சின்ன சுவாமி மைதான அரங்கில், ஒரு பெரிய நிருபர் கூட்டத்தில் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறார் திராவிட். அப்போது, ஒரு நிருபர் மிகவும் புத்திசாலித்தனமாக கேள்வி ஒன்றை தைரியமாகக் கேட்கிறார்.“திராவிட், நீங்கள் ஓர் அற்புதமான ஸ்லிப் ஃபீல்டர். ஆனால், சமீபகாலமாக நிறைய கேட்சுகளைக் கோட்டை விட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய ஓய்வை நிர்ணயம் செய்ததா?”நாலுபேர் முன்னால் இப்படிக் கேட்டு விட்டாரே என்று திராவிட் முகம் சுளிக்க வில்லை. “உண்மைதான். நான் மட்டுமல்ல, எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் கேட்ச்சை ட்ராப் செய்வது என்பது கொடுமையான விஷயம். அவுட் ஆவதைக்கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், கேட்சை நழுவவிட்டால் அந்தக் காயம் அவ்வளவு சீக்கிரம் ஆறாது.”
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் திராவிடுக்கு இணையாக எந்தவொரு வீரரையும் சொல்லமுடியாது. ஆட்ட நேர்த்தி, வெளிநாட்டில் சாதித்தது, அதிக கேட்சுகள் பிடித்த உலக சாதனை என்று டெஸ்ட் காதலர்களின் முதன்மையான வீரராக இருந்தவர் திராவிட். வெளியே போ என்று கிரிக்கெட் வாரியமும் ரசிகர்களும் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் முன்னர் கௌரவத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றிருக்கிறார் திராவிட். சமீபமாக, அடிக்கடி கேட்சுகளை நழுவ விட்டதும் அதிக தடவை க்ளீன் போல்ட் ஆனதும் திராவிடின் இந்த முடிவுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. திராவிடின் வருகைக்குப் பிறகுதான் இந்திய அணி அதிகமாக வெளிநாடுகளில் ஜெயிக்க ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா கிரிக்கெட் தேசங்களிலும் அதிக ரன்களைக் குவித்திருக்கிறார் திராவிட். ஆஸ்திரேலியாவில் இவர் அடித்த ஒரே (இரட்டைச்) சதம், இந்திய அணிக்கு வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு வெற்றியை அளித்தது. எப்படி, சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டின் பிதாமகனோ அதேபோல டெஸ்ட் கிரிக்கெட், ராகுல் திராவிடின் பேட்டை. துல்லியமான ஆட்ட நுணுக்கங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகியவர் திராவிட். ‘குண்டப்பா விஸ்வநாத் எனக்கு நிறைய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஸ்பின்னர்களை எதிர்கொள்கிற வித்தைகளை அவரிடம்தான் கற்றேன்’ என்கிறார் திராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் திராவிட். ‘தம்முடைய விக்கெட்டைப் பாதுகாப்பதில் வல்லவர்’ என்று மெச்சுகிறார் ஜேக் காலிஸ். திராவிடின் வருகைக்குப் பிறகுதான் இந்திய அணி அதிகமாக வெளிநாடுகளில் ஜெயிக்க ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா கிரிக்கெட் தேசங்களிலும் அதிக ரன்களைக் குவித்திருக்கிறார் திராவிட். ஆஸ்திரேலியாவில் இவர் அடித்த ஒரே (இரட்டைச்) சதம், இந்திய அணிக்கு வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு வெற்றியை அளித்தது. எப்படி, சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டின் பிதாமகனோ அதேபோல டெஸ்ட் கிரிக்கெட், ராகுல் திராவிடின் பேட்டை. துல்லியமான ஆட்ட நுணுக்கங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகியவர் திராவிட். ‘குண்டப்பா விஸ்வநாத் எனக்கு நிறைய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஸ்பின்னர்களை எதிர்கொள்கிற வித்தைகளை அவரிடம்தான் கற்றேன்’ என்கிறார் திராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் திராவிட். ‘தம்முடைய விக்கெட்டைப் பாதுகாப்பதில் வல்லவர்’ என்று மெச்சுகிறார் ஜேக் காலிஸ்.
முதல் டெஸ்டில் 95 ரன்கள் எடுத்து கவனம் பெற்றாலும், இந்திய ரசிகர்கள் ராகுல் திராவிடின் திறமையை முழுமையாக அறிந்தது 1999 உலகக் கோப்பையிலும் 2001 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்தான். இங்கிலாந்து உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்தார் திராவிட். அதிரடியாக ஆடாவிட்டாலும் ஒருபக்கம் நிதானமாக ரன்கள் வந்து கொண்டிருக்கும் சலுகையை அணிக்கு அளித்தார் திராவிட். மறக்கமுடியாத 2001 கொல்கத்தா டெஸ்டில் ஆறாவதாக இறங்கிய திராவிட், 180 ரன்கள் அடித்து மாபெரும் வெற்றிக்குத் துணையாக நின்றார். சச்சின், கங்குலிக்கு இணையாகப் புகழ் பெறமுடியாததைப் பற்றி திராவிடுக்கு துளியும் வருத்தமில்லை. ‘எல்லோருடைய கவனமும் அவர்கள்மீது இருந்ததால், என்னால் சுலபமாக ரன்களை அடிக்க முடிந்தது’ என்கிறார்.எந்தவொரு இந்திய கிரிக்கெட்டரிடமும் இல்லாத ஒரு குணம் -அணிக்காகத் தலையையும் கொடுக்கும் மனோபாவம். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்குபவர்கள் டெஸ்டில் அவ்வளவு சுலபமாக முதல் பந்தை எதிர் கொள்ளத் துணியமாட்டார்கள். ஆனால், திராவிட் அணிக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடக்க ஆட்டக் காரராக ஆடியிருக்கிறார். சென்ற வருடம் இங்கிலாந்து டூரில், மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் திணறியபோது, தொடக்க ஆட்டக்காரராக ஆட முன்வந்து இரண்டு செஞ்சுரிகள் அடித்தார். சில வருடங்கள் (உலகக்கோப்பை உள்பட) அணிக்கு ஏழு பேட்ஸ்மேன்கள் அவசியம் என்பதற்காக விக்கெட் கீப்பராகவும் இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட தியாகங்களை வேறு எந்தவொரு இந்திய வீரரும் செய்தது கிடையாது. ‘அடுத்தது என்ன செய்வேன் என்பதை ஐ.பி.எல். முடிந்தபிறகு ஜூனில் அறிவிக்கிறேன்’ என்று ஒரு திட்டத்தோடு பேசுகிறார் திராவிட்.
ராகுல் திராவிட் ஓய்வு பெற்ற கணம் முதல், இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
No comments:
Post a Comment