Wednesday, January 4, 2012

நமது வேதத்தின் சாரம்

லோக க்ஷேமம்' என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதிகர்மாக்களாலும் சுஷ்மமாக ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல.
வேதாந்தத்தை பார்த்தால் தான் சகல தேசத்தில் உள்ளவர்களுக்குமேபொதுப்படையான மகோன்னத தத்துவங்கள் கிடைக்கின்றன.இந்தத்தத்துவங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மவ்ருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி இவர்களுக்குவந்தது?
அவர்கள் இங்கே வந்த போது வேதரட்ஷணமே ஜீவியப்பணி என்றுஒரு கூட்டம் இருந்ததால் தான் 'இதென்ன இப்படி ஆயுள்முழுவதையும் அற்பணிக்கும் படியான புஸ்தகம்' என்று அவர்களுக்குஒரு ஆர்வம் பிறந்து அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைதெரிந்து கொண்டார்கள்.
குறிப்பாக, உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (cultures)இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்துகொண்டார்கள்.லோகத்துக்கு எல்லாம் உபயோகம் என்பதுமட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத culture தான் ஆதியில்இருந்தது என்பதே ஏன் அபிப்ராயம்.
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களுக்கும் இந்த அபிப்ராயம்வரலாம். எல்லோருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாகஅறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் சர்வமத சமரச பாவனைஎல்லாம் வந்து விடுகிறது. அது தவிர, தன தத்துவங்களால் எந்தமதங்களும் தங்களை உயர்த்தி கொள்ளவும் முடிகிறது.
வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்யும் ஒருகூட்டம்நம் தேசத்தில் இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு அதில் எப்படிபிடிப்பு ஏற்படும்?
உதவாத விஷயம் என்று நாமே ஒன்றை விட்டு விட்டால்,மற்றவர்களுக்கு அதன் தாத்பர்யங்களை அறிவதில் எப்படி ஈடுபாடுஉண்டாகும்?
ஜாதி அழிவதை பற்றி எனக்கு கவலை இல்லை. லோகக்ஷேமம்போகிறதே என்று தான் கவலைபடுகிறேன். வேதரட்ஷணம் விட்டுபோனால் இந்த பரம்பரையை மறுபடி உண்டு பண்ண முடியாதேஎன்றுதான் கவலை படுகிறேன்.
நம் தேசத்தில், சகல ஜாதியாரை உத்தேசித்து மட்டுமின்றி, எல்லா தேசமக்களையும் உத்தேசித்து வேத பரம்பரையை தொடர்ந்து இருக்கப்பண்ணவேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு.
லோகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே நமதுவேதத்தின் சாரம்.

No comments:

Post a Comment