ஒருமுறை திருப்பதி சென்றுவிட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும்வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன்மடத்துக்கு சென்றோம். அன்று வெள்ளிக்கிழமை. ஸ்வாமிகள் திருப்பதியில்பெருமாளுக்கு அபிஷேகம் எப்படி நடைபெற்றது என்று விசாரித்து விட்டுஎன்னுடைய வங்கி எப்படி ...இருக்கிறது என்றும் விசாரித்தார். அதுமுடிந்ததும் விடை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ஓரமாக நின்றோம்.மணி பகல் இரண்டாகி விட்டது. ஸ்வாமிகள் அந்த கணக்கர்இரண்டுபேரையும் போய் மடத்தில் சாப்பிடச் சொல்லு என்று மடத்து சிப்பந்திஸ்ரீ கண்டர் மூலமாக ஆணையிட்டார்.
நாங்களும் போய் உணவருந்திவிட்டு மறுபடியும் வந்து நின்றோம். எங்களைப்பார்த்ததும் ஸ்வாமிகள் இப்படியே இருங்கள் உங்களுக்கு ஒரு வேலைஇருக்கிறது என்றார்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்களைப் போன்றசாமனியர்களால் ஸ்வாமிகளுக்கு வேலை செய்ய முடியுமா?
அப்போது மடத்து சிப்பந்தி வந்து ஸ்வாமிகளிடம் ஸ்ரீரங்கம் ஜீயர்ஸ்வாமிகளிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். அந்தச் சமயம் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் ராஜகோபுரப் பணி நடந்து கொண்டு இருந்தது.ஸ்வாமிகளும் அதை உரக்கப் படிக்கும்படி அவரிடம் சொன்னார். அதில்கோபுரப் பணி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் இன்னும் எவ்வளவுபாக்கி இருக்கிறது என்றும் எழுதி இருந்தார்.
அப்போது ஸ்வாமிகள் அவரிடம் கொஞ்சம் நிறுத்து என்று கூறி விட்டுஎன்னைப் பார்த்து உன்னுடைய வேலை வரப்போகிறது என்றார். நான்ஒன்றும் புரியாமல் விழித்தேன்.அடுத்த வரிகளில் அந்தக்கடிதத்தில் ஸ்ரீ ஜீயர்ஸ்வாமிகள் கோபுரம் கட்டுவதற்கு நன் கொடை அளிக்கும் நிறுவனங்களுக்குவருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின்நிதி துறைக்கு அனுப்பபட்ட விண்ணப்பம் இன்னும் பரிந்துரை செய்யப்பட்டுஆர்டர் வந்து சேரவில்லை. ஆதலால் ஸ்வாமிகளின் உதவியை இந்தவிஷயத்தில் கோரி இருந்தார்.
உடனே ஸ்வாமிகள் என்னைப் பார்த்து நீதானே வங்கியின் வருமானவ்ரிகணக்கு வழக்குகளை கவனித்துகொண்டு இருக்கிறாய். உனக்குத்தான்டெல்லியில் மத்திய வருமானவரித்துறையின் குழுவின் தலைமையாளரைநன்றாகத்தெரியுமே. அவரிடம் சொல்லி சீக்கிரம் பர்மிஷன் வாங்கிக்கொடு. நல்ல காரியத்தில் பங்குகொண்ட பலனும் வரும் என்றார். அவருடைய பெரியநிலைக்கு கண்ணசைத்தால் நிதிமந்திரியே இதை செய்து முடித்திருந்திருப்பார்.இருந்தாலும் என்னைப்போல எளியவனிடம் இந்தப் பணியைக் கொடுத்ததுஎனக்கு அவர் செய்த அருள். அவர் சொன்னபடியே அப்போது CBDT சேர்மனாகஇருந்த டாக்டர். சிவஸ்வாமியிடம் அணுகி ஸ்வாமிகளின் விருப்பத்தைச்சொன்னதும் உடனே விலக்கு அளிக்கும் ஆர்டரை மத்திய கெஜட்டில் பதிவுசெய்துவிட்டார்.
கடிதம் வருவதற்கு முன்பே எப்படி எனக்கு வேலை வரப்போகிறது என்றும்,கடிதத்தின் பாதியில் படிக்காமலேயே நிறுத்தி எனக்குரிய பகுதி வரபோகிறதுஎன்று எப்படிச் சொன்னார். அவர்தான் முக்காலமும் உணர்ந்தமஹானாயிற்றே இது ஒரு பெரிய விஷயமா அவருக்கு?
கடிதம் வருவதற்கு முன்பே எப்படி எனக்கு வேலை வரப்போகிறது என்றும்,கடிதத்தின் பாதியில் படிக்காமலேயே நிறுத்தி எனக்குரிய பகுதி வரபோகிறதுஎன்று எப்படிச் சொன்னார். அவர்தான் முக்காலமும் உணர்ந்தமஹானாயிற்றே இது ஒரு பெரிய விஷயமா அவருக்கு?
No comments:
Post a Comment