Wednesday, July 20, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 3

06

நவாப்பை விட இன்றைக்கு அதிக பிரபலமானவர் இவராகத்தான் இருக்க முடியும். அரசியல் பாதையில் பல முன்னேற்றங்களைக் கண்டவர். தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் ஊர் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். ஆனால், இவருக்கு இப்போது இறங்குமுகம். மூன்றாம் இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சோபாவில் அமர்ந்தபடி பழைய விஷயங்களை அசை போட்டுக்கொண்டிருந்த அவரின் மனசாட்சியைத் தட்டிவிட்டோம். மனம் திறந்த அவரின் மனசாட்சியின் வாக்கு மூலம் இதோ:

‘‘எனது சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மின்சாரத்துறையில் டைப்பிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன். என்கூட ராணிப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் அதே டிபார்ட்மெண்டில் வேலைக்குச் சேர்ந்தார். நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். ஆனாலும் எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். சில வருடங்கள் கழிச்சு அவர் வேலையை ராஜினாமா செய்துட்டு சாமியாரா போயிட்டார். நானும் வேலையை ராஜினாமா செய்துட்டு அரசியலுக்கு வந்துட்டேன்.

அந்தக் காலத்துல தமிழக காங்கிரஸ் தலைமை சம்பந்தப்பட்ட நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மின்சாரத்துறைக்கு அனுப்பப்பட்டது. அவற்றை எங்க கட்சியின் அப்போதைய தலைமைக்கு எடுத்துனுபோய் கொடுத்ததுல எனக்கு அங்க நல்ல பேர் கெடச்சுடுச்சு. அதைக் கேள்விப்பட்ட அரசாங்க அதிகாரிகள் என்னை வேலையைவி ட்டு எடுக்கற மாதிரி நெருக்கடி கொடுத்தாங்க. நானும் வேலையை ராஜினாமா செய்துட்டு தலைமையிடம் போய் சொன்னேன். அன்னியிலிருந்து எனக்கு பொற்காலம்தான்.

ஆரம்ப காலத்துல நான் சூளையில தங்கியிருந்தேன். கொஞ்ச தூரத்துலதான் கட்சியின் புரஃபஸர் வீடு இருந்தது. அப்போது எங்க பகுதி வட்டச் செயலர் சாரதிதான் அந்த புரஃபஸர்கிட்ட என்னை அறிமுகம் செய்து வைச்சாரு. அதுக்கப்புறம் நானும், புரஃபஸரும், நகமும், சதையுமாயிட்டோம். அடுத்துவந்த தேர்தல்ல என் சொந்த ஊர்ல சீட் கிடைச்சு எம்.எல்.ஏ.வாயிட்டேன். எங்க கட்சி முதல் முதல்ல சட்டமன்றத்துக்குள் நுழையும்போது நானும் எம்.எல்.ஏ.வா நுழைஞ்சேன் என்பது எனக்கு எப்பவும் பெ ருமை தர்ற விஷயம்.


பழைய தலைமை இருக்கும்போது புரஃபஸருக்கும் இன்னொருவருக்கும் பவர் பாலிடிக்ஸ் ஆரம்பமாயிடுச்சு. அப்போ புரஃபஸரின் பவரை குறைக்க என்னை தன் பக்கம் இழுத்துக்கொண்டார் இன்னொருவர். என்னை இழுத்த அதே வேகத்தில் புரஃபஸரையும் இழுத்து இன்னொரு பக்கத்தில் வைத்துக்கொண்டார். அதன்பிறகு ஒரு சோகத் திற்குப்பின் தலைமை மாறவேண்டிய நிர்பந்தம். புதிய தலைவராக உருவெடுத்தார் அந்த இன்னொருவர். அதுமுதல் இடது, வலது என நான் அந்த இன்னொருவருக்கு எல்லாமும் ஆகிவிட்டேன். அரசியலுக்கு புரஃபஸரும், அந்தரங்கத்திற்கு நானுமாக தலைமையிடம் நெருக்கமாக இருந்தோம். அந்த நெருக்கம் எனது அரசியல் வாழ்க் கையை அசுர வேகத்தில் உயர்த்தியது. அடுத்தமுறையும் சொந்த ஊரிலேயே வெற்றி பெற்று அதற்குப் பிறகு சென்னைக்கு எனது ஜாகையை மாத்திக்கிட்டேன்.

அதுக்கப்புறம் சென்னையிலே சுத்தி சுத்தி பல இடங்களில் ஜெயிச்சேன். சாப்பாடு, சுகாதாரம் என பலவற்றை கவனித்தாலும் எனக்கு பழசை மறக்காம மின்சாரத்தை கவனிக்கும் படி தலைமை வாய்ப்புக் கொடுத்தது. இரண்டுமுறை அதை கவனிச்சப்போதான் நான் ஃபுல்லா செட்டிலானேன்.

தலைமையின் பாணியிலே ஊரில் ஒரு உடன்பிறப்பு, சென்னையில் ஒரு உடன்பிறப்பு என அவர்கள்மூலம் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டேன்.
ஐந்து நட்சத்திர வில்லங்கங்கள் என்றால் அது எனது உடன்பிறப்புதான் என்பது எதிர்க்கட்சியினருக்கும் அத்துபடி. எஸ்.எஸ்.எல்.சி. வரை மட்டுமே படித்திருந்தாலும் அரசாங்க ஃபைல்கள் பார்ப்பதில் நான் ரொம்ப கவனமாயிருப்பேன்.

காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலை சட்டத்துல எங்க கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஜெயிலுக்குப் போய் கஷ்டப்பட்டாங்க. ஆனா, அதை முழுசா பயன் படுத்தி அதையே முதலீடாக்கி மேலும் வளர்ந்தது நான் மட்டும்தான்.

தலைமையை கைத்தாங்கலா நான் அழைச்சுட்டுப் போன காலம் போய் இப்போது என்னையே கைதாங்கலா அழைச்சுட்டுப் போற மாதிரியாயிடுச்சு. அதனால கட்சியும் என்னை கொஞ்சம் தள்ளி வச்சிருக்கு. எனக்கு முதன்முதல்ல கட்சியில கொடுத்த பதவிக்கும், இப்ப கொடுத்திருக்கும் பதவிக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருந்தாலும், வேற வழியில்லை. அமைதியா இருக்கிறேன்.

ஆனா, உடம்புதான் முதுமையில தளர்ந்துடுச்சே தவிர, மனசு இன்னும் இளமையாத்தான் இருக்கு.

வாழ்க்கையை என்னை மாதிரி அனுபவிச்சவங்க ரொம்பவும் குறைவு. மதியம் சாப்பாட்டுக்கும், இரவுச் சாப்பாட்டுக்கும் எனக்கு சரக்கு இருக்கணும். சாதாரணமா எல்லாரும் தனியா சரக்கடிக்கும்போது பாட்டிலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா டம்ளர்ல ஊத்தி தண்ணியோ, சோடாவோ கலந்து குடிப்பாங்க. நான் சரக்கடிக்க உட்கார்ந்தா ஒரே நேர த்துல மூணு டம்ளர்ல சரக்கு ஊத்தி சோடா மிக்ஸ் பண்ணி வச்சிடுவேன். ஒவ்வொன்றையும் எடுத்து அடிப்பேன். இது என்னோட தனி ஸ்டைல். போதையைப் போட்ட தும் அடுத்தது குஷி விவகாரம்தான். ‘தலைவர்’னு பெயர் கொண்ட ஓட்டல்ல எனக்குனு எப்பவும் ஒரு ரூம் இருக்கும். அங்க ஏதாவது பார்ட்டி வந்து எனக்கு காத்துனு இருக்கும். அந்த ரூமுக்குப் போனேன்னா சரக்குப் போட்டுட்டு சாப்பிட்டுட்டு... ஜாலிதான்.

அதேபோல சிவப்பு விளக்கு கார்ல பவனி வந்த பழைய வி.ஐ.பி.யின் துணையை பிராக்கெட் போட்டுட்டேன். அது பெரிய பிரச்னையாயிடுச்சு. அந்தம்மா, பழைய கட் சிக்காரரும், தியாகியுமான ஒருவரின் தங்கை. ஒருமுறை சுகாதாரத்தை கவனிக்கும்போது தாம்பரத்துல கல்யாணமாகாத ஹோமியோபதி பெண் டாக்டர் ஒருத்தர வளைச்சுட் டேன். அது தலைமை வரைக்கும் தெரிஞ்சுப்போய் விவகாரம் ஆயிடுச்சு.

அதேபோல அந்தக் காலத்து நடிகைகள்ல இருந்து இந்தக் காலத்து நடிகைகள் வரைக்கும் யாரக் கேட்டாலும் என்னை பத்தி ஓரளவுக்குத் தெரியும். அந்தளவுக்கு நான் ஃபீல்டுல ஃபேமஸ்.

அதேமாதிரி நான் பவர்ல இருக்கும்போது வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு பார்க்கமாட்டேன். யார் வந்தாலும் உதவிகள் செய்வேன். வேற கட்சிக்காரங்க வந்தாலும் சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்புவேன். என்கிட்ட உதவி கேட்டு வந்து ஏமாந்து யாரும் போனதா எனக்கு ஞாபகம் இல்ல. நான் எல்லாருக்குமே லெட்டர் கொடுப்பேன் என்பதாலேயே பிரியாணி வேணும்னு எழுதிக் கொடுத்தாலும் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுவேன்னு என்னை கிண்டல் பண்ணுவாங்க.

ஒருமுறை திருநெல்வேலியில் ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா. கட்சியின் தலைமையுடன், நானும் போயிருந்தேன். எல்லாருக்கும் பல கருவிகளைக் கொடுத்து வந்த தலைமை, ஒரு காது கேக்குற மெஷின என்கிட்ட கொடுத்து ‘இந்தாய்யா இத நீ வச்சுக்க’ன்னு சொன்னதும் மேடையிலேயே எனக்கு அவமானமா போயிடுச்சு.

அதேபோல ஒருமுறை என் பேர்ல எடுக்கப்பட்ட படத்தைப் பார்க்க தலைமையோடு நானும், மற்ற சகாக்களும் போயிருந்தோம். பாதிப் படத்திலேயே சகாக்கள் எல்லாம் நெளிய ஆரம்பிச்சுட்டாங்க. படம் அவ்வளவு மோசம். ஆனா தலைமையோ படம் முழுக்க பொறுமையா பாத்துட்டு எழுந்து வெளியே வந்துச்சு. படத்த எடுத்தவர் தலைமைகிட்ட, ‘படம் எப்படீங்க இருந்தது?’ன்னு பவ்யமாக கேட்க, ‘இந்த பேர் கொண்ட ஆளவிட இந்த பேர் கொண்ட படம் பரவாயில்ல’ன்னு என்ன காட்டிச் சொன் னதும் சகாக்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமா போயிடுச்சு.

சூளையில வாடகை வீட்ல வாழ்க்கையை ஆரம்பிச்ச எனக்கும், என் உடன்பிறப்புகளுக்கும் இப்ப எவ்வளவு சொத்து இருக்குன்னு எங்களுக்கே தெரியாது. ஆடிட்டரத் தான் கேட்கணும். அதிலும் பினாமி, பிளாக் மணிங்கிற வார்த்தைகள் எல்லாம் எங்களோட வாழ்க்கையில அன்றாடம் பயன்படுத்துற வார்த்தைகளாயிடுச்சு.

நான் இன்னைக்கு வரைக்கும் ஆட்களை வச்சு மிரட்டுறது, ரவுடித்தனம் பண்றதுன்னு எதையும் செய்யமாட்டேன். எல்லாத்தையும் என் தம்பி பார்த்துக்குவான். அவனுக்குத் துணையா அந்த மூன்றெழுத்து தெலுங்கு தாதாவ செட் பண்ணி விட்டுட்டேன். என் விவகாரங்கள்னா அத அவன்தான் செய்வான்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு. அதேபோல என்னோட தேவைகளை எல்லாமும் கரெக்டா செஞ்சி என்னை சந்தோஷமா வச்சுப்பான் அவன்.

மூணு மாசம் முன்னால வரைக்கும் எந்த நேரமும் கூட்டமாயிருந்தது என் வீட்டு வாசல். போலீஸ்காரங்க கேட்டைத் திறந்துவிடுவாங்க. இப்ப தலைமை என்ன கழற்றிவிடறது புரிஞ்சுக்கின உடன்பிறப்புகளும் என்னை கண்டுக்கிறதில்ல.

மக்கள் ஓய்வு கொடுத்ததா தலைமை சொல்லினு இருக்கு. தலைமை ஓய்வு கொடுத்துடுச்சுன்னு நான் சொல்லிகினுயிருக்கேன்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment