கருணாநிதிக்கு பட்டகாலிலேயே படுகின்ற நேரம் இது போலிருக்கிறது... திகார் சிறையிலிருந்து கனிமொழி வந்தபிறகு சமீபத்தில்தான் சற்றே ரிலாக்ஸ் ஆனார். ஆனால் அதற்குள் அடுத்தகட்டமாக செல்வி மீது குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பிக்க, கலங்கிப் போயிருக்கிறார்...
ரெய்டு புயல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்க, அதன் வேகத்தை இன்னும் கூட்டும் விதமாக மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகாரைக் கொடுத்திருக்கிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் உறுப்பினர் பதவி வாங்கித் தரு வதாக தன்னிடம் 69 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக செல்வி மீது அந்தப் புகாரில் குற்றம்சாட்டியிருக்கிறார் நல்லதம்பி. இதையடுத்து, செல்வி மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்னையில் என்ன நடந்தது என்பது குறித்து அறிய நல்லதம்பியிடம் பேசினோம்...
‘‘எனது அண்ணன் காளிமுத்து மறைவிற்குப் பின்பு, கடந்த 2006-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சின்னையனோடு கருத்து மோதல் ஏற்பட்டது. அதனால், கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தேன். ஆனால், அங்கு எனக்கு வட்டச் செயலாளர் பதவிகூட கொடுக்கவில்லை. அண்ணா அறிவாலயத்தில் எனக்கும் வேளச்சேரி தி.மு.க. பகுதிச் செயலாளரான ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் கருணாநிதியின் மகள் செல்வியின் உதவியாளரான ரமேஷை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர், ‘டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கான ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதில் ஒரு பணியிடம் செல்வி அக்காவுக்கான கோட்டா. ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், செல்வியின் மருமகன் ஜோதிமணியின் அக்கா உமாமகேஸ்வரி மூலம் செல்வியை சந்திக்க ஏற்பாடு செய்வேன்’ என்று கூறினார்.
2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் உமாமகேஸ்வரியை சந்தித்தேன். எனது பயோடேட்டாவை வாங்கிக்கொண்டு மொத்தத் தொகையான ஒரு கோடியில் 25 லட்சம் உடனடியாக வேண்டும் என்றார். மேலும் என்னை செல்வியிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘உங்க விஷயத்தை ராஜமாணிக்கத்திடம் சொல்லி முடித்துவிடுகிறேன். நான் சொல்லும் போது அவரை நீங்கள் சந்தித்தால் போதும்’ என்று செல்வியே கூறியதால், என் மனைவியின் நகைகளை அடகுவைத்து அடுத்த இரு தினங்களில் அதே ஓட்டல் அறையில் உமா மகேஸ்வரியிடம் ஒரு தொகையைக் கொடுத்தேன். அப்போது வேளச்சேரி ரவி, ரமேஷ் ஆகியோரும் அங்கு இருந்தார்கள்.
தொடர்ந்து, எனது நண்பர்களிடம் கடன் வாங்கி, செம்மொழி மாநாட்டிற்கு முன்னால் பல தவணைகளாக மொத்தம் 50 லட்ச ரூபாயும், மாநாட்டிற்குப் பிறகு 19 லட்ச ரூபாயும் அதாவது 69 லட்சத்தைக் கொடுத்தேன். இருந்தும் ராஜமாணிக்கத்தை என்னால் சந்திக்கவே முடியவில்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் நடந்தபோது எனக்குப் பதவியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை இருமுறை அவரது வீட்டில் சந்தித்து மனு கொடுத்தேன். அவர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை. அழகிரியிடம் கேட்கலாம் என முயற்சித்தபோது, அவர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக ஏற்கெனவே ஒருவரை பரிந்துரை செய்துவிட்டதாகக் கூறினார்கள். முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க பலமுறை முயற்சித் தேன். அவரது உதவியாளர் சண்முகநாதனிடம் நான் ஏமாந்த கதையைச் சொன்னபோது, அவரோ ‘இப்பவே இருபது பேர் கியூவில் நிற்கிறார்கள்... காளிமுத்து தம்பி என்பதால் உங்க பெயரைச் சேர்க்க முயற்சிக்கிறேன்’ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
‘பதவிதான் கொடுக்கலை, நான் கொடுத்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்’ என்று உமாமகேஸ்வரியிடம் கேட்டதற்கு, சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. இதுதொடர்பாக கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோரையும் சந்தித்து ‘உதவி செய்ய முடியுமா?’ எனக் கேட்டேன். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் ஸ்பெஷல் பி.ஏ.வாக பணிபுரிந்த சண்முகம்தான் உமாமகேஸ்வரியின் கணவர். எனவே, அவரையும் போய்ப் பார்த்தேன்... ஒரு பயனும் இல்லை. வேளச்சேரி ரவியிடம் கேட்டதற்கு, பல இடங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழித்தார். ஒருகட்டத்தில், ‘இப்படியே போனால் போலீஸில் புகார் செய்துவி டுவேன்’ என்று நான் சொல்ல, ‘புகார் கொடுத்தால் உன்னை க்ளோஸ் செய்துவிடுவேன்’ என ரவி மிரட்டினார். வேறு வழியில்லாமல்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன்’’ என்றார் நல்லதம்பி.
இதற்கிடையே நல்லதம்பி புகார் கொடுத்த மறுநாள் செல்வி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘நான் உங்களை சந்தித்ததே கிடையாது. எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான பொய்ப் புகார் கூறியுள்ளீர். அந்தப் புகாரை திரும்பப் பெறுவதோடு, என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். எனது பெயரைக் கெடுத்ததற்காக நஷ்டஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். எதிர்காலத்தில் என்னைப்பற்றி அவதூறு பேசினால், உங்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் வழக்குத் தொடருவேன்’’ என்றும் அந்த நோட்டீஸில் எச்சரித்துள்ளார் செல்வி.
செல்வியின் இந்த மறுப்பு குறித்தும் நல்லதம்பியிடம் கேட்டோம்...
‘‘செல்வி என்னை சந்தித்தாரா, இல்லையா என்று உமா மகேஸ்வரியிடம் விசாரித்தால் தெரியும்! உமா மகேஸ்வரியையே ஓரிரு முறை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தி ருக்கிறேன் என்று செல்வி கூறியிருக்கிறார். தனது மருமகனின் அக்காவையே ஓரிரு முறைதான் பார்த்திருப்பதாகப் பொய் சொல்பவர், என்னை மட்டும் பார்த்ததையா ஒப்புக்கொள்வார்? நான் அவரை மிரட்டியதாக வக்கீல் நோட்டீஸில் கூறியுள்ளார். ஆனால், ‘வழக்கை வாபஸ் வாங்கு, இல்லையெனில் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கே ட்பேன்’ என்று அவர்தான் என்னை மிரட்டியிருக்கிறார்’’ என்றார்.
அடுத்து இவ்விவகாரத்தில் அதிகம் பேசப்படும் உமா மகேஸ்வரி குறித்து விவரம் அறிந்த சிலருடன் பேசினோம்...
‘‘உமா மகேஸ்வரி வேறுயாருமல்ல செல்வியின் மருமகனான டாக்டர் ஜோதிமணியின் உடன்பிறந்த அக்காதான் அவர். கருணாநிதியின் குடும்ப விவகாரங்கள் பலவற்றில் தனது தலையை நுழைத்து சமாதானம் பேசும் அளவுக்கு இருப்பவர்தான் டாக்டர் ஜோதிமணி. சமீபத்தில் அழகிரி - ஸ்டாலின் இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்ட போதுகூட, அவர்கள் இருவருக்குமிடையே முதல்கட்டமாக சமாதானம் பேசியவர் இவர்தான்.
ஜோதிமணி பெயரிலும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. ஆனால் அவரது பவர் காரணமாக அவை அனைத்தும் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் போடப்பட்டன.
அவர்மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டாக சொல்வது சென்னை கிரீன்வேஸ் ரோடு அருகே சுமார் 12 கிரவுண்டு நிலத்தை - வேலூர் கல்விப் பிரமுகர் ஒருவரது இட த்தை வாங்கி, சென்னையிலேயே மிகப் பெரிய வீட்டைக் கட்டி வருகிறாராம் என்பதுதான்.
ஜோதிமணி செல்வியின் மருமகன் ஆனதில் இருந்தே ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறந்து வருகிறார் உமா மகேஸ்வரி. இவரின் உதவியாளரான ஆனந்த் என் பவர்தான் இவருக்கு எல்லாமாக இருந்து மிரட்டல் உருட்டல் வேலைகளைச் செய்து வருபவர். கடந்த ஆட்சியின் போதே மணல் குவாரி உட்பட பல்வேறு புகார்கள் உமாமகேஸ்வரி மீது சொல்லப்பட்டது. சாதாரண ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த ஆனந்த், இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர். ஸ்கோடா, பி.எம்.டபிள்யூ என எல் லாவிதமான கார்களும் இவர் வீட்டில் அணிவகுத்து நிற்கிறதாம். உதவியாளரே இப்படியென்றால் உமா மகேஸ்வரி மற்றும் ஜோதிமணி வளர்ச்சி பற்றி சொல்ல வேண்டுமா!’’ என்றார்கள்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமா மகேஸ்வரியை நேரில் சந்தித்தோம். ‘‘வேளச்சேரி ரவி என்பவர் மூலம் நல்லதம்பி எனக்கு அறிமுகம் ஆனார். ஒருமுறைதான் அவரை சந்தித்தேன். அப்போது செல்வி எங்களுடன் இல்லை. வேளச்சேரி ரவிக்கும், நல்லதம்பிக்கும் என்ன கொடுக்கல், வாங்கல் என்று எனக்குத் தெரியாது. கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நான் யாருக்கும், எவரிடத்திலும் பரிந்துரைக்காகச் சென்றதில்லை. அவர்களது பிரச்னையில் என்னையும், செல்வியையும் ஏன் சிக்க வைக் கிறார்கள் என்று தெரியவில்லை’’ என்றார்.
இதற்கிடையே எஃப்.ஐ.ஆர். பதிவான மறுநாள் தனது கணவருடன் அப்பாவை சந்தித்தார் செல்வி. அப்போது கருணாநிதி, ‘அம்மா நீயுமா...’ என்று நா தழுதழுத்தார்.
ஆனால் வழக்கு வேகமெடுப்பதைப் பார்த்தால், செல்வியும், அவரது உறவினர்களும் அவ்வளவு சீக்கிரம் தப்பிவிட முடியாது என்றே தெரிகிறது!
No comments:
Post a Comment