Friday, February 3, 2012

எது கள்ள நோட்டு - நாமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.!


ங்களிடம் 500 அல்லது 1,000 நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படி யானால் உங்களை போலீஸார் கைதுசெய்யும் வாய்ப்பு இருக்கிறது, தெரியுமா? பதற்றம் வேண்டாம் மக்களே... பாகிஸ்தானின் 'கிச்சன் பாலிடிக்ஸ்’ கார ணமாக இந்தியா எங்கும் பரவியிருக்கும் கள்ள நோட்டுகள் உங்கள் கைகளிலும் தவழ்ந்துகொண்டு இருக்கலாம். கள்ள நோட்டுவைத்து இருப்பதே தண்டனைக் குரிய குற்றம். பணப் பரிவர்த்தனைகளின் போது நீங்கள் கொடுக்கும் ரூபாய்கள் கள்ள நோட்டுக்களாக இருந்தால், உங்களை விசாரணைக்கு உட்படுத்தலாம். ஆகவே.... உஷார் மக்களே!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. 500 மற்றும் 1,000 இந்திய கரன்ஸிகளை கோடிக்கணக்கில் அச்சடித்து அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் மூலம் வங்கதேசம், நேபாளம் வழியாக வட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு பார்சல் அனுப்புகிறார்கள். அங்கு இருக்கும் முகவர்கள் மூலம் இந்தியா முழுக்க இந்த நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் தினமும் படையெடுக்கின்றனர். அவர்களை இங்கே வழிநடத்தும் முகவர்களைக் கள்ளநோட்டு லிங்க்கில் சேர்த்துவிடுகிறார்கள். அந்த முகவர்கள் கூலித் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் தொகையை முழுக்கவோ அல்லது சரிபாதி தொகையிலோ கள்ள நோட்டுகளைக் கலந்துவிடுகிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் மூலம் தென்னிந்தியா முழுக்க கள்ள நோட்டுகள் பரவுகின்றன. சமீபத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட மாநிலத் தொழிலாளர்கள் போலீஸில் சிக்கியபடியே இருக்கிறார்கள். அப்படிச் சிக்குபவர்களுள் பெரும்பாலானவர்கள் அப்பாவிகளே. அவர்கள் மூலம் கள்ள நோட்டு சூத்ரதாரிகளைக் கண்ணிவைத்துப் பிடிப்பது போலீஸாரின் வியூகம்.


அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... நம் பங்குக்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா? கொஞ்சமே கொஞ்சம் முனைந்தால் கள்ள நோட்டுகளை நாமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

'நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் பொதிந்து இருக்கின்றன. குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகளில் 13 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அசோகர் ஸ்தூபி, 500 என்ற எண், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்று இருக்கும் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற எழுத்து என, ஒவ்வோர் அம்சத்திலும் ஒரு தனித்துவம் ஒளிந்துஇருக்கும்.

ரூபாய் நோட்டின் வெண்மையான பகுதியில் மகாத்மா காந்தியின் வாட்டர் மார்க் தெரியும். அதன் அருகே 500 என்ற எண் வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் பளிச் என்று தெரியும். நடுவில் இருக்கும் 500 என்ற எண்ணை சாய்த்துப் பார்த்தால், நிறம் மாறும். அல்ட்ரா வயலெட் வெளிச்சத்தில்வைத்துப் பார்த்தால் ரூபாய் நோட்டின் வரிசை எண் ஒளிரும். நோட்டின் குறுக்கே வெள்ளி தகடு போன்ற பாதுகாப்பு இழை இருக்கும். மகாத்மா காந்தி படத்துக்கு அடுத்து உள்ள பகுதியில் 500 என்ற எண் மறைந்து இருக்கும்.

இந்திய கரன்ஸி கூழாக்கப்பட்ட பருத்தி யில் இருந்து தயாரிக்கப்படுவதால், எண்ணும்போது படபடவென சத்தம் வரும்.

நீண்ட நாள் புழக்கத்தில் இருந்தால் ஒரிஜினல் நோட்டுகள் சற்றுத் தடிமனாகவும், கள்ள நோட்டுகள் மெல்லியதாகவும் இருக்கும்.ரூபாயின் சீரியல் எண்கள் சிகப்பு நிறத்தில் பளிச் என்று இருப்பதோடு அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி சீராக இருக்கும். 1,000 ரூபாய் நோட்டில் மட்டும் வலதுபுறத்தின் மேலே, கருநீல நிறத்திலும்; இடது புறத்தின் கீழே, சிகப்பு நிறத்திலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.

கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் சற்றுச் சிறியதாக இருப்பதோடு அல்ட்ரா வயலட் விளக்கொளியில் ஜொலிக்காது.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் அச்சிடப்பட்டு இருக்கும் 500 மற்றும் 1,000 என்ற இலக்கங்கள் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். சற்றே சாய்த்துப் பார்த்தால், அந்தப் பச்சை நிறம் நீல நிறமாக மாறும். ஆனால், கள்ள நோட்டுகளில் நிறம் மாறாது.மகாத்மா காந்திக்கு இடது புறம் இருக்கும் பாதுகாப்பு இழை உள்ளே பாதியும் வெளியே பாதியு மாகப் பொதிந்து இருக்கும். பச்சையாக அச்சடிக்கப் பட்ட இழை, வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் போது நீல நிறமாகத் தெரியும். கள்ள நோட்டுகளில் வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தால் ஒரே கோடாகத் தெரியாது. நிறம் மாறும் தன்மையும் இருக்காது.

வாட்டர் மார்க்கில் மகாத்மா காந்தி படம் சினிமா ஸ்லைடுபோலத் தெரியும். கள்ளநோட்டுகளில் படம் தெளிவாக இல்லாமல் கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் நோட்டை தூக்கிப் பார்த்தால், இந்த வித்தியாசத்தை உணரலாம்!''

சிட்டி யூனியன் வங்கியின் சி.இ.ஓ. காமகோடி.

விகடன்

No comments:

Post a Comment