சிம்புவின் தரம் குறைந்து விட்டது, அவருடன் நடித்து என் இமேஜை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை பாவனா. "சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழில் தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, வாழ்த்துகள், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஒரு ரவுண்ட் வந்துவிட்ட பாவனா, இப்போது தமிழில் முன்னணி நாயகியாக இல்லாவிட்டாலும் மலையாளத்தில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் சிம்புவின் கெட்டவன் படத்தில் பாவனாவை நடிக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் பாவனாவோ நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சிம்புவுடன் நான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அது உண்மையில்லை. இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதே சிம்பு தான். நான் அவருடன் சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சிம்புவுக்கு இப்போது நன்மதிப்பு இல்லை. நயன்தாராவுடன் சிம்பு ஒன்றாக இருந்தபோது இருவருக்கும் இடையேயான முத்தக்காட்சி சம்பந்தப்பட்ட போட்டோக்கள் வெளியாகி தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டார் சிம்பு. அப்போதே அவருடைய தரம் குறைந்துவிட்டது. இந்தகாலத்தில் ஒருவர் நல்ல பெயர் எடுப்பது மிக கஷ்டம். ஆனால் அதேசமயம் கெட்டபெயரை சம்பாதித்து கொள்வது சுலபம். சிம்பு தனது பெயரை கெடுத்து கொண்டு, இப்போது நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்கிறார்.
சென்னை வரும்போது என்னை வந்து பாருங்கள் என்று சிம்பு கூறினார். ஆனால் நான் அவரை பார்க்கவிரும்பவில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை நான் கெடுத்து கொள்ள விரும்பவில்லை. நல்ல பெயரை தக்க வைத்து கொள்வதையே நான் விரும்புகிறேன்.
ஆர்யா படத்தில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து நடிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். கவர்ச்சியை காட்டி தான் நம்பர்-1 இடத்தை பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் பாவனா.
Love
ReplyDelete