Monday, October 24, 2011

விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் திட்டம் - நாசா

தற்பொழுது பல நாடுகளும் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவி பல செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளிக்கு மனிதனை ஏற்றி சென்று பின் திரும்ப கொண்டு வரும் விண்கலங்களை தயாரித்து இருக்கிறது. ஆனால் இப்படி ஏவப்படும் விண்கலங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை மட்டும் செல்லும் சக்தி படைத்தவை. ஏன் எனில் அவைகள் பயணிக்கும் தூரத்திற்கு ( போக , வர ) தேவையான எரிபொருளின் அளவை பொருத்து அந்த விண்கலத்தின் எடையும் அதிகரிக்கும் . இந்த குறைபாட்டை நிவிர்த்தி செய்தால் தான் இன்னும் பல மடங்கு தூரத்திற்கு ( செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு ) மனிதனை அனுப்ப முடியும் என்று நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் யோசித்ததின் விளைவு தான் இந்த விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் திட்டம்






நடுவானில் எரிபொருள் நிரப்ப பயன்படும் இந்த கொள்கலனை நாசா Propellant depots என்று அழைக்கிறது. இதன் மூலம் பூமியின் சுற்று பாதைக்கு வெளியில் எரிபொருள் நிரப்பும் வசதி கிடைப்பதால் , தொலை தூரத்திற்கு மனிதனை அனுப்ப முடியும் என்று நாசா திட்டமாய் எண்ணுகிறது. கடந்த ஆறு மாதங்களாக இந்த திட்டத்தை குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அடுத்த மாதம் கூடி இதை முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.

2030 ம் வருடம் வரை இந்த திட்டம் செயல்பட சாத்தியம் இல்லை என்ற போதிலும் 2012 ம் வருடத்தில் இருந்து 2030 ம் வருடம் வரை 60 பில்லியன் டாலரில் இருந்து 80 பில்லியன் டாலர் வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரி எரிபொருளை ( நீர்ம ஆக்சிஜென் மற்றும் நீர்ம நைட்ரஜென் ) விண்வெளியில் கொள்கலனில் பாதுகாப்பது மிகவும் எளிதான காரியம் அல்ல . ஏன் எனில் இந்த எரிபொருட்கள் குளிர்ந்த சூழலில் தான் பாதுகாக்கப்பட வேண்டும் . ஆனாலும் ஆராய்சியின் முடிவுகளும் , முயற்சிகளும் என்ன தான் சொல்லுகிறது என்பதை நாம் பொறுத்திருந்து காண்போமே ...

No comments:

Post a Comment