Wednesday, July 20, 2011

ஹிலாரி கிளிண்டனை கவர்ந்த ஜெயலலிதா;மாநில முதல்-அமைச்சரை சந்திப்பது இதுவே முதல்முறை


அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அணுசக்தி ஒப்பந்தம், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றி ஹலாரி கிளிண்டன் முக்கிய பேச்சு நடத்தினார்.
ஹிலாரி கிளிண்டன் இன்று மாலை சென்னை வருகிறார். மாலை 4.10 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்துப் பேசுகிறார். ஹிலாரி சென்னையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
அமெரிக்காவில் இருக்கும் போதே அவர் தனது இந்திய சுற்றுப் பயண திட்டத்தில் சென்னையைச் சேர்த்தார். இதனால் டெல்லியைத் தவிர ஹிலாரியின் சுற்றுப் பயணத்தில் சென்னை மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதில் ஹிலாரி அதிக ஆர்வம் காட்டினார்.
இலங்கை பிரச்சினை, தேசிய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவரது துணிச்சலான பேச்சும், நடவடிக்கையும் ஹிலாரிக்கு மிகவும் பிடித்து இருந்தது. இந்தியாவில் ஒரு பெண்மணி மக்கள் மனதில் இடம் பிடித்து இவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருக்கிறாரா? என வியப்படைந்தார்.
முன்பு ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழக கடற்கரையை சுனாமி பேரலைகள் தாக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த கிளிண்டன் இந்தப் பணிகளை நேரில் வந்து பார்த்து பாராட்டினார். தனது அறக்கட்டளை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவினார். அவரது மனைவியான ஹிலாரி கிளிண்டனை இதுவும் கவர்ந்தது.
அமெரிக்க அதிபருக்கு அடுத்ததாக சக்தி வாய்ந்த வெளியுறவு துறை மந்திரி பொறுப்பு வகிக்கும் ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவை சந்திக்க ஆர்வமாக இருப்பதற்கு அவரது அறிவாற்றல், நிர்வாக திறன், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே காரணம் என்று நியூ யார்க் பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உயர் பதவி வகிக்கும் ஒருவர் இந்தியாவின் மாநில முதல்- அமைச்சரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.ஹிலாரி கிளிண்டனை சந்திக்கும்போது இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி முக்கியமாக பேச ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து பொருளாதார தடை விதிப்பது, இலங்கை போருக்குப்பின் அங்கு தமிழர்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காண சர்வதேச நாடுகள் உதவியுடன் நடவடிக்கை எடுப்பது பற்றி பேச திட்டமிட்டு இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமெரிக்கா முன்வர வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொள்வார்

No comments:

Post a Comment