வேலூர்; தமிழகத்தில் முதன் முறையாக அரக்கோணம் அருகே கேபிள் டிவி மூலம் இண்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கேபிள் டி.வி. மூலம் இண்டெர்நெட் வசதி இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெங்களூர் நகரில் இந்த சேவை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சோதனை முறையில் அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் தொடங்கப்பட்டது. ரயில்வே துறை உதவியுடன் ரயில்வயர் என்ற திட்டத்தின் மூலம் இது வழங்கப்படுகிறது.
இந்திய அரசின் நிறுவனமான ரயில்டெல் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்.., சாதாரண மக்களுக்கு இண்டர்நெட் மற்றும் ஆரோக்கிய வசதிகளை பெரிய அளவில் கொடுப்பதற்கு இந்த நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இண்டர்நெட் சேவை, கேபிள் டிவி ஆபரேட்டர்களால் இன்று முதல் வழங்கப்படுகிறது.
ரயில்வேத் துறைக்கு சொந்தமான கேபிள்கள் மூலம் இந்த சேவையினை கேபிள் ஆபரேட்டர்கள் வழங்கிவருகின்றனர். இதன் மூலம் டிவி பார்க்க முடிவதுடன், இணையத் தொடர்பும் அதிவேகத்தில் கிடைக்கிறது. இணைய உலகில் மிகப் பெரும் புரட்சியை இது ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் இண்டெர் நெட் சேவை வழங்கும் பிரவ்சிங் சென்டர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிகிறது.
Friday, October 7, 2011
கேபிள் டிவி மூலம் இண்டர்நெட்: தமிழகத்தில் தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment