அதேபோல தனது அதிரடி கருத்துக்கள் பேட்டிகள் மூலம் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் குஷ்பு, தற்போது நடந்த முடிந்த தேர்தல் பற்றி தைரியமாக பேட்டி கொடுக்கபோய் தனது பதவியை இழந்திருகிறார். குஷ்பூ கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தலைவராக இருந்து வருகிறார்.
தேர்தலில் திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது பற்றி பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டதற்கு “ திமுகவுக்கு தோல்வியில்லை. மக்கள்தான் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள்” என்று பேட்டி கொடுக்கப்போய், உடனடியாக எதிர்ப்பு வலுத்து விட்டதாம் சங்கத்தில். சங்கத்தின் நிர்வாகக் குழுவே குஷ்பூவை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தியதால், நேற்று மாலை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் குஷ்பூ. தற்போது இந்த பதவிக்கு ராதிகாவை நியமிக்க இருப்பதாக தகவல் கிடைக்கிறது.
No comments:
Post a Comment