செல்வத்தில் திளைக்காத சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சாய்னா!
சாய்னாவின் பெற்றோரான ஹர்விர், உஷா ராணி இருவரும் பேட்மிண்டன் வீரர்கள் என்பதாலோ என்னவோ சாய்னாவுக்கும் அந்த விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது.
சாய்னாவின் பயிற்சிக்காக, மாதம் 12,000/ வரை செலவாக, ஆரம்பத்தில் எந்த ஸ்பான்ஸரும் இல்லாத நிலையில், ஆறு முறை பி.எஃப்லிருந்து பணம் பிடித்து அவரது வளர்ச்சியை ஹர்விர் ஊக்கப்படுத்தினார்.
இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததில், ஹர்விர் குடும்பத்தில் எல்லோருக்குமே வருத்தம் இருந்ததுதான். பின்னாளில் சாய்னாவின் பேட்மிண்டன் ஆர்வத்தைக் கண்டு கூடுதல் சந்தோஷம் அடைந்து அவரை தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தினர்.
2002 சாய்னாவுக்குத் திருப்புமுனை என்றே கூறலாம். 10வது வகுப்பையே தாண்டாத அந்த வயதிலேயே,அவரது திறமையான ஆட்டத்தைக் கண்டு யோனஸ் நிறுவனமும், டெக்கான் க்ரானிகல் நிறுவனமும் ஸ்பான்ஸர் செய்ய முன்வந்தன.
2006ல் காமன்வெல்த்தில் வெண்கலப் பதக்கம்.
அடுத்து பிலிப்பைன்ஸ்ஓபனை வென்றபோதுதான் பேட்மிண்டன் வட்டாரத்திலேயே யார் இந்த சாய்னா நேவால்என்ற வியப்பான பேச்சு எழுந்தது.
ஆந்திராவின் பொக்கிஷமாகக் கருதப்பட்டவர், அடுத்து நேஷனல் கேம்ஸில் தங்கம், அப்படியே பீஜிங் ஒலிம்பிக்ஸில் காலிறுதிப் பயணம் என தடாலடியாக ஒட்டுமொத்தஇந்தியாவையும் கவர்ந்திழுத்தார்.
ஆரம்பத்தில் அப்பாவின் பி.எஃப்-பைக் கரைத்துக் குடித்த சானாவின் வாழ்க்கை, பீஜிங் ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு அடியோடு மாறிவிட்டது. 2010ல், வருமான வரியாக ரூ. 60 லட்சத்தை செலுத்திய சானா, 2011ல் ஒன்றரைக் கோடி ரூபாயை வருமான வரியாகக் கட்டியிருக்கிறார்! (அவருடைய அக்கவுண்டட்டுக்கு மட்டும் ரூ 2.5 லட்சம் சம்பளம்) ஒரு விளம்பரத்துக்கு ஒரு கோடி ரூபாய் கிடைப்பதால் சானாவுக்கு இப்போது பணப்பிரச்னை கிடையாது.
2010ல், ஹரியானா முதல்வர் சாய்னாவுக்கு டிஎஸ்பி வேலையை அளிக்க முன்வந்தார். ஏற்கெனவே பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணி புரிவதால் காக்கி வேலையை மறுத்து விட்டார் சானா.
சாய்னாவால் மட்டும் எப்படி சீன வீரர்களை வெல்ல முடிகிறது? பயமில்லாமல் மோதி ஜெயிக்க முடிகிறது? இதற்கு சானாவின் அடிப்படை குணமும் ஒரு காரணம். சானா, யாரிடமாவது தோற்றுவிட்டால் உடனே அந்த வீரரை அடுத்த மேட்சில் தோற்கத்துடிப்பார். சீன வீரராக இருந்தாலும் கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்தான். இதேபோல இன்னொரு சானா நேவால் உருவாக வாய்ப்புண்டா என்றால் அதிர்ச்சியான பதிலை அளிக்கிறார். வாய்ப்பில்லை. என்னைப் போல கடினமாக உழைக்க யாரும் தயாராக இல்லை. என்னால் நாள் முழுக்கப் பயிற்சி எடுக்க முடியும். ஆனால், இப்போதுள்ள வீரர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு யாரும் மெனக்கெடுவதில்லை!" என்கிறார்.
பொதுவாக, விளையாட்டுத் துறையிலுள்ள பெண்கள், ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவிடுவார்கள். ஆனால், சானா வேறு ரகம். யாரையும் எதிர்த்துப் பேட்டி கொடுக்க மாட்டார். கவர்ச்சியாக உடையணிந்து பத்திரிகைகளுக்குத் தீனி போடமாட்டார். அவரது வெற்றிகளைத் தவிர வேறு எந்தச் செய்திகளுமே வெளியே வந்தது கிடையாது.
சாய்னாவைப் பற்றி 'Saina Nehwal: An Inspirational Biography' என்று ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சானா நேவால் பற்றி ஆந்திர மாநிலத்தின் ஆரம்பப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஒரு பாடம் வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment