Thursday, May 5, 2011

இந்திய வில்லாளிக்கு கிடைத்த அங்கீகாரம்


இந்திய விளையாட்டுகளில் கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடையாது என கூறலாம். நம் நாட்டில் திறம் மிக்க பல வீரர்கள் பல விளையாட்டு துறையில் உள்ளனர்.

வில்லாளி லிம்பா ராமுக்கு சமீபத்தில் கொல்கத்தா விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது. லிம்பா ராம் பற்றி ஒரு சிறு குறிப்பு இந்த பதிவில்.

கிரிக்கெட் தவிர மற்ற விளையட்டு துறையில் உள்ள வீரர்களை மற்றும் வீராங்கனைகளை அறிமுகப்படுத்த ஒரு சிறிய முயற்சி இந்த பதிவு. எனக்கும் கிரிக்கெட் தவிர மற்ற வீர்ர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. எனக்கும் இது மிகவும் பயணுள்ளதாக இருக்கும்.

வாழ்நாள் சாதனையாளர் விருது :
தேசிய வில்வித்தை பயிற்சியாளர் லிம்பா ராமுக்கு கொல்கத்தா விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. இவரது பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

யார் இந்த லிம்பா ராம் :
இந்தியாவுக்காக சர்வதேச மற்றும் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வில்லாளி. 1992 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைப்பெற்ற ஆசிய போட்டிப் பந்தயத்தில், வில்வித்தை உலக சாதனையை சமன் செய்தார்.

இராஜஸ்தான் மாநிலத்தின் உதைப்பூர் மாவட்டத்திலுள்ள சாராதீத்(ஜாதோல் தாலுக்கா) என்ற கிராமத்தில் ஜனவரி 30,1972 ஆம் ஆண்டு பிறந்தார். அவர்கள் குடும்பம் அஹரி பழங்குடியை சேர்ந்தவர்கள். ஏழ்மையின் காரணமாய் குருவி, கெளதாரி போன்ற பறவைகளையும், காட்டிலுள்ள விலங்குகளையும் மூங்கிலால் செய்யப்பட்ட வில்லினாலும் கோரைப்புல் அம்பினாலும் வேட்டையாடுவார் லிம்பா ராம்.

1987 ஆம் ஆண்டு உறவினர் ஒருவர் மூலம், அரசாங்கம் மாக்ராடீயோ கிராமத்தில் வில்வித்தை பயிற்சியளிக்க வில்லாளியர்களை தேர்வு செய்கிற விஷயம் தெரிய வந்தது. இந்த தேர்வில் 15 வயது லிம்பா ராம் இந்திய விளையாட்டு ஆனையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மாத பயிற்சிக்காக தில்லி அனுப்பு பட்டார்.

1987 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைப்பெற்ற தேசிய இளையோர்(junior) வில்வித்தை போட்டி பந்தயத்தில் ஒட்டுமொத்த வாகையன்(overall champion) பட்டம் பெற்றார். 1988 ஆம் ஆண்டில் தேசிய முன்னவர்(senior) வில்வித்தை போட்டி பந்தயத்திலும் ஒட்டுமொத்த வாகையன் பட்டம் பெற்று சீயோல் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக விளையாட தேர்ந்தெடுக்கப் பட்டார். 1989 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த உலக போட்டி பந்தயத்தில் காலிறுதி வரை தகுதி பெற்றார். 1989, ஆசிய கோப்பையில் தரவரிசையில் இரண்டாம் நிலையில் இருந்தார். 1990, இந்தியா பீஜிங் ஆசிய விளையாட்டு போட்டியில் தரவரிசையில் நான்காம் நிலையெடுக்க உதவினார்.

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 1992, பீஜிங்கில் நடைப்பெற்ற ஆசிய போட்டிப் பந்தயத்தில் 30 மீட்டர் பிரிவில் 357/360 என்ற மதிப்பெண் எடுத்து தங்கம் வென்று, வில்வித்தை உலக சாதனையை சமன் செய்தார். 1993, பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் ஒரு புள்ளியில் வெண்கல பதக்கம் தவற விட்டார். 1995, காமண்வெல்த் போட்டிகளில் தரவரிசையில் இரண்டாம் நிலை பெற்றார்.

இந்திய அரசு இவரது விளையாட்டு சாதனைகளை கெளரவித்து 1991 ஆம் ஆண்டு அர்ஜுனா வி
துரு வழங்கியது,

No comments:

Post a Comment