Friday, October 21, 2011

அதிமுக மேயர் வேட்பாளர் துரைசாமி வெற்றிமுகம்!

சென்னை,அக்.21,2011

சென்னை மாநகராட்சி தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி முன்னிலை வகிக்கிறார்.

சென்னை மேயராக சைதை துரைசாமி தேர்ந்தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி, அவர் 2,97,678 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் 1,76,598 வாக்குகளுடன் பின்னடைவு கண்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரைவத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, சொற்ப வாக்குகளில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment