2011 ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு, இஸ்ரேலை சேர்ந்த விஞ்னானி டான் ஷெஷ்ட்மான் (Dan Shechtman) க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
QuasiCrystals (பகுதி படிகம்) எனும், புதிய இராசயன கட்டமைப்பை கண்டுபிடித்ததன் மூலம், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் கட்டமைப்பு வடிவங்கள் புதிய கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தியிருந்தார் டான் ஷெஷ்ட்மான்.
இதற்காக அவருக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (10 million-kronor) பெறுமதியான நோபல் பரிசு வழங்கப்படுவதாக, ஸ்டாக்ஹோல்மில் உள்ள நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது.
ஹாபியாவில் உள்ள இஸ்ரேல் தொழில்நுட்ப கல்லூரி விஞ்னானி டானியெல் ஷெட்ஷ்மென் (70).
அவருக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது 'இஸ்ரேல் மக்களுக்கும், உலகில் உள்ள அனைத்து ஜூத மக்களுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளதாக இஸ்ரேலிய பிஅரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு கூறியுள்ளார்.
உலகின் 7.8 மில்லியன் மக்களை மாத்திரம் கொண்டுள்ள இஸ்ரேல் வென்றுள்ள 10 வது நோபல் பரிசு இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 1994ம் ஆண்டு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து, தற்போதைய இஸ்ரேல் அதிபர் ஷைமொன் பெரெஸும் நோபல் பரிசு பெற்றிருந்தார்.
No comments:
Post a Comment