Tuesday, March 20, 2012

திபெத்: சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து மேலும் ஒரு புத்த துறவி தற்கொலை.


One more Tibetan Buddhist fired himself against China.திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து இன்னொரு புத்த துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திபெத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விடுதலை கோரியும் திபெத் மக்கள் போராடி வருகின்றனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் உலக நாடுகளின் ஆதரவை பல ஆண்டுகளாக கோரி வருகிறார். இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள அபா என்ற இடத்தில் 20 வயது திபெத் புத்த மத துறவி லாப்சங் சல்ட்ரிம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீக்குளித்து சீனாவுக்கு எதிராக கோஷமிட்டார். அவரை பிடிக்க போலீசார் ஓடிவந்தனர். அவர்களிடம் சிக்காமல் துறவி உயிருடன் எரிந்தபடி சாலையில் ஓடினார்.

உடல் முழுவதும் தீ பரவியதில் சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இத்தகவலை இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள புத்தமத துறவிகள் 2 பேர் இ மெயிலில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் சீனாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 30 புத்த மத துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தலாய் லாமாதான் காரணம். அவர்தான் துறவிகளை தூண்டி வருகிறார் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

No comments:

Post a Comment