மலேசியாவில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோலாலம்பூர் : மலேசியாவின் ஜொகூர் பாரு நகரில் உள்ள ராஜமாரியம்மன் கோவிலில், நூறாவது ஆண்டு விழாவும் மகா கும்பாபிஷேகமும் சமீபத்தில் நடந்தன. மலேசியாவின் ஜொகூர் மாகாணத் தலைநகர் ஜொகூர் பாரு நகரில், 100 ஆண்டுகளுக்கு முன், ராஜமாரியம்மன் கோவில், அப்பகுதி தமிழர்களால் கட்டப்பட்டது. கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த அப்பகுதி சுல்தான், சர் இபுராகிம் இப்னி அபுபக்கர், அதற்கான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் 5,000 மலேசிய பணமும் அளித்தார். ராஜாவின் நன்கொடையால் இக்கோவில் உருவானதால், இதற்கு "ராஜ` என்ற அடைமொழி ஏற்பட்டது. இக்கோவிலின் 100வது ஆண்டு விழா மற்றும் மகா கும்பாபிஷேகம், கடந்த 12ம் தேதி நடந்தது. மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள்13ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சிகளில், தமிழகத்தில் இருந்து இளசை சுந்தரம் மற்றும் பேரா. அரங்க நெடுமாறன், சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment