Monday, July 18, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம்2


06

பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் :

‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம். எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது.

அந்தக் கல்லூரியில் பிரபல சகோதரர்களில் ஒருவர் எனக்கு கிளாஸ்மெட்டாக வந்தார். அப்போதைய அரசியலில் முக்கிய புள்ளியின் வாரிசு என்பதால் அவருக்கு கல் லூரியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. அவரின் பையிலும் கொஞ்சம் பணமிருந்தது. நாங்கள் இயற்பியல் பாடம் எடுத்திருந்தாலும் தாவரவியலில் வரும் ஒட்டுண்ணி விவகாரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வளமான ஒரு செடியை, மரத்தைப் பற்றிக்கொண்டு அந்த மரத்திற்கு சமமாக அல்லது அதற்கும் மேலாக வளருவதுதான் ஒட்டு ண்ணி. நானும், அந்த அரசியல் வாரிசை ஒட்டுண்ணியாகப் பிடித்துக்கொண்டேன்.

கல்லூரியில் தொடங்கி இன்றுவரை நான் அந்த தொடர்பைப் பயன்படுத்தி வளர்ந்து, எங்கேயோ போயிட்டேன்.

கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் அவர்கள் நடத்திவந்த மங்களகரமான பத்திரிகையில் ஆரம்பத்தில் சேர்ந்தேன். பின்னர் அந்த வாரிசுகள் தயாரித்த மாலையை விற்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கி நான் திறமையானவன் என்பதை காட்டிக்கொண்டேன். அதன்பிறகுதான் தொழில்ரீதியாகவும் நான் அவர்களுடன் என்னை இணைத் துக்கொள்ள முடிந்தது. எனது உண்மையான பெயர் திருப்பதி கடவுளுடையது. ஆனால் எனது அம்மாவின் அப்பா, அதாவது எனது தாத்தா பெயரையும் எனக்குப் பிடி த்த பெயரையும் சேர்த்து புதுப்பெயரை வைத்துக்கொண்டேன். அதாவது ஒரு சேனையை வைத்து உறிஞ்சுவதற்கு சமமாக நானே என் முதலாளியை உறிஞ்சிவிடுவேன் என்பதாலோ அல்லது உறிஞ்சுவதற்கு ஒரு சேனையை வைத்திருந்தேன் என்பதாலோ எனக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்தது.

அந்தப் பெயர் வச்சபிறகு எனக்கு பேரும், புகழும் கொட்டத் தொடங்கிடுச்சு. நான் சினிமாவுல பார்த்து அசந்துபோன அந்த தலைகோதும் நடிகரை சமீப காலத்துல தனியா சந்திச்சுப் பேசவும், அவர் என்னை அண்ணேன்னு கூப்பிடும் அளவுக்கு எனக்கு பேர் கிடச்சது.

ஆரம்பத்துல முதலாளிக்கு கொஞ்சம் விசுவாசமா இருந்து வளர்ந்தேன். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிட்டேன். அந்தப் பிரகாச சேனலில் எனது பங்கு மிக முக்கியமானதாகிவிட்டது. அதில் நிகழ்ச்சி தொகுக்க வருபவர்களை நான் தொகுக்க ஆரம்பிச்சுட்டேன்.

இதற்கிடையில் நான் காதலித்து திருமணம் செய்துகிட்டேன். என் மகன் வெளிநாட்ல படிச்சுகிட்டிருக்கான்.

பலரிடம் பிரியமாக இருந்துவிட்டு, என்னிடம் தொகுக்க வந்தார் அந்தப் பெண். அவர் திருமணமானவர்தான் என்றாலும், என்மீது அந்தப் பெண் காட்டிய பிரியம் ரொம்ப அதிகம். எனக்கு ஏறக்குறைய இரண்டாவது மனைவியாகவே ஆகிவிட்டார் அவருக்கு மகாபலிபுரம் சாலையில் ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பிரியம் என்னிடமிருந்து பணத்தை வாங்கி தனது கணவரின் பிஸினஸுக்காக கொடுத்து வந்ததால் எங்க பிஸினஸை அவரது கணவர் கண்டுக்கவில்லை. இன்றைக்கு பிரியத்திடம் பணம் மட்டுமே சுமார் இருபது கோடியும், சொத்துக்கள் ஐம்பது கோடியாக வசதியாக செட்டிலாகிவிட்டார்கள்.

நான் இந்தப் பிரியத்திடம் தொடர்பு வைத்ததிலிருந்து வீட்டிற்கு சரியாகப் போவதில்லை. நாளடைவில் வீட்டிற்குப் போவதையே நிறுத்திக்கொண்டேன். இதனால் கோபமடைந்த என் மனைவி விவாகரத்து வரை போக, பேசி சமாதானம் செய்து வைத்திருக்கிறேன்.

ஒருவன் உழைக்காமலேயே பணம் கொட்டத் தொடங்கிவிட்டால் அவனின் பொழுதுபோக்குக்கு புட்டியும், குட்டியும்தானே தேவை. இன்றைக்கு சுமார் இருநூறு கோடிக்குமேல் சொத்து. சினிமா உலகில் நான் வைப்பதுதான் சட்டம் என்றாகிவிட்டதால், நடிகைகளை போன் போட்டு அழைத்தால் வந்துவிடும் நிலை. தங்கவேட் டையாடிய நடிகை பக்கத்து மாநிலத்தில் செட்டிலாகியிருந்தாலும் அவர் பெரும்பாலும் இருப்பது சென்னையில்தான். அவருக்கும் சென்னையில் ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து அவரின் கணவருக்கும் கைச் செலவுக்கு பணத்தைத் தருவேன். ஆண்களுக்கு சமமாக சரக்கடிக்கும் அந்த நடிகை என்னை திணறடித்துவிடுவார்.

இப்படி உல்லாசப் பேர்வழியாக நான் திரிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சினிமா சம்பந்த மான பஞ்சாயத்துகளிலும் இறங்கிவிட்டேன். சாதாரணமாக ‘பயந் தாங்கொல்லி’யான நான் பணமும் புகழும் பெருகப் பெருக அடியாட்களின் கும்பலையும் உருவாக்கிக் கொண்டேன். சில வருடங்களுக்கு முன் பரோட்டா கடையில் வேலை செய்து வந்த மணிகண்ட சுவாமிகளின் பெயரைக் கொண்ட ஒரு நபர் என்னிடம் வந்தார். பழக்கடை சார்பாக சின்னச் சின்ன பஞ்சாயத்துகளை செய்து வந்த அவனை எனக்கு கையாளாக வச்சுக்கிட்டேன். என் முதலாளி என்னிடம் ‘அவனை செய்ஞ்சிடு’ என்றால் அவனை தட்டிவைனு அர்த்தம். ‘நெருக்கி செய்’னு சொன்னால் பொளந்துடுன்னு அர்த்தம். அந்த வேலைகளை அந்த மணிகண்ட சுவாமிகள் மூலம்தான் செஞ்சு முடிப்பேன். வெறும் உருட்டுக் கட்டையை மட்டுமே மூலதனமா வச்சுகிட்டு என்கிட்ட வந்த அவனுக்கு இன்னைக்கு கார்கள் மட்டுமே எட்டுக் கோடி ரூபாய்க்கு இருக்கு. எல்லா வெளிநாட்டு கார்லயும் டாப் எண்டு மாடல் வச்சுகிட்டி ருக்கான். பிஸ்லரி வாட்டர்ல தான் வாய் கொப்புளிச்சு முகம் கழுவுறான். இப்போது என் கூடவே கம்பி எண்ணும் வேலை செய்து கொண்டிருக்கும் அவனுக்கு இப்போது எனக்கு சமமான சொத்து இருக்கு. இப்போது அவனும் சினிமா தயாரிப்பாளராயிட்டான்.

இதுவரைக்கும் சினிமா தொடர்பான தொழில் செய்து வந்த என்னோட முதலாளி கொஞ்ச வருசத்துக்கு முன் நேரடியாகவே சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்றது, படம் எடுக்கறதுன்னு இறங்கினார். அதுக்குப் பிறகு என்னோட ஆட்டத்த கேட்கவே வேண்டாம். ஒரு படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தோம்னா அந்தப் படம் எந்த ஊர்ல ஷூட்டிங் நடக்குதோ அந்த ஊருக்குப் போய் இறங்கிடுவேன். அங்க ஓட்டல்ல அந்த நடிகையோட டிஸ்கஷன் முடிச்சுட்டு சென்னைக்குத் திரும்பிடுவேன்.

எங்களுக்கு ஒத்துவராத எத்தனையோ தயாரிப் பாளர்கள நடுத்தெருவுல திரியவிட்டிருக்கேன். எனக்கு கட்டிங் கொடுத்து, குஷிப்படுத்துனாதான் சினிமா விமர்சனத்துல பாராட்டு கிடைக்கும். இல்லன்னா படம் மோசம்தான்.

தொலைக்காட்சியில எனக்கு முழு சுதந்திரம் கிடைச்சதுக்கப்புறம் நானே பினாமி பேர்ல நாலஞ்சு புரோகிராம் எடுத்து நடத்தியதும், எல்லாத்துலயும் எனக்கு கட்டிங் வந்து டணும். என் கூட இருந்த மணிகண்டசாமிக்கு படம் டிஸ்ட்ரி பியூஷன்ல ஒரு ஏரியாவை கொடுத்துடணும். சில நேரங்கள்ல எங்க முதலாளி யார் கூடவாது டிஸ்கஷனுக்குப் போகணும்னு நினைச்சா அதையும் நான் ஏற்பாடு செய்து தரணும்.

ஒரு முறை ஒரு பொண்ணு விஷயத்துல ஒரு «‘ஹாட்டல்ல பெரிய சண்டையாயிடுச்சு. அதை ராஜ தந்திரமாக என் வழக்கறிஞர் நண்பர் ஒருத்தர் பேசி முடிச்சிட்டாரு. ஆனா அவருக்கு மணிகண்ட சாமியால் ஏற்பட்ட அவமானத்தால் என்னை அடிக்க வந்துட்டாரு.

அதேபோல பிரபல சாக்லெட் ஹீரோகிட்ட ஒரு படத்த நடிச்சு கொடுக்கக் கேட்டேன். அவர் முடியாதுன்னு சொல்லிட்டாரு. உடனே அவரை வச்சு யாரும் படம் எடுக்கக் கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போட்டேன். அப்போ நான் சொல்றதெல்லாம் கேட்ட சினிமாக்காரங்க இதையும் கேட்டாங்க. நாலஞ்சு வருஷமா அவருக்கு தமிழ்ல படமே இல்லை.

இதற்கிடையில நான் தனி ஆவர்த்தனம் செய்யறது என் முதலாளிக்கு அரசல் புரசலா தெரிய வந்துடுச்சு. இருந்தாலும் பழைய நட்ப நெனச்சு அவர் என்கிட்ட எதுவும் கேட்கல. நானும் எதுவும் கண்டுக்காம என் வேலைகளைச் செய்து வந்தேன். ஆளுங்கட்சி, மீடியா வேற கேக்கணுமா! எங்க வேணும்னாலும் எதை வேணும்னாலும் என்னால செய்துக்க முடிந்தது.

இதனால என்ன யாராலயும் கட்டுப்படுத்த முடியல. ஆனா இந்த வாழ்க்கையே நிரந்தரம்னு நெனைச்சுட்டேன். ‘மெஷின்’ சினிமா பாட்டு போடற அன்னிக்கு மேடைல வச்சு சினிமா உலகமே என்னைப் பாராட்டுச்சு. இப்ப என்மேல புகார் கொடுக்க ஒட்டுமொத்த சினிமா உலகமும் கிளம்பிடுச்சு. என்னை கம்பி எண்ண கூட்டினு போனபோது எல்லாரும் பட்டாசு வெடிச்சு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடினார்களாம். அத நெனச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏற்கெனவே என்னோட சேஷ்டைகளால என் முதலாளிக்கு என் மேல கொஞ்சம் வெறுப்பு இருந்தது உண்மைதான். அதுமட்டுமின்றி என் முதலாளியோட பொழப்பும் சினிமா சம்பந்தப்பட்டது. இப்போ எல்லா சினிமாக்காரங்களும் என்னை எதிரியா பாக்கிறதால என்னால என் முதலாளி பொழப்பு டிஸ்டர்ப் ஆயிடும்னு அவர் யோசிக்கிறார். அதனால நான் வெளியில் வந்ததும் என்னை அவர் ஒதுக்கி வச்சுடுவாரோன்னு சந்தேகமா இருக்கு. ஆனாலும் இதுவரைக்கும் நான் அவருக்கு செஞ்ச துரோகத்தை அவர் பொறுத்ததே பெரிய விஷயம்தான்.

வெளியே வந்தபிறகுதான் நான் என்ன செய்யறதுன்னு முடிவு செய்யணும். அதுவரைக்கும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment