தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை கைபற்றியது. இதன்மூலம் ஆளும் அதிமுகவிற்கு அடுத்தப்படியாக அதிக இடங்களை கைபற்றிய தேமுதிக கட்சி தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பொறுப்பேற்கிறார்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச்சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை. என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment