Tuesday, October 11, 2011

அமெரிக்காவின் 2 வல்லுனர்களுக்கு பொருளாதார நோபல்!


அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் எஸ்.சர்ஜென்ட், கிறிஸ்டோஃபர் ஏ.சிம்ஸ் ஆகிய இரு வல்லுனர்களுக்கு 2011-ம் ஆண்டின் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்ட நோபல் கமிட்டி, மேக்ரோ எகானமியின் காரணிகள் மற்றும் விளைவுகள் குறித்து மேற்கொண்ட மகத்தான ஆய்வுக்காக இவ்விருவரும் பொருளாதார நோபலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பொருளாதார வல்லுனர் தாமஸ் எஸ்.சர்ஜென்ட், நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியாக உள்ளார். கிறிஸ்டோஃபர் ஏ.சிம்ஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகள் போன்ற வெவ்வேறு பொருளாதாரக் காரணிகளுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இவ்விரு வல்லுனர்களும் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment