மகா பெரியவா முன்னால் ஒரு நாள் காலையில் இளைஞன் ஒருவன்அழுதபடி நின்று கொண்டிருந்தான் பெரியவா கரிசனத்துடன் அவனைவிசரிதாதும் அவனது அழுகை மேலும் அதிகமாயிற்று. சற்று பொருத்துஅவன் தன்னை பற்றி மெதுவாகச் சொன்னான், படிப்பு முடிந்து இரண்டுவருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை வீட்டில் உள்ளவர்கள் ஏச்சும் பேச்சும் தாங்க முடியவில்லை, அப்பா எப்ப பாத்தாலும் என்னை "தண்டம் தண்டம்னு" குத்தி காட்டிண்டு இருக்கார் மனசுக்கு ரொம்பவேதனையா இருக்கு அதான் பெரியவா கிட்ட சொல்லி ஆசிர்வாதம்வாங்கிண்டு போலாம்னு வந்தேன் என்று கரகரத்த குரலில் சொன்னார் .
கருணையோடு பார்த்த மகா பெரியவா ஒரு பக்கமாக உட்காரச் சொன்னார் அன்றைய அனுஷ்டானங்களை முடிக்க வேண்டும் அல்லவா!
தொடர்ந்து தனது செங்கோலாக திகழும் தண்டம் என்று எல்லோராலும்அழைக்கப்படும் செங்கோலுடன் எல்லோருக்கும் காட்சி அளித்த வன்னம்அமர்ந்து இருந்தார்.
அப்பொழுது அரசுத்துறையில் உயர் பதவியில் இருந்த இன்ஜினியர் ஒருவர்பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அவரை பார்த்த மகான் புன்னகைத்தார் ,வந்திருந்த இன்ஜினியருக்கோ மனம் நிறைந்த உற்சாகம் , தான் கையில்இருந்த துரவர திருக்கோலை அவரிடம் காட்டி
இதற்க்கு பெயர் என்ன என்று கேட்டார் ?
இன்ஜினியர் "தண்டம் " என்றார் மிக பணிவாக
இதுக்கு உன்னால ஒரு வேலை போட்டு தரமுடியுமா என்று கேட்டார்மகான் பெரியவா சொல்லறது எனக்கு புரியலயே
மகான் தன் அருகில் எட்ட இருந்த இளைஞனை அழைத்து இவனுக்கு ஒருவேலை போட்டு குடுப்பியா?
என்ன இவனை வீட்டில் எல்லாரும் " தண்டம் தண்டம் " னே கூப்பிடராளாம்
பெரியவா உத்தரவு போட்ட போதாதா அதுக்காகத்தானே காத்துண்டுஇருக்கோம் என்றார் இன்ஜினியர் .
சரி ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சிடுத்து இனிமே இந்த தண்டத்துக்குவேலை இல்லைன்னு சொல்லிட்டு தன் கையிலிருந்த செங்கோலை சுவற்றின்பக்கம் சாய்த்து வைத்து விட்டு சொன்ன வார்த்தைகள் இவை
"தண்டம் தண்டம்னு" கரிச்சு கொட்டராளே அதுதான் எங்களுக்கும் ரக்க்ஷை ,ப்ரும்மச்சரிகளுக்கும் ரக்க்ஷை . ராஜதண்டத்துக்கு அடங்கித்தான்லோகத்லையே நீதி நியாயங்கள் இருந்தது. .
No comments:
Post a Comment