திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்சினிமாவில் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் மாலை 4.30 மணியளவில் காலமானார்.
இதுபற்றி கேள்விப்பட்ட திரையுலக நண்பர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அலெக்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அலெக்சிற்கு சொந்த ஊரான திருச்சியில் இறுதிச் சடங்குகளை செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் இறுதிசடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அலெக்ஸ் கடந்த ஆண்டு திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியை நடத்தி கின்னஸ் சாதனை படைத்தார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மேஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார். இலங்கையில் நடத்திய மேஜிக் நிகழ்ச்சிக்காக அங்குள்ள திறந்தவெளி பல்கலைக்கழகம் அலெக்சுக்கு 2004ம் ஆண்டுக்கான அல்பிரட் நோபல் பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் அலெக்சுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அபுதாபியில் நடந்த விழாவில் அலெக்சுக்கு செவாலியே விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான பட்டங்கள் மற்றும் விருதுகளுக்கு சொந்தக்காரராக இருந்த அலெக்ஸின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல... லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
நடிகராக வெள்ளித்திரையில் பளிச்சிட்டாலும், மேஜிக்கில் ஏராளமான சாதனைகளை படைத்த அலெக்சுக்கு கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம் என பல துறைகளில் ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment