2011 இன் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின், சால் பெர்முட்டெர்,
அடம் ரைஸெஸ் மற்றும், ஆஸ்திரேலியாவின் பிரையன் ஷெமித் எனும் மூன்று பௌதீயகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் விரிவாக்கம் தொடர்பிலான அவர்களது ஆய்வுகளுக்காக இந்நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சம் விரிவடைவதை, இருண்ட சக்தி (Dark Energy) எனும் காரணியே, முடுக்கிவிடுவதாக இவர்களது ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், இருண்ட சக்தியின் (Dark Energy) இருப்பும், அது ஏற்படுத்தும் உந்துதலுமே பிரபஞ்சம் விரிவடைதலுக்கு காரணம் எனவும் தெரிவிக்கும் அவர்களது ஆய்வுகள், பிரபஞ்சத்தின் முக்கால்வாசி பகுதிகளை இருண்ட சக்தியே உருவாக்கியுள்ளது எனவும் கூறுகின்றன.
சூப்பர் நோவா எனப்படும் விண்மீன்கள் வெடித்து சிதறும் நிகழ்வுகளுக்கு இடையிலான தூரத்தை அவதானித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள், பிரபஞ்சத்தின் இயங்கு நிலை தொடர்பிலான ஆய்வுகளுக்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை, மருத்துவயிலலுக்கான, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து. நாளை புதன் கிழமை இராசயனவியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன.
1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசுகள், மருத்துவம், பௌதீகவியல், இராசயனவியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கும், உலக நாடுகளிடையே சமாதானத்திற்காக பாடுபட்டவர்களுக்காகவும் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment