Wednesday, February 22, 2012

எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் சாமி மாதிரி. சுகுணா

சிகலா கும்பல் விரட்டி விரட்டி வேட்டையாடப்படும் நிலையில், ஜெயல​லிதாவின் ஆதரவு பெற்ற(?) அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம் என்பவரைக் கைது செய்திருக்கிறது போலீஸ்.

ஆறுமுகத்தின் மனைவி சுகுணாவுக்கும் செங்​கோட்டையனுக்கும் தவறான உறவு இருக்கிறது என்று முதல்வரிடம் கொடுக்கப்பட்ட புகார்தான் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், ஆறுமுகத்தின் மனைவி சுகுணாவைத் தேடிப் பிடித்தோம்.

Minister Sengottaiyan is like a god for us. Suguna''எந்தப் பெண்ணுக்கும் வாழ்க்கையில் இப்படி ஒரு அவமானமும் பழியும் வரக் கூடாதுங்க. இத்தனை அவமானங்களையும் தாங்கிக்கிட்டு இதுக்கு மேல நான் ஏன் உயிரோடு இருக்கணும்..?'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார் சுகுணா.

''எனக்கு சொந்த ஊரு சேலம் பக்கம். நான் பி.காம். படிச்​சிருக்கேன். அவரு (ஆறுமுகம்) எனக்கு சொந்தம்தான். வீட்ல பார்த்து அஞ்சு வருசத்துக்கு முன்னால கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அப்போ அவர் சென்னையிலதான் இருந்தார். கல்யாணம் முடிஞ்ச பிறகும் நான் சென்னைக்குப் போகாம சேலத்துலதான் இருந்தேன். அவருதான் வாரா வாரம் ஊருக்கு வந்துட்டுப் போவார். எங்களுக்கு ஒரு பையன் பொறந்தான். இப்போதான் ஒரு வருஷத்துக்கு முன்னால, சென்னையில் வீடு பார்த்து என்னையும் பையனையும் அழைச்சுட்டுப் போனார்.

எங்க வீட்டுக்காரரும் அவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் ரொம்ப காலமா அ.தி.மு.க-வுல இருக்காங்க. எங்க வீட்டுக்காரரைப் பொறுத்தவரை முதல்ல கட்சி, அப்புறம்தான் குடும்பம். தேர்தலுக்கு ஒரு வருஷம் முன்னால இருந்தே, 'அம்மா’ திரும்பவும் ஆட்சிக்கு வரணும்னு சொல்லி, வாரம் தவறாம என்னை விரதம் இருக்கச் சொல்வார். நானும் ஒவ்வொரு வாரமும் விரதம் இருப்பேன். தேர்தல் தேதி அறிவிச்சதில் இருந்து, அவரு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்னு எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்கூட தூங்க மாட்டார். அப்படிப்பட்டவரை இன்னைக்கு ஏதோ துரோகியைப் போல பேசுறாங்க.

குடிச்சிட்டு வந்து ஹவுஸ்ஓனர் சசிகலாவின் வீட்டுக்குள் புகுந்து கலாட்டா செஞ்சதா, என் வீட்டுக்காரர் மேல கேஸ் போட்டிருக்காங்க. எங்க ஹவுஸ்ஓனர் வீட்டுக்கு வெளியே இரும்பு கேட் இருக்கு. அது, எப்பவும் பூட்டியேதான் இருக்கும். அதைத்தாண்டி வீட்டுக்குள் போகவே முடியாது. ராத்திரி 11 மணிக்கு அவங்க கதவைத் திறந்துவெச்சிட்டா உட்கார்ந்திருப்பாங்க. யாரோ போட்ட சதித்திட்டத்தில் எங்க வீட்டுக்காரர் மாட்டிக்கிட்டாருங்க.

அப்புறம், வேலூர்ல யாருகிட்டயோ ரெண்டு கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டார்னு புகார் சொல்றாங்க. புகார் கொடுத்தவர் எஃப்.ஐ.ஆர்-ல கையெழுத்து போடும்போது இன்ஷியல்கூட இல்லாமப் போட்டிருக்கார். அதுவும் இல்லாம எங்க வீட்டுக்காரர் மேல முதலில் புகார் கொடுத்த சசிகலாவின் கணவர் கோவர்த்தன், இன்னொரு புகாரில் 20 லட்ச ரூபாய் கொடுத்ததா சொல்லி இருக்கார். எல்லாமே அப்பட்டமான பொய்.''

''உங்களையும் செங்கோட்டையனையும் தொடர்​புபடுத்தி, அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முதல்வரிடம் புகார் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறதே?''

''நான் சென்னைக்குப் போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆகுதுங்க. என் புள்ளை மேல சத்தியமா சொல்றேன், இதுவரை அமைச்சரை நான் நேர்ல பார்த்ததுகூட கிடையாது. என் வீட்டுக்காரர், சொந்தக்காரங்களைத் தவிர, வேற யாரையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்ததே இல்லை. எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் அமைச்சர் சாமி மாதிரி. சாமியைப் பத்தி யாராவது தப்பா பேசினா, கண்டிப்பா நல்லா இருக்க மாட்டாங்க.

நான் சொல்ற ஒரு விஷயத்தை மட்டும் தயவு செஞ்சு அப்படியே போடுங்க.

'அம்மா... சாதாரண கிராமத்தில் இருந்து பொழைக்கிறதுக்காக சென்​னைக்கு வந்த பொண்ணும்மா நான். இப்போ நான் சுமந்துட்டு இருக்கிற களங்கத்தை வாழ்க்கையில எந்தப் பொண்ணும் சுமக்கக் கூடாதும்மா. ஊருப் பக்கமெல்லாம் ஒரு சின்ன விஷயம்னாக்கூட, பெருசாப் பேசுவாங்க. இந்தப் பழியோட நான் எங்க ஊருல போய் எப்படி வாழ முடியும்? செய்யாத தப்புக்கு என் புருஷனுக்கு ஜெயில் தண்டனையும், எனக்குப் பழிச் சொல்லையும் கொடுத்துட்டாங்க. இப்போ நான் அனுபவிச்சிட்டு இருக்கும் வலியையும் வேதனையையும் ஒரு பொண்ணா இருக்கிற உங்களால்தாம்மா புரிஞ்சுக்க முடியும். அதனாலதான் என்னோட பாரத்தை எல்லாம் உங்க காலடியில் இறக்கி வெச்சிட்டேன். இனி, நான் என்ன பண்றதுங்கிறதை நீங்களே சொல்லுங்கம்மா...’ நான் வேற யார்கிட்டேங்க இதை முறையிட முடியும்'' என்று வேதனையுடன் முடித்தார் சுகுணா.

இந்த விவகாரம் குறித்து செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''இந்த விவகாரத்தில் நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை'' என்று ஒதுங்கிக் கொண்டார்.

அமைச்சரின் ஆதரவாளர்களோ, ''அமைச்சரின் குடும்பத்துக்குள் பிரச்னை இருப்பது உண்மை. அதைப் பேசி சரிசெய்து இருக்கலாம். அமைச்சரோட பையன் அவசரப்பட்டு ஏதோ செய்யப்போக, அது கண்ணாடி வீட்டுல இருந்து கல் எறிஞ்ச மாதிரி ஆச்சு.'' என்று ஆதங்கப்பட்டார்கள்.

பெரிய வீட்டுச் சமாச்சாரமாச்சே!

No comments:

Post a Comment