சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள், முககிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர். விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுகோட்டை ஓசூர் ஆகிய 5தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, குளச்சலில் பிரின்ஸ், கிள்ளியூரில் ஜான் ஜேக்கப், ஓசூரில் மனோகரன், பட்டுக்கோட்டையில் என்.ஆர். ரங்கராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டு பிரிந்து பாஜவுக்கு சென்றுள்ளது.
எனவே 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு, கிள்ளியூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் 32ஆயிரத்து 446 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளருக்கு 3வது இடம் கிடைத்தது. விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி 23ஆயிரத்து 789 ஓட்டுகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லீமா ரோசை தோற்கடித்தார். இங்கு பாஜக வேட்பாளர் 37ஆயிரத்து 763 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். இதனால் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
பார்வையாளர்கள் கருதுகிகுளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் அதிமுக வேட்பாளர் லாரன்ஸ் 11 ஆயிரத்து 821 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பாஜக வேட்பாளர் 35 ஆயிரத்து 778 வாக்குகள் பெற்றுள்ளார். ஓசூரில் காங்கிரஸ் வேட்பாளர் 14 ஆயிரத்து 15 ஓட்டுகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரை தோற்கடித்தார். இங்கு பாஜக பெற்ற ஓட்டுகள் 19 ஆயிரத்து 217. தேமுதிகவுக்கு இது கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். பட்டுகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தேமுதிக வேட்பாளர் 8 ஆயிரத்து 779 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பாஜக 2வது இடத்தை பிடித்தது. இங்கு பாஜக பெற்ற வாக்குகள் 10 ஆயிரத்து 164 வாக்குகள்.
இந்த ஓட்டுகள் இருந்திருந்தால் தேமுதிக வெற்றி பெற்றிருக்கும் என அரசியல்
பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment