போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட சாந்தவேலின் உடல் 16-ந் தேதி மாலை, திருவேற்காடு திருவேங்கட நகரில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. சாந்தவேலின் உடலைப்பார்த்து உணர்ச்சிவயப்பட்ட இளைஞர்கள், அந்தப்பகுதியில் இருக்கும் மலையாளிகளின் கடைகளையும் நிறுவனங்களையும் தாக்கத் தொடங்கினர். பதட்டம் பரவியதால் போலீஸ் டீம் அந்தப் பகுதி முழுக்கக் குவிக்கப்பட்டது.
இந்த சூழலில் 19-ந் தேதி காலை 9 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வேல்முருகனும் தலைவர் தீரனும் சாந்தவேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அடுத்து ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா தனது டீமோடு வந்தார். வியாபாரிகள் சங்கத்தலைவர் வெள்ளையன் தனது ஆதரவாளர்களோடு வந்துசேர்ந்தார். பின்னர் அடுத்தடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் கட்சியினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் சாந்தவேலின் வீட்டில் ஆயிரக்கணக்கில் குவிந்தபடியே இருந்தனர்.
த.வா.க. வேல்முருகன் ""இந்தக் கொடுமையைச் செய்த மலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கொல்லப்பட்ட சாந்தவேலின் குடும்பத்துக்கு கேரள அரசு ஒரு கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும். தமிழக அரசு 10 லட்ச ரூபாய் கொடுப்பதோடு, சாந்தவேலின் மனைவி சித்ராவுக்கு அரசுப் பணியைக் கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால் சாந்தவேலின் உடலை அடக்கம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம்''’ என அறிவித்தார். மற்றவர்களும் இதை எதிரொலித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்களிடம் இணைக் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், டி.ஆர்.ஓ. கந்தசாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
மதியம் 3.45-மணி அளவில் அதிரடியில் இறங்கியது காவல்துறை. எப்படி?
சாந்தவேலின் தம்பி மருதவேலே அதை விவரிக் கிறார்.’""திடீர்னு காவல்துறையினரும் மகளிர் காக்கிகளும் ஏராளமா எங்க வீட்டை முற்றுகையிட்டாங்க.. ஒரு பஸ்ஸையும் போலீஸ் வேனையும் கொண்டு வந்து நிறுத்தி, துக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்த தமிழ் ஆர்வலர் களையும் எங்க உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் கைதுசெய்து போலீஸ்காரங்க அதில் ஏற்றினாங்க. இந்தக் களேபரத்தால் எங்க அண்ணன் உடலருகே இருந்த பலரும் வெளியே வர, சந்தடி சாக்கில் வீட்டின் பின்பக்கம் ஒரு ஆம்புலன்ஸைக் கொண்டுவந்து நிறுத்திய போலீஸ்காரர்கள், கொல்லைப்புற வழியாக நுழைந்து, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த எங்க சாந்தவேலின் உடலை பலவந்தமாகத் தூக்கிட்டுப்போய் ஆம்புலன்ஸில் ஏத்திட்டாங்க.. அடுத்து என்ன செய் றதுன்னு தெரியாம நாங்க பரிதவிச்சிக் கிட்டிருந்தபோதே, அம்பத்தூர் மின்சார மயானத்தில் வைத்து எங்க சாந்தவேலின் உடலைப் போலீஸ்காரங்களே தகனம் பண்ணிட்டதா தகவல் வந்துச்சுங்க. எங்க அண்ணன் சாந்தவேலுக்காக இத்தனை பேர் இருந்தும், இறுதிச் சடங்குகளைக் கூட செய்யவிடாமல் அவர் உடலை கடத்திக்கிட்டுப் போய் அனாதைப் பிணம்போல் போலீஸ் எரிச்சிடிச்சி. இது எந்த வகையில் நியாயம்?''’என்றார் பெருகி வழிந்த கண்ணீரோடு.
சாந்தவேலின் மனைவி சித்ராவோ ""இறந்து போனவங் களுக்கு குடும்பத் தினர் இறுதிச் சடங்கு செய்றது முக்கியம். அவருக் கான சடங்கைச் செய்யலையேங்கிற உறுத்தல் எங்க உயிர் இருக்கும்வரை போகாதேய்யா''’என்றார் தலையில் அடித்துக்கொண்டு கதறியபடி.
கைதாகி விடுதலை செய்யப்பட்டி ருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பிரமுகர் வன்னியரசோ ""எங்களை எல்லாம் ஏதோ தீவிரவாதிகளைக் கைது செய்வது போல் குண்டுக்கட்டா கைது செய்து போலீஸ் தூக்கிட்டுப் போயிடிச்சி. சாந்த வேலின் குடும்பம் இப்ப அனாதையா நிக்கிது. அதுக்கு நிவாரண உதவிகள் செய்யுங்கன்னுதான் நாங்க ஜெ.’அரசிடம் கோரிக்கை வச்சோம். ஆனா இதைக் கண்டுகொள்ளாததோடு, சாந்தவேலின் மரணத்தைக் கூட அவங்க கொஞ்சமும் மதிக்கலை. தங்கள் கட்சி சார்பில் யாரையும் அஞ்சலி செய்ய அவங்க அனுப்பலை. தானா பாய்லர் சரிந்ததால்தான் வெந்நீர்கொட்டி சாந்தவேல் இறந்தார்ன்னு கேரள அரசு கதை கட்டுது. இதை இவங்களும் ஆமோதிக்கிற மாதிரி நடந்துக்கிறாங்க. இங்க நடப்பது ஜெ.’ ஆட்சியா? இல்லை உம்மன்சாண்டி ஆட்சியா?ன்னு தெரியலை''’என்றார் காட்டமாய்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானோ ""காவல்துறை சாந்தவேல் விவகாரத்தில் மிருகத்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. ஈவு இரக்கம் இல்லாமல் அவர் உடலை அவர் குடும்பத்துக்கே சொல்லாமல் தூக்கிக் கொண்டுபோய் எரித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது''’என்றார் காட்டமாய்.
"சாந்தவேல் உடலை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு போய் நீங்களே எரித்தது சரியா?' என திருவேற்காடு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியத்திடமே கேட்டபோது...
""எங்க மேலதிகாரிகள் சொன்னபடிதான் செய்திருக் கோம். இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கம்தான் எங்களுக்கு இருந்தது''’என்கிறார் நம்மிடம்.
மலையாளிகளின் மிருகத்தனமான இனவெறிக்கு இன்னும் எத்தனை எத்தனை சாந்தவேலுக்கள் பலியாக நேருமோ? மத்திய-மாநில அரசுகளுக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment