Friday, March 2, 2012

ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றது ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம்!

the-artistஒவ்வோரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதிவாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கபடுகின்றன. முதலில் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் ஆங்கில மொழிபேசும் படங்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் விருதாக ஆஸ்கர் விளங்கி வந்தது. தற்போது சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் என்ற வகையும் அஸ்கர் விருதில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து நாடுகளும் ஆஸ்கரில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. 84 -வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று(26 பிப்ரவரி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆஸ்கர் போட்டியில் பங்குபெற்ற படங்களில், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உட்பட ஐந்து ஆஸ்கார் விருதுகளை வாங்கி அசத்தியிருகிறது 'தி ஆர்ட்டிஸ்ட்’(The Artist) என்ற கருப்புவெள்ளை திரைப்படம். இந்தப்படம் வெறும் பின்னனி இசையமைப்பு மற்றும் சவுண்ட் எஃபெக்டுகள் மட்டுமே கொண்ட, வசனங்கள் அற்ற ஒரு ஊமைப்படம் என்பதுதான் இதில் இன்னும் ஆச்சர்யமானது. இதற்கு முன்பு 83 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கருப்பு வெள்ளை ஊமைப் படத்துக்கு ஆஸ்கர் வழங்கப்படிருகிறது.

the_artistஇந்தபடத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை, அமெரிக்காவுக்கு வெளியே முதன் முறையாக பிரான்ஸ் நாட்டு நடிகர் பெற்றிருக்கிறார் என்பதும் இரண்டாவது ஆச்சர்யம்!

சிறந்த நடிகருக்கான விருது, ஜூன் டுஜார்டினுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘ஐயர்ன் லேடி’ படத்தில் முன்னாள் பிரித்தானிய பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப்புக்கும் வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் மூன்றாவது முறையாக சிறந்த நடிகைக்காக பெறுகிறார். இவர் பதினேழு முறை ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'The Artist' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைப்படம், ஆகியவற்றுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டது.

Hugo-Won-First-Academy-Awards-in-2012சிறந்த எடிட்டிங், இசைக்கலப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த Art Direction, சிறந்த Visual Effect ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது மார்டின் ஸ்கோர்செசயினின் திரைப்படமான Hugo.

சிறந்த டாக்குமெண்டரி திரைப்படத்துக்கான விருதை, பாகிஸ்தானை களமாக கொண்டு உருவாக்கபட்ட 'Saving Face' திரைப்படம் பெற்றுக்கொண்டது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது ஈரானின் 'A Separation' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை ஜார்ஜ் க்ளூனியின் டிசென்ஸ்டர் திரைப்படம் பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment