தமிழகத்தின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொள்வதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று காலை 9.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலில் ஊழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக ஓட்டளித்த தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றி. தமிழக தேர்தல் முடிவுகள் தமிழகத்திற்கு மட்டுமல்லாது, தேசிய அளவிலான அரசியலிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விரைவில் மாறும். அதற்கான திறமை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருக்கிறது. அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு நரேந்திரமோடி கூறினார்.
No comments:
Post a Comment