அன்னை பாரத தேவியை, ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையோடும், நம் நாட்டு மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்திலே இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வியிலே, பல ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான மானமிகு இந்தியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
மகாத்மா காந்தி தலைமையிலே அறவழியிலே, அஹிம்சா நெறியிலே நடைபெற்ற போராட்டத்தில் நம் மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலே கலந்து கொண்டு ஆங்கிலேயர்களை, அன்னை பூமியிலிருந்து அகற்ற பாடுபட்டனர்.
தீரர் நேதாஜி தலைமையிலே இயங்கிய இந்திய தேசீய ராணுவத்திலே சேர்ந்து ஆதிக்க வெறிபிடித்த ஆங்கிலேயர்களை அன்னை பூமியிலிருந்து விரட்ட அறவழியைவிட, ராணுவம் மூலம் போராடுவதே சிறந்தது என்று எண்ணி பரங்கியர் படைக்கு எதிராக போர் முனையிலே வீரமாக போராடினார்கள் பலர் .
பாலகங்காதர திலகர், பிபின் சந்தரபால், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்களின் எண்ணங்களை வழிகாட்டுதலாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாக, தீரமாக, புரட்சிகரமாக போராடுவதே சிறந்தது, அப்போதுதான் அந்த அடக்கு முறையாளர்களை நாட்டிலிருந்து அடித்து விரட்டமுடியும் என்ற எண்ணங் கொண்ட அரவிந்தகோஷ், பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு, வாஞ்சிநாதன், சந்திரசேகர ஆசாத், உத்தம்சிங், வீரசவர்க்கர் , குதிராம் போஸ், அஸப் குல்லகான், ராம் பிரசாத், பிஸ்மில் சூரியசென் , மதன்லால் டிங்ரே, ரோஷன் சிங் போன்ற எண் ணற்ற புரட்சியாளர்கள் தங்கள் உயிரினை துச்சமாக எண்ணி ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடி வீரமரணம் அடைந்ததெல்லாம் நாம் அறிந்ததே.
சுதந்திரப் போராட்டம், பல வழிகளிலே, பல முனைகளிலே தீவிரமடைந்து நடைபெற்றுக் கொண் டிருந்த காலம். அப்போது நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.
பூமிப் பரப்பிலே, கும் இருட்டு எங்கும் பரவிக் கிடந்தது. மினுக் மினுக்கென்று குறைந்தவெளிச்சத்துடன் விளக்கு எரிந்துகொண்டிருந்த ஓர் குடிசையின் உள்ளே, கடுமையான காய்ச்சல் காரணமாக பிதற்றிக் கொண்டு, உருண்டு, பிறண்டு அவதிப்படுகின்ற தன் மகனை மருந்து கொடுத்து கலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றாள் ஒரு விதவைத் தாய்.
அந்த வேளையிலே திடீரென சிலபேர் விறு விறுவென விரைவாக ஓடி வந்து குடிசைக்குள் நுழைந்து, குடிசையின் கதவை அவசரமாக தாழிட்டனர்.
திடுக்கிட்ட அந்த தாய் “யாரப்பா? நீங்களெல்லாம்” எனக் கேட் டதும், “நாங்களெல்லாம் நம் நாட்டின் விடுதலைக்காக போராடுகின்ற போராட்ட வீரர்கள், தலைமறைவாக இருந்து தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்” எனச் சொன்னார்கள் .
உடனே அந் த உன்னதத் தாய் தன்னுடைய சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களை அன்பாக உபசரித்து, உட்கார வைத்து, பசியோடு இருந்த அவர்களுக்கு கோதுமை ரொட்டி, சட் னி போன்ற உணவுப் பண்டங்களையெல்லாம் கொடுத்து சாப்பிட வைத்தார் அந்த அன்புத்தாய். அவர்கள் சாப்பிட்ட பின்பு, அந் த வீரர்களை அங்கேயே படுத்து உறங்க வைத்துவிட் டு, அந்த அம்மா தன்னுடைய மகனை மறுபடியும் கவனிக்க ஆரம்பித்தார்கள் .
பொழுது புலர்வதற்கு முன்பே அந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் அங்கிருந் து புறப்படத் தயார் ஆனார்கள். அப்போது அந்த வீரர்களின் தலைவன் அந்த அம்மாவின் முன்பு வந்து, “அம்மா நாங்களெல்லாம் நம் நாட்டின் விடுதலைக்கு போராடுகின்றோம், பசியால் வாடிய எங்களுக்கு அன்பு காட்டி, உணவு கொடுத்து உபசரித் து இரவில் தங்கவும் இடம் கொடுத் தீர்கள், மிக்க நன்றியம்மா, என் பேர் மகன்லால் பகாடி! இந்தாங்கம்மா... இதுலே 500 ரூபாய் இருக்கு. இதை நீங்க வாங்கிக் கொள்ளுங்கள். நோயால் சிரமப்படும் சகோதரனுக்கு நல்ல மருந்துகளை வாங்கிக் கொடுங்க. மீதிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ! இப்படிப்பட்ட நேரத்தில் இந்தப் பணம் உங்களுக்கு மிகவும் உதவும் ” என்று கூறினார்.
வீரன் மகன்லால் பகாடியின் பெயரும் , அவருடைய புரட்சி நடவடிக்கைகளைப் பற்றியும் முன்பே அந்த தாய் கேள்விப்பட்டிருந்தார்கள் .
தன் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கும் நபர் தான், அந்த வீரன் மகன்லால் என்பதை உணர்ந்த அந்த தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, “மகனே! இந்த நாட்டினுடைய விடுதலைக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக, நீங்களெல்லாம் உங்களுடைய உயிரை துச்சமாக எண்ணி வெறியோடு போராடுகின்றீர்கள். வெள்ளைக்காரர்களை நாட்டை விட்டு விரட்ட ஏழை, நான் என்ன உதவி செய்ய முடியும்? இந்தப் பணம் , நம் நாட்டின் விடுதலைக்கான சேமிப்பு, இதில் ஒரு பைசாவைக் கூட நான் தொடக்கூடாது, என்னுடைய மகன் நோயிலிருந் து சரியானதும், அவனையும் உங்களோடு சேர்த்து விடுகிறேன் ” எனக் கூறினாள் .
அதைக் கேட்ட மகன்லால் , “அம்மா! நாங்க ராம் டேக் கருவூலத்தில் இருந்து ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை அடித்திருக்கின்றோம் . இந்த பணத்தை, இங்கே இருக்கின்ற என் சகோதரர்களிடம் கொடுத்து சரியான நபர்களிடம் சேர்த்து விடுகின்றேன்! என்னை உயிரோடு பிடித்தோ அல்லது பிணமாகவோ கொடுக்கின்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி தருவதாக ஆங்கிலேயர்கள் அறிவித்து உள்ளனர். எனவே, என்னைப் பிடித்து கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் !” என உண்மையான உள்ளத்தோடு கூறினார் .
இதைக்கேட்ட அந்தத்தாய் சினங்கொண்டு, வீரத்தோடு பார்க்கின்ற சிங்கம் மாதிரி மகன் லாலை நிமிர்ந்து பார்த்து, “மகனே! மகன்லால் என்ன வார்த்தை சொல்லுகின்றாய் , இந்த அபத்தமான யோசனை உனக்கு எப்படி உதித்தது, எந்தத் தாயாவது தன் பிள்ளையை, அற்ப பணத்துக்காக வெள்ளைக்காரர்களிடம் காட்டிக் கொடுப்பாளா? கேவலம் காசுக்காக! தன் பிள்ளையை வெள்ளைக்காரர்கள் சிறையிலே போட்டு சித்தரவதை செய்ய, விற்க எந்த தாய்க்காவது மனம் வருமா? சொல்! மகன்லால் ! சொல்” என்று கேட்டார்.
அந்த வீரர்கள் பலதடவைச் சொல்லி வற்புறுத்தியும் கூட அந்தத்தாய் தன்னுடைய எண்ணத்திலே உறுதியாக இருந்தார்கள் , அவர்களைப் பார்த்து, “இனிமேல் , எப்பவாவது இந்தப்பக்கம் வந்தால் , உங்கள் தாய் ஒருத்தி இருக்கிறாள் என நினைத்து, இந்த ஏழைத்தாயின் குடிசைக்கு வந்து இருக்கிறதை சாப்பிட்டுவிட்டு போங்க!” எனக் கூறியதைக் கேட்ட, உறுதியான நெஞ்சுரம் கொண்ட வீர இளைஞனான மகன்லால் மனம் நெகிழ்ந்து, பீறிட்டு வருகின்ற அழுகையினை அடக்கிக் கொண்டு, கன்னத்திலே கண்ணீர் வழிந்தோட அந்த உத்தமத் தாயின் காலைத் தொட்டு வணங்கி, “அம்மா! உன் னைப் போன்ற உன்னதத் தாய்மார்களுடைய ஆசியோடு விரைவிலே இந்த நாடு விடுதலை அடையும் , நாட்டு மக்கள் நலம் பெறுவார்கள், இது சத்தியம் !சத் தியம்! சத்தியம் !”- என உணர்வு பொங்க கூறினார் . அந்த “உண்மை வார்த்தைகள்” பலித்தது. ஆம் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவிற்கு வந் து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நம் பாரதத்திருநாடு விடுதலை பெற்றது.
அந்த ஏழைத்தாயின் நாட்டுப் பற்றும் , எதற்கும் ஆசைப் படாமல் காட்டிக் கொடுப்பதை கனவிலும் எண்ணாத உள்ளப்பாங் கும் , படிக்கின் ற நமக்கு மெய் சிலிர்க்கிறது, அந்தத் தாயை போற்றி வணங்கத் தோன்றுகிறது. அதேபோல் மகன்லாலின் தன் உயிரைக்கூட பெரிதாக கருதாக தன்னலமற்ற வீரமும் , நம் நாட் டு மக் களின் மேல் கொண் ட அன்பும் நாட்டுப்பற்றும் , இந்திய இனப்பற்றும் , அவனுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நமக்கு உண்மையான பாடமாக அமைந்துள்ளன.
ஆனால் 2009ம் ஆண் டு ஏப்ரல், மே- மாதங்களில் நடந்த இறுதிக்கட்ட போர்க் காலத்தில் நடந்த இன ஒழிப்பு, இன வேரறுப்பு வெறியாட்டத்திற்கு தமிழ் இன தாய்மார்கள், பெண்கள் , பச்சிளங் குழந்தைகள் , ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் என எல்லோரும் ஆயிரக்கணக்கிலே பலியாவதை வேடிக்கை பார்த்தவர்கள் தான் நாம் , ஆம் !, புறநானூறு காட் டும் வீரவாழ்க்கை வாழ்ந்த பழந்தமிழர்களின் வழித்தோன்றல்களாகிய நாம்தான் , பக்கத்தில் நடைபெற்ற பஞ்சமாபாதக செயல்களை கண்டுகொள்ளாமல், வாளா இருந்து
அந்த கொடுஞ் செயல்களை உரியவகையிலே கண்டித்து, தடுத்து நிறுத்தி, நம் இனமக்களை காப்பாற்ற தவறியவர்களாக இருந்தோம் என்பது நம்மேல் ஏற்பட்ட ஒரு தீராப் பழியாக உள்ளது என்பது சத்தியமான உண்மை.
ஒரு இனமே இன்னலில், துயரத்தில் அல்லல்பட்டு அழிந்து கொண்டிருந்தபோது உரிய இடத்தில் இருந்துகொண்டு உரிய நேரத்தில் உதவி செய்ய முன் வராமல் , வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மகாபாவம் வந்து சேரும் என்பது மகாஉண்மையாகும். மருத்துவக் கல்லூரி ஒன்றில் 2009 மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் ஒரு இளம் மருத்துவ மாணவன் உணர்வு பொங்க,
“மந்தை மந்தையாக - உன் இனம் மாண்டு கொண்டிருக்கின்றது பக்கத்திலே மானம் கெட்ட தமிழா உனக்கு மானாட மயிலாட ஒரு கேடா?” என கோபத்துடன் , கவிதை வாசித்து பதிவு செய்த வரிகளில் உள்ள உண்மையினை இன்னும் நினைத் தாலும் நெஞ்சம் பதைபதைத்து,
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற முண்டாசு கவிஞன் பாரதியின் கவிதை வரிகளைத்தான் எண்ணத் தோன்றுகிறது.
அப்போது இனமக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு, நம்பிக்கை வைத்திருந்த ஆண்டவனும் உதவவில்லையே என்பதும் , தேசீயம் , தேசீயம் என்பதெல்லாம் பஞ்சமா பாதக செயல்களை, ஒரு இனப் படுகொலையை பார்த்துக்கொண்டிருப்பதானா? என்கின்ற என்ற ஆத்திரமும், ஆதங்கமும்
எல்லோர் மனதிலும், குறிப்பாக தமிழ் இளைஞர்களின், தமிழ் பாற்றாளர்கள் நெஞ்சங்களிலே புயலாக மையம் கொண்டிருக்கின்றது என்பது நிதர்சணமான உண்மையாகும் .
இந்த உண்மையான கோபமும் , ஆத்திரமும் 2011ம் ஆண்டிலேயாவது வெளிப்பட்டதே என தமிழ் உணர்வாளர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
மதன்மோகன் மாளவியா இவர் பாரதத்தாய் ஈன்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவர் . ஆரம்பகால கட்டத்தில் வக்கீல் தொழிலை மேற்கொண்டிருந்தாலும் பெருஞ்செல்வந்தராக இல்லாதவர்.
இளமைகாலத்தில் பலநேரம் வறுமையிலே வாடியவர். தன்னுடைய வக்கீல் தொழிலில் சிறிது வருமானம் வந்தபோதும் கூட, அந்தப் பணத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் , மற்றவர்களுடைய நலனுக்காக, பொதுநலப்பணிகளுக்காக கொடுத்துவிடக் கூடிய மனப்பான்மை கொண்டவர் மாளவியா!
“என்னங்க! இப்படி எல்லாத்தையும் கொடுத்துவிடுகிறீர்களே, உங்களுக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ள மாட்டீர்களா?” என பலபேர் கேட்டபோது, “வேறு எங்கே கொடுக்கின்றேன் ? என் குடும்பத்திற்கு தானே நான் செலவு செய்கின்றேன், ஆம். இந்த நாடுதானே என் குடும்பம் . இந்த நாட்டிலே இருக்கின்ற ஒவ்வொருவரும் என் சகோதர சகோதரிகள் தானே!” என பதில் சொன்னவர் நம் மாளவியா.
ஆனால் இப்போது இருக்கின்ற கலியுகத்தில் நடைபெறுகின்ற செயல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. நாட்டின் நலனைவிட தன் குடும்ப நலனே முதன்மையானது என கருதுபவர்கள் காலம் இது.
தன்னுடைய குடும்பமே, நாடு என எண்ணுபவர்கள் இருக்கும் நேரம் இது. “மக்கள் நலம் , மக்கள் நலம் என்றே சொல்லுவார் தன் மக்கள் நலம் ஒன் றேதான் மனதில் கொள்ளுவார்”- என்று மறைந்த எம் .ஜி.ஆர் . அவர்கள் பாடிய திரைப்பபாடல் வரிகளில் உள்ள உண்மை நிலைதான் நினைவிற்கு வருகின்றது.
“யாருடைய மனதில் பிறர்நலன் எப்போதும் இருக்கிறதோ, பிறருக்கு நல்லது செய்வது என்பது செயலிலும் , சிந்தனையிலும் சொல்லிலும் இருக்கிறதோ, அவருக்கு மட்டுமே தர்மம் என்றால் என்ன என்று தெரியும் .” -பகவத் கீதை, மகாபாரதம் .
நடுத்தர, மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் நம்பிக்கையோடு முதலீடு செய்திருந்த பங்கு வர்த்தகத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்து அந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டவர்கள், முத்திரைத்தாள் மோசடி என விஞ்ஞானபூர்வமான மோசடிகளில் முத்திரைப் பதித்தவர்கள், நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தில் புகுந்து விளையாடியவர்கள் என பல நல்ல பண்பாளர்கள் இருக்கின்ற காலம் இது.
ஆங்கிலேயர்கள் போன்ற அந்நியர்கள் நம்நாட்டின் வளத்தைக் கொள்ளை அடித்து, மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து தங்கள் நாட்டிற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால் இப்போதோ பண்புள்ளம் கொண்ட நம் இந்தியப் பெருங்குடிமகன்கள் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இருக்கக் கூடிய வங்கிகளில் இட்டு வைத்திருக்கக் கூடிய தொகை ஏறத்தாழ 25000000000000 ரூபாய்கள் (ரூபாய் 25 லட்சம் கோடிகள்) என மதிப்பிட்டுக் கூறுகின்றனர் என்பது மனத்தை என்னவோ செய்கின்றது. இந்த பணம் மட்டும் நம் நாட்டில் இருந்தால் நம் இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சியையும், நல்ல பொருளாதார மாற்றங்களையும் கொண்டு வரமுடியும் என்பது பொருளாதார நிபுணர் கள் கூறுகின்ற உண்மையாகும் .
நம் நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உரிய திட்டங்களுக்கு உதவக்கூடிய லட்சக்கணக்கான கோடிகள், கிடைத்திருக்கக் கூடிய இரண்டாம் தலைமுறை ஒதுக்கீட்டின் மூலமாக வரவேண்டிய வருமானத்தை தங்கள் சுயநலனுக்கு திருப்பிவிட்டு இளைய தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, இனத்திற்கு இழுக்கு வர மொழிக்கு பழிவரக் காரணமானவர்கள் வாழும் கலியுகம் இது என்பது உண்மையாகும் .
“படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்!” - மகாகவி பாரதியார். இனிமேலாவது தமிழ் இனம் வாழ, தமிழ்நாட்டு தலைவர்கள் பாடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
No comments:
Post a Comment