துக்கணும்!" எனக் கூறும் சாதனைச் சிறுவன் விக்னேஷ்வரனிடம், மென்பொருள் துறையில் உங்கள் லட்சியம் என்ன?" என்று கேட்டால், டாடா பேஸ் (Data Base) சிஸ்டத்தினை Highly Secure பண்ற அளவுக்கு மென்பொருள் புதிதாக உருவாக்க வேண்டும்" என்கிறார்.

No comments:

Post a Comment