Wednesday, October 12, 2011

வாஷிங்டன் DC போராட்டம்

2வது வாரமாகத் தொடருகிறது!


அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் துவங்கிய, “வால் தெரு ஆக்கிரமிப்பு’ போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், வாஷிங் டனில், இரண்டாவது வாரமாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இப்போராட்டங்களை, “அமெரிக்காவின் வசந்தம்’ என விமர்சித்துள்ளது ஈரான். அமெரிக்காவின் நிதி மேலாண்மையில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் வரம்பு கடந்து இயங்குவதை எதிர்த்து, கடந்த ஒரு மாத கால மாக,”வால் தெரு ஆக்கிர மிப்பு இயக்கம்’ தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

நியூயார்க்கில் துவங் கிய இந்த ஆர்ப்பாட்டம், தலைநகர் வாஷிங்டனை யும் விட்டு வைக்க வில்லை. அந்நகரின் கே தெருவில் உள்ள மெக் பெர்சன் சதுக்கத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த இரு வாரங்களாக, கூடாரங்கள் போட்டு தங்கியுள்ளனர்; தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

வெள்ளை மாளிகை அரு கில் உள்ள விடுதலைக் கட்டடத்தை நோக்கி, நேற்று முன்தினம் நூற் றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வாஷிங் டனின் வடபகுதியில் உள்ள மால்கம் எக்ஸ் பூங்கா விலும், அதேபோன்ற பேரணி நடந்தது.

இதில் பங்கேற்ற பென்சில்வேனியா மாகா ணத்தைச் சேர்ந்த லனா பெர்ரி கூறுகையில், “இந் நாட்டில் பலர் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல் உள் ளனர். நான் மூன்றாவது உலகத்தில் வாழ விரும்ப வில்லை. எங்களுக்கு மிகப் பெரிய நிறுவனங் கள் தேவையில்லை.

வேலை மட்டுமே தேவை’ என்றார். வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தைப் பார்த்து உத்வேகம் கொண்டதால் தான், தாங்களும் களத்தில் குதித்துள்ளதாக, “வாஷிங்டன் டி.சி., ஆக்கி ரமிப்பு இயக்க’ இணைய தளம் தெரிவித்துள்ளது.

தற்போது இது போன்ற போராட்டங் கள், நாட்டின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகின்றன. நாட் டின் நிதிக் கையாள்கை யில் உள்ள பிரச்னை தான், இப்போராட்டங் களுக்குக் காரணம் என, அதிபர் ஒபாமா முன்பு அளித்த பேட்டியில் ஒப் புக் கொண்டுள்ளார். நியூ யார்க் நகர மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க்,

“வேலை யில்லா திண்டாட்டமே இதற்குக் காரணம்’ என் றார். இந்நிலையில், ஈரா னின் புரட்சிப் படைத் தளபதி மசூத் ஜஜாயேரி இதுபற்றி கூறுகையில், “நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஒபாமா தவறி யதால் உருவாகியுள்ள இப்போராட்டம் விரை வில், அரசியல் மற்றும் சமூகப் போராட்டமாக மாறும். அமெரிக்க ஊழ லுக்கு எதிரான இப் போராட்டத்தின் முடி வில், மேற்கத்திய முதலா ளித்துவம் வீழும். இது அமெரிக்க வசந்தத்தின் துவக்கம்’ என்று கூறியுள்ளார்.

அரபு நாடுகளில் நடந்த புரட்சிகள் “அரபு வசந்தம்’ என அழைக் கப்படுகின்றன. அரபு வசந் தம் குறித்து முன்பு கருத் துக் கூறிய ஈரான் அதிபர் அகமதி நிஜாத், விரைவில் அமெரிக்காவிலும் இது போன்ற போராட்டங்கள் நிகழும் என கூறியிருந் தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கப் போராட்டங்களில் தற்போது தொழிலாளர் அமைப்புகள், பல்கலைக் கழக மாணவர் அமைப் புகள், சமூக குழுக்கள், வேலையில்லாதவர்கள் என, அனைவரும் ஈடு பட்டுள்ளனர். இப்போராட் டத்திற்கு ஏழை, பணக் கார வித்தியாசம் அதி கரிப்பு, மோசமான நிதி மேலாண்மை, வேலை யில்லா திண்டாட்டம் அதிகரிப்பு உள்ளிட்டவை தான் காரணம் என, நிபு ணர்கள் கருதுகின்றனர்
.

No comments:

Post a Comment