Thursday, March 8, 2012

கருணாநிதி தன் சுயநலனுக்காகப் பிராமணர்களின் அறிவைப் பயன்​படுத்திக்கொள்வார். இராமசுப்ரமணியன்.


பிராமணர்களை விமர்சித்து வம்புக்கு இழுக்கும் கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்’ என்று கோவை மாநகரப் போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார், அந்தணர் யுவ மஹா ஷமிதியின் அமைப்பாளரான இராமசுப்ரமணியன்.

அவரிடம் பேசினோம். ''கருணாநிதியின் பல முகங்களில் ஒன்று, பிராமணிய எதிர்ப்பு முகம். தி.மு.க. ஜெயிச்சு இவர் பதவியில உட்கார்ந்துட்டா, நிர்வாக ஆலோசனை வழங்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும் இவருக்குப் பிராமணர்களுடைய ஆதரவு தேவை. முழுக்க முழுக்க தன் சுயநலனுக்காகப் பிராமணர்களின் அறிவைப் பயன்​படுத்திக்கொள்வார். ஆனால், தேர்தலில் தோற்றுப்போய் வீட்டில் உட்கார்ந்திருக்கும் நேரத்தில் மட்டும் பிராமணர்களுக்கு எதிராகத் தன் முகத்தைக் காட்டத் தொடங்குவார். இப்போது அந்த வேலையைத்​தான் செய்து வருகிறார்.

திராவிட இயக்க நூற்றாண்டு விழாவைத் தொட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில்,'பார்ப்பனர்களை நடுங்கச் செய்வோம்’னு குறிப்பிட்டு இருக்கிறார். இதைத்தான் நாங்க வன்மையா கண்டிக்கிறோம். எங்களை நடுங்கவைக்கிற அளவுக்கு இவரு என்ன பெரிய சூரரா, வீரரா?

பிராமணர்கள் மென்மையானவர்கள்.. வன்முறைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால்தான் அடிக்கடி இப்படி வாய்த்துடுக்காகப் பேசவும் எழுதவும் செய்கிறார். எங்களுக்கு ஆத்திரம் கிடையாது. ஆனால் ரௌத்திரம் உண்டு. இவ்வளவு பேசும் கருணாநிதி என்ன பிராமணத்துவம் இல்லாத உலகத்திலாவாழ்கிறார்?

அவருடைய பேரன்களில் ஒருவர் திருமணம் செஞ்சிருக்கிறது பிராமணப் பெண்ணைத்தான். அந்தப் பேரனை ஏன் கட்சியிலும், அதிகாரத்திலும், குடும்பத்திலும் வைத்திருக்கிறார்? விலக்கி வைக்க வேண்டியதுதானே? வேண்டுதல் மேலே வேண்டுதல் வெச்சு கோயில் கோயிலாகச் சுற்றும் துர்கா ஸ்டாலினைத் தடுத்து நிறுத்த வேண்டியதுதானே? சாய்பாபா அவர் வீட்டுக்கு வந்தப்போ பக்தி மணக்கக் கும்பிட்ட தயாளு அம்மாளைக் கண்டிக்க முடியலையே? பக்தி இதழ் துவங்குகிற கலாநிதி மாறனைத் தடுக்க முடியுமா?

அதனால்தான் இப்படிப் பேசி சமுதாயத்தில் சாதிய மோதலை உருவாக்கும் அவரது செயலைக் கண்டித்தும் புகார் கொடுத்துள்ளோம். போலீஸ் அவரைக் கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், திருத்தவேண்டும்'' என்றார் அழுத்தமாக.

ஆனால் கோவை தி.மு.க-வினரோ 'கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அ.தி.மு.க-வில் சேர்ந்தார் இராமசுப்ரமணியன். தன் தலைவியிடம் நல்ல பெயர் வாங்குறதுக்காக இந்த மாதிரி ஏதேதோ பண்ணிப் பார்க்கிறார். விடுங்க, இவரையெல்லாம்...'' என்கிறார்கள் அசட்டையாக.

கருணாநிதி இப்படி எல்லாம் பேசவில்லை என்றால்தானே அதிசயம்!

No comments:

Post a Comment