Thursday, July 28, 2011

950 ஏக்கர் நில மோசடியில் மாஜி திமுக அமைச்சர்

அடுத்தவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அடாவடியாக பறித்து ஏப்பம் விட்டவர்கள் எல்லாம், இப்போது வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்கும் சிறப்பு பிரிவு’!

d1இந்தப் பிரிவே, தி.மு.க. முன்னணியினரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்டது என்று நினைக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர், இதை எதிர்த்து ஆகஸ்ட் 1&ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்குப் பின்பும், ஆகஸ்ட் 1&ம் தேதிக்குள் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்று கலைஞருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட தி.மு.க. பிரமுகர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?
தி.மு.க.வின் பலம் வாய்ந்த மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் மீது, நில மோசடி வழக்குத் தொடரப்பட்டு விட்டது. அடுத்து யார் மீது? என்று மீடியாக்கள் தேடிய போது, ஐந்தாறு மாஜி மந்திரிகளின் பெயர்கள் வரிசையில் வந்து நிற்கின்றன. அதில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் பொங்கலூர் பழனிச்சாமி.
கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர். கடந்த ஆட்சியில் அமைச்சராக வலம் வந்தவர்.d2இவருக்குத்தான் இந்த நில அபகரிப்புச் சட்டத்தில் அதிக நெருக்கடி இருக்கும் என்று தெரிகிறது.
கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் இருக்கிறது கோவைப்புதூர். இந்த இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கரில், தனித்தனி பங்களா வீடு கட்டித்தரும் திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியது. இந்தக் குழுமத்தின் பெயர் ‘ராக் இண்டோ’. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு நெருக்கமானவர் பிரபாகர் ரெட்டி. இவருக்குச் சொந்தமானதுதான் இந்த ராக் இண்டோ நிறுவனம். இந்த நிறுவனம் தான் கோல்ப் கிரவுண்ட், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட, ‘வில்லா’ குடியிருப்புத் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியது. இதற்காக, கோவைப்புதூரில் இருக்கும் நிலங்களை வாங்கத் தொடங்கியது.
ஒரு பங்களாவின் விலை, 70 லட்சம் ரூபாயில் தொடங்கி ஒரு கோடி ரூபாய் வரை முடிகிறது. இந்தக் குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்க, நிலத்தை வாங்க முற்பட்ட பிரபாகர் ரெட்டிக்கு உதவுமாறு, d3பொங்கலூர் பழனிச்சாமியிடம் கேட்டுக் கொண்டார் ஆற்காடு வீராசாமி. எவ்வளவு முதலீடு என்று தெரிந்து கொண்டதுமே, களத்தில் இறங்கினார் பொங்கலூர் பழனிச்சாமி. ‘உங்களுக்குத் தேவையான நிலங்களை நானே வாங்கித் தருகிறேன்’ என்று இறங்கி, கிட்டத்தட்ட 950 ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொடுத்தார்.
அந்தப் பகுதியில் இருப்பது அத்தனையும் விவசாய நிலங்கள். ஒரு ஏக்கர் முதல் ஒன்பது ஏக்கர் வரை வைத்திருந்த விவசாயக் குடும்பங்களை அழைத்துப் பேசி, நிலம் வாங்கப்-பட்டது.
ஒரு ஏக்கர் 1.5 லட்சம் ரூபாய் என்ற மதிப்பில், நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை ஏக்கருக்கு கொடுக்கப்பட்டது. நிலத்தை வாங்கும் போது, ‘பவர்’ வாங்கியவர்கள் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பாரி, மருமகள் மற்றும் தனது உறவினர்கள் மூலமாகவே வாங்கிக் கொண்டார். அடுத்து, தற்போது சிறையில் இருக்கும் மாவட்ட தி.மு.க. பிரமுகர் மீன் கடை சிவா பெயரிலும் அதிகப்படியான பவர் வாங்கப்பட்டது. இவை அத்தனையும் 6 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை தனித்தனியாக, ‘ராக் இண்டோ’ நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.
இந்த நிலங்களை வாங்கும் வரை இங்கே குடியிருப்புப் பகுதி வருகிறது என்று எந்த விவசாயிக்கும் தெரியாது. எல்லா நிலப்-பரப்பையும் வாங்கி, மொத்தமாக பொங்கலூர் குழுமம் விற்ற பிறகுதான், ராக் இண்டோ, குடியிருப்பு வருவது தெரிந்தது. இந்த நிலத்தை விற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பண விவகாரத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் என்று இப்போது தெரிய-வந்துள்ளது. இவர்கள் கொடுக்கும் புகாரிலேயே பொங்கலூர் குழுமத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகள் பாய்ச்சலாம். ஆனால், அதற்கெல்லாம் மேலாக, வலிய வந்து பொங்கலூர் குடும்பமும், அவரது கூட்டாளிகளும் விழுந்து இருப்பதுதான் ஆளுங்கட்சியை அசர வைக்கிறது.
அதாவது, ராக் இண்டோவுக்கு நிலம் கொடுக்கப்பட்ட பின்னர், 950 ஏக்கர் நிலப்பரப்பில் 17 வாய்க்கால்கள் இருந்தன. இவை அனைத்தும் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானவை. அதே நிலப்பரப்பில், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களும் இருந்தன. இதையெல்லாம் விட, அந்த நிலப்பரப்புக்குள், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலமும், மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட மயானமும் இருந்தன. இவை அனைத்தும், ராக் இண்டோவுக்குத் தாரை வார்க்கப்பட்டன.
எப்படி..? வாய்க்கால்கள் எல்லாம் சமன்படுத்தி, அதை நிலத்தோடு சேர்க்க, 13 அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வனத்துறை நிலத்தை லபக்க வேண்டுமே. அதற்கும் ஓர் அரசு உத்தரவு. வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை லபக்க வேண்டு-மென்றால், மத்திய அரசின் வனத்துறையிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தடையில்லாச் சான்று வாங்க வேண்டும். இது எல்லாம் ஒரே வருடத்துக்குள் சாத்தியமாகியது. ஆனால், வனத்துறையிலிருந்து மட்டும் ‘ராக் இண்டோ’ நிறுவனத்துக்கு, நோட்டீஸ் அனுப்பிd4 வைத்ததாக கூறப்படுகிறது. அதைக் கண்டுகொள்ளாமல், இவர்கள் குடியிருப்புக்கான பணியைத் தொடங்கி விட்டனர்.
மேலும், இந்தத் திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு, அதற்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா என்று பரிசீலனை செய்து கொண்டிருந்த நேரத்திற்குள், அங்கே ‘மாடல்’ பங்களா கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இது தெரிந்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
நோட்டீஸ் வந்த மறுநாள், சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கு, பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ. வட்டாரத்தில் தெரிவிக்கப்-படுகிறது. அதுமட்டுமில்லாமல், நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும். உடனே, அத்திட்டத்துக்கு அனுமதியும் தர வேண்டும் என்று அரசுத் தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறகு நேரடியாகவே, முன்னாள் முதல்வரின் செயலாளரான ராஜ-மாணிக்கம், சி.எம்.டி.ஏ. அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, கோவை ‘ராக் இண்டோ’ நிறுவனத்தின் அனுமதிக்-கான விண்ணப்பத்தில், எந்தவித இடையூறுகளையும் செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்-பித்திருக்கிறார். அதன் பின்னரே, அங்கே கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின.
d5இந்த மோசடிகள் குறித்து, அங்கிருக்கும் பொது நல அமைப்புகள், குறிப்பாக கால்வாய்களை தூர்த்துவிட்டு, நிலத்துடன் சேர்த்து கிரயம் செய்த விவகாரத்தை புகாராக அனுப்பியும், கோவை மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமலும் ஒதுங்கிக் கொண்டது. இது தொடர்பாக நிலத்தை வாங்கி, இன்னும் பணம் செட்டில் ஆகாதவர்களிடம் புகார் வாங்கும் பணிகள் துரிதமாக நடக்கிறது. இந்த வழக்கு இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் வெடிக்க இருக்கிறது. அதுவும் தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடக்கும் நேரத்தில், இது பொங்கலூராருக்கு படைக்கும் ’பொங்கல்’ என்று தி.மு.க.வினரே கிண்டலடிக்கும் நிலை இருக்கிறது. வழக்குப் பதிவு செய்தால், பொங்கலூரார் மட்டுமில்லை அவரது குடும்பத்தினர் அனைவரும் சிக்கப்போவது உறுதி என்கிறது கோவை வட்டாராம்!

நன்றி:தமிழக அரசியல்

No comments:

Post a Comment