Saturday, March 17, 2012

மார்ட்டினை சந்திக்க மறுத்த ஜெயலலிதா. அதிமுகவை எதிர்த்து அரசியலில் குதிக்கிறாரா?

மார்ட்டின் விஷயத்தில் சில மாதங் களாக பெரிய அளவில் எந்தத் தகவலும் இல்லை. ஆனால், ஏழு கோடி திடீரென்று பிடிபட்டதில், மீடியா வெளிச்சத்தில் மீண்டும் சிக்கி விட்டார்!

''மார்ட்டின் மீதான வழக்குகளை சரிக்கட்டும் நோக்கத்துடன், 'தானே புயல் நிவாரண உதவி’ என்ற பெயரில், முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரிய தொகையைக் கொடுக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு இருக்கிறார்கள் அவரது தரப்பினர். ஆனால், மார்ட்டின் பெயரைக் கேட்டதுமே, முதல்வர் முகம் சுளித்து நேரம் ஒதுக்க மறுத்து விட்டார். ஏனென்றால், கடந்த தி.மு.க. ஆட்சியில் மார்ட்டின் எத்தனை செல் வாக்குடன் இருந்தார், என்னவெல்லாம் செய்தார் என்பது முதல்வருக்குத் தெரியும். அப்போது போட்ட ஆட்டத்துக்கான பலனைத்தான் இப்போது சிறையில் அனுபவிக்கிறார்'' என்று, சொல்கிறார் கோவை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்.

Martin involed in Politics?'கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மார்ட்டின், 150-வது நாளை நெருங்கி விட்டார். சிறையில் இருந்து அவரை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் அவரது நட்பு வட்டத்தைச் சேர்ந்த போலீஸ் துறை உயர் அதிகாரி கள் மற்றும் சட்டம் தெரிந்த பிரமுகர்கள் சென்னையில் வி.வி.ஐ.பி-களை சந்தித்து லாபி செய்து வருகிறார்கள். அதனால், விரைவில் வெளியே வரப்போகிறார் மார்ட்டின். அதன்பிறகு, அவரே நேரடியாக அ.தி.மு.க. அரசை எதிர்த்து அரசியலில் குதிக்கப் போகிறார். முடிந்தால், அவரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கோவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் சொடக்கு போட்டுச் சொன்னார் களாம் மார்ட்டினின் விசுவாசிகள்.

இதனால், மிரண்டுபோன போலீஸ் அதிகாரிகள் உடனே ஆட்சி மேலிடத்துக்குத் தகவல் தெரிவித்து விட்டு, மார்ட்டின் வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக அதிரடி காரியங்களைச் செய்யத் தொடங்கி விட்டார்கள். மார்ட்டினின் பூர்வீக ஜாத கத்தைப் புரட்டி எடுத்து, அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ச்சுகிறார்களாம்.

டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ஒரு கன்டெய்னரில் 30 லட்சம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இருவரை போலீஸ் பிடித்ததோடு, மார்ட்டினையும் இந்த வழக்கில் சேர்த்து இருக்கிறார்கள்.

கோவையைச் சேர்ந்த கே.ஆர்.எஸ். பேக்கரியின் உரிமையாளர் ஆர். கிருஷ்ணராஜ் என்பவர், 'ஒருநிலப்பிரச்னை தொடர்பாக தன்னை மார்ட்டின் கோவை சிறைச்சாலைக்கு வரச்சொல்லி, கொலை மிரட்டல் விடுத்தார்' என்று புகார் கொடுத்தார். அந்த நிலப்பிரச்னையில் மார்ட்டின் மீது நிலஅபகரிப்பு வழக்கும் விரைவில் பதிவாகப் போகிறதாம்.

இந்த நேரத்தில்தான், சென்னை, ஆதம்பாக்கத்தில் மார்ட்டினின் நெருங்கிய நண்பர் நாகராஜன் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி 7.70 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினார்கள். அண்ணா நகரில் உள்ள மார்ட்டினின் இன்னொரு நண்பரான மூர்த்தியின் வீட்டில் 50 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது.

''போலீஸுக்குப் பயந்து இந்தப் பணக்குவியலை மார்ட்டின்தான் அவரது சென்னை நண்பர் களிடமும் கொடுத்துப் பதுக்கி வைத்திருந் தார் என்பது எங்களது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்போது, புழல் சிறையில் இருக்கும் நாகராஜனை விரைவில் எங்கள் கஸ்டடிக்கு எடுத்து விசாரிக்கப் போகிறோம். மூர்த்தியைக் கைது செய்த பிறகு முழுமையான தகவலை வெளி யிடுவோம்'' என்கிறார் சென் னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்.

இது பற்றி,சென் னையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். ''கடந்த ஆட்சி நடந்தபோது, அப் போதைய எதிர்க் கட்சியான அ.தி.மு.க. சார்பில், மார்ட்டினிடம் ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால், அதை மார்ட்டின் புறக் கணித்தார். அதனால், கடுப்பான அ.தி.மு.க-வினர், தங்களுக்கான நேரம் வரும்வரை காத்திருந்து பழி வாங்குகிறார்கள்.

ஆட்சி மாறியதும் ஜெயலலிதாவிடம் சமா தானம் செய்துகொள்ளத் துடித்தார். ஆனால், அ.தி.மு.க-வின் வாசல் திறக்கப்படவே இல்லை. அதனால், பீதிஅடைந்த மார்ட்டின், சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த ராவணனை நாடினார். அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், ராவணன் ஒதுங்கிக் கொண்டார். அடுத்து, சென்னையில் உள்ள இரண்டு பத்திரிகையாளர்கள் மூலம் சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, கேட்டது தரப்பட்டதாம். இந்த விவகாரம் மேலிடத்துக்கு எட்டியதன் எதிரொலியாகத்தான், மார்ட்டின் கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்'' என்று சொன்னார்.

மார்ட்டின் தரப்பில் பேசியவர்கள், ''சிக்கிம் மாநில அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி இந்தியாவில் உள்ள மாநிலங்களின் சட்ட திட்டங்களுக்கு உட் பட்டுத்தான் மார்ட்டின் லாட் டரி வியாபாரம் செய்கி றார். தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டு இருப்பதால், இங்கு அவர் வியா பாரத்தை நடத்துவதே இல்லை. மார்ட்டினுக்கு வேண்டாத சிலர்தான் அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ கத்தில் கள்ளத்தனமாக லாட்டரி வியாபாரம் செய்து வருகின்றனர். மற்றபடி, குற்றச் செயல்களில் மார்ட்டினோ, அவரது உறவினர்களோ எப்போதும் ஈடுபட்டது இல்லை. அரசியலில் குதிக்கும் எண்ணம் அவருக்கு எப்போதும் கிடையாது. ஆனால், இப்போது நடப்பது அரசியல் ரீதியான பழிவாங்கல் என்பதைச் சட்டத்தின் முன் நிரூபித்துக் காட்டி மார்ட்டின் வெளியே வருவார்'' என்று நம்பிக்கை தெரிவிக் கிறார்கள்.

பார்க்கலாம்!

No comments:

Post a Comment