பிரசாத் பிரபல ஒளிப்பதிவாளரும் ஆவார். சிவக்குமார் நடித்த “ரோசாப்பூ ரவிக்கைகாரி”, “கவிக்குயில்”, “சிட்டுக்குருவி” உள்பட 70-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். “ரோசப்பூ ரவிக்கைகாரி” படத்தில் இவர் ஒளிப்பதிவில் இடம் பெற்ற “வெத்தலை வெத்தலை”, “உச்சி வகுந்தெடுத்து“ பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.
1972-ல் இப்படம் வெளியானது. பிரசாத்துக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். பிரசாத் உடல் அடையாறு வெங்கட்ரத்னம் நகரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும் ராஜீவ் பிரசாத் என்ற மகனும், மாலாராவ் என்ற மகளும் உள்ளனர்.
No comments:
Post a Comment