Thursday, October 6, 2011

2011 இற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் சுவீடன் கவிஞர்

2011 இற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு சுவிடன் நாட்டை சேர்ந்த கவிஞர் தோமஸ் தான்ஸ்ட்ரோமெருக்கு (ThomaS TranStromer க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய, உள் உலகம் பற்றிய யதார்த்தமான கண்டுபிடிப்புக்கள், துண்டிக்கப்பட்ட இயற்கையுடன் அவை கொண்டுள்ள உறவுகள் தொடர்பான படடப்புக்கள் சுமார் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் தனது சுருக்கமான எழுத்து நடையின் ஊடாக கொண்டு வரும் ஒளி கசியக்கூடிய காட்சி அமைப்புக்கள், நிஜமாகவே எம்மை அவற்றை நோக்கி அணுக செய்துவிடும் என்கிறார்கள் நோபல் கமிட்டிக்குழுவினர்.

அவருடைய Windows and Stonnes (1966), The Great Enigma (2004) ஆகிய படைப்புக்கள் உலக பிரசித்தம் வாய்ந்தவை. 1990 களில் ஸ்ட்ரோக் நோயினால் பாதிக்கப்பட்ட அவர், தனது பாதி உடல் இயங்கு திறனை இழந்ததுடன், பேசும் திறனையும் இழந்தார். எனினும் தொடர்ந்து எழுத்துப்பணியை மேற்கொண்டார்.

தோமஸின் கவிதைகளும், நாவல்களும் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாக இருந்ததில்லை. கற்பனையான நவீன உலகம் மற்றும் யதார்த்தமான உலகின் அதிசயங்களை சார்ந்ததாகவும், தினசரி வாழ்க்கையை மையப்படுத்தியும், அவை காணப்படுகின்றன. அவருடைய கவிதைகளை வாசிக்கும் போது நிஜமாகவே, ஓர் இலகுவான மற்றும் வசிக்கரமான காட்சியமைப்பு எம்முள் தோன்றிவிடும் என்கிறார்கள் தோமஸின் ரசிகர்கள்.

கடந்த 10 வருடங்களில், ஐரோப்பியர் ஒருவர் இலக்கியத்துக்காக பெற்ற 8 வது நோபல் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜேர்மனிய நாவல் எழுத்தளர் முல்லெர் 2009 இலும், பிரெஞ்சு எழுத்தாளர் ஜே.எம்.ஜி 2008 இலும், பிரிட்டிஷ் நாவல் எழுத்தாளர் டொரிஸ் லெஸிங் 2007 இலும் இலக்கியதுறையில் நோபல் பரிசினை வென்றிருந்தனர்.

No comments:

Post a Comment