Monday, May 23, 2011
திமுக தோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே கணித்த தயாநிதி மாறன்: விக்கிலீக்ஸ்
சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி, 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது என திமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் நடக்கும் என அக்கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவர் முன்கூட்டியே கணித்துள்ளார்.இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் கேபிளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.திமுக தோல்வி அடையும் என்பதை 2008-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் கணித்துள்ளார்.திமுக மீது படிந்துள்ள ஊழல் கறையை அகற்றாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.மாறன் இவ்வாறு கூறியதாக அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் தகவல் அளித்துள்ளார்.அதிகாரத்துக்கு வருபவர்கள் கவனத்தை இழந்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என தயாநிதி மாறன், டேவிட் ஹூப்பரிடம் தெரிவித்துள்ளார்.விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க கேபிளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment