காஞ்சி மகான் திருப்தி க்ஷேத்ரத்தை எப்படி காப்பாற்றினார் என்பது பலருக்கு தெரியாமல் போய் விட்ட விஷயம் இது ஏறக்குறைய 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது . திருப்தி கோயிலில் எப்பொழுதும் எதாவது மாறுதல்கள் செய்துகொண்டே இருப்பார்கள் பக்தர்களின் வசதிக்காக.
ஒரு முறை அங்கே இருந்த பொதுபணி துறை அதிகாரிகளும் அறநிலையத்துறை அமைச்சரும் ஒரு முக்கியமான முடிவுக்கு தயராகிக் கொண்டிருந்தார்கள். பொதுமக்கள் உள்ளே மூலஸ்தானத்துக்குள் போய் அதே வழியாக திரும்பி வருவது வழக்கம் , இதை மாற்றி , அதற்கு பதில் மூலஸ்தானதிற்கு பக்கத்தில் உள்ள அர்த்த மண்டபத்தின் சுவர்களை இடித்து மக்கள் வலப்பக்கம் இடப்பக்கம் வழியாக வந்து போனால் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் நெரிசலும் குறையும் என்று முடிவு செய்து கீழ் மட்ட அளவில் பேசி இதற்காக வெளிநாட்டில் இருந்து 40 லக்க்ஷம் செலவில் கோவில் சுவற்றை இடிக்க ஒரு நவீன இயந்திரத்தை தருவிக்கவும் முடிவு செயப்பட்டது .
இவையனைத்தையும் கேட்டு மன நிம்மதி இழந்தவராக ஸ்தபதி கணபதி அங்கே அமர்ந்திருந்தார் அமைச்சர் இதை கவனித்து விட்டு நீங்கள் ஒன்றும் இது பற்றி கருத்து கூறவில்லையே , உங்களுக்கும் இதில் சம்மதம் தானே என்று கேட்டார் என்னுடைய கருத்தை இங்கே கூறலாமா என்று கேட்டார் ஸ்தபதி , அதற்கு தாரளமாக கூறுங்கள் என்றார் அமைச்சர் ஸ்தபதி கூறினார் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஆகம விதிமுறைப்படி வல்லுனர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கோயில் மூலஸ்தானதிற்கு அடுத்தபடியாக உள்ள அர்த்த மண்டபம் மிகவும் பவித்ரமானது அதை இடித்து இருபுறமும் வழி செய்வது அவ்வளவு உசிதமானது அல்ல , அப்படி செய்தால் , இங்கே குடி கொண்டிருக்கும் பகவானின் சக்தியும் அவரது புனித தன்மையும் போய்விடும் உடனே இந்த வேலையை நிறுத்திவிடுங்கள் என்று கூறினார். அனைவரது ஒருமித்த கருத்தும் இடிப்பதிலேயே இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது , அறிக்கை தாயார் செய்யப்பட்டு அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டு ஸ்தபதியின் ஒப்புதலும் அதில் பெறப்பட்டது , கையொப்பம் இட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிவிட்டார் ஸ்தபதி கனத்த மனதோடு என்ன செய்வது என்று தெரியாத குழம்பிய நிலையில் காஞ்சி மகான் ஒருவரே இதற்க்கு தீர்வு காண முடியும் என்று எண்ணி , ஆந்திராவில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளிடம் விரைந்தார் கணபதி ஸ்தபதி ஆந்திராவில் கார்வேட்டி நகர் என்ற இடத்தில் குளக்கரை ஓரம் பரனசாலை அமைத்து தங்கி இருந்தார் பெரியவா விடாப்பிடியாக மனதில் தோன்றிய ஒரே குறிக்கோளுடன் ஸ்தபதி மகானின் இருப்பிடம் சென்றடைந்த போது விடியற்காலை நேரம் அன்ன ஆகாரமின்றி மனதில் பெரும் சுமையுடன் மகானின் முன் போய் நின்றவுடன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது , துக்கத்தை அவரால் அடக்க முடியவில்லை திருப்பதியில் எந்த மாறுதல் செய்வதானாலும் பெரியவாளை கேட்டு தான் செய்வார்கள் ஆனால் இந்த விஷயத்தை கூறவில்லை இப்படி செய்யபோகிறோம் என்ற தகவலை தான் கூறுவார்கள் , அதனால் பெரியவா அபிப்ராயம் சொல்லாமல் இதை தடுத்து நிறுத்த ஏதாவது வழி சொல்லணும் என்றார் ஸ்தபதி அந்த சமயம் மகானின் வாயிலிருந்து மணி மணியாக சில வார்த்தைகள் வந்தன
"உன் மனசு பிரகாரம் எல்லாம் நடக்கும் கவலைப்படாதே "என்று கூறி ஸ்தபதியை அவர் அனுப்பி வைத்தார் என் "மனசு பிரகாரம்" என்றால் கோயில் இடி படாமல் தப்புமா? சோர்வோடு தன் இருப்பிடம் வந்த ஸ்தபதி நல்ல அசதி காலையில் சாப்பிட்ட ஆகாரம் நன்றாக தூங்கிப் போனார் ஆனால் யாரோ எழுப்பி விட்டதை போல் உணர்ந்த ஸ்தபதி மனதின் வேகம் நடையில் தெரிய நேராக முதன் மந்திரி வீட்டை நோக்கி நடந்தார் (அப்போது ப்ரும்மானந்த ரெட்டி முதல்வர்) . ஸ்தபதி முதல்வர் வீட்டை அடைந்தபோது விடியற்காலை மணி 3.00 வந்தவரை அடையாளம் கண்டு , வாயிற்காப்போன் என்ன ஸ்தபதி இவளவு காலையில் என்றார் நான் முதல்வரை பார்க்க வேண்டும் "அபாயின்ட்மென்ட் இருக்கா"? இல்லை அப்போ அவர் வரசொல்லி இருக்காரா அப்படி என்றால் நீங்க அவரை இப்போ பார்க்க முடியாது நான் கண்டிப்பாக அவரை இப்பவே பார்த்தாக வேண்டும் திருப்பதி கணபதி ஸ்தபதியை எல்லாரும் நான்கு அறிந்தவர்கள் , எப்படி அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவது அப்ப ஒன்னு செய்யுங்க அவர் காலை 4.30 மணிக்கு எழுந்து கீழே காப்பி சாப்பிட வருவார் , அப்பொழுது அவர் உங்களை பார்த்துவிட்டால் நீங்கள் பேசலாம் இல்லையென்றால் அப்புறம் தான் பார்க்க முடியும் என்று கூறிவிட்டார் , இதை கேட்ட ஸ்தபதி அங்கேயே உட்கார்ந்து விட்டார் சரியாக மணி 4.30
முதல்வர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார் வாயிலில் நிற்கும் ஸ்தபதியை பார்த்தார் என்ன கணபதி இவ்ளவு காலையில் ? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று கூறி, திருப்பதி கோயிலுக்கு ஆபத்து என்றார் எடுத்த எடுப்பிலேயே என்னது !!! என்று திகைத்து அவர் தோள் மேல் கை போட்டு உள்ளே அழைத்து சென்றார் நடந்தவை எல்லாவற்றையும் ஓன்று விடாமல் அப்படியே போட்டு உடைத்தார் ஸ்தபதி கண்ணீருடன் முகத்தில் கோபம் கொந்தளித்தது முதல்வருக்கு அறநிலையத்துறை அமைச்சருக்கு உடனே தொடர்பு போட்ட சொன்னார் தொலைபேசியில் அமைச்சர் தொலைபேசி லைனில் வந்தார் .
முதல்வர் நேற்று முன்தினம் திருப்பதியில் என்ன நடந்தது என்றார் அது விஷயமாகத்தான் அதற்க்கான கோப்புகளுடன் தங்களை சந்திக்க அனுமதி வேண்டி உங்கள் வீடிற்கு வந்து கொண்டிருக்கின்றேன் என்றார் அமைச்சர் நேற்று முன்தினம் திருப்பதியில் என்ன நடந்தது என்று கேட்டேன் என்றார் உரத்த குரலில் முதல்வர் அமைச்சர் நடந்த வற்றை அப்படியே ஒப்புவித்தார் அதெல்லாம் கேட்ட ரெட்டிகாரு முதலில் நான் சொல்வதை கேளுங்கள் "வெங்கண்ணா ஜோளிக்கி போகாண்டி"
அதாவது திருப்பதி வெங்கடாஜலபதி விஷயத்தில் தலையிடவேண்டாம் இது என்னுடைய உத்தரவு என்று கூறி போனை துண்டித்தார் .
திருப்பதியில் ஒன்றும் நடக்காது நீங்கள் போய் வாருங்கள் என்று ஸ்தபதியை வழி அனுப்பி வைத்தார் முதல்வர் உன் மனசு போல எல்லாம் நடக்கும் என்று மகான் சொல்வது கேட்டது அன்று மட்டும் மகான் ஆசி இல்லையென்றால் திருப்பதி கோயில் என்னவாகியிருக்கும்??
No comments:
Post a Comment