Thursday, January 5, 2012

தினம் தினம் திருநாளே! - அருள் மழை - 4



அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.

மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கேமுகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள்,குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேகதரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி பெரியவாளின்நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.

"
இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம்நடத்தணும்" என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக்கொண்டார், ஒரு முறை. "செய்யேன்..."

"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..." பெரியவாள்நிமிர்ந்து பார்த்தார்கள். "உன்னோட....பையன்தானே?"

இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயேதகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக்குழந்தையை விட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்துவிட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பையார் ஏற்பார்கள்?" "நாங்கள் குழந்தையை எடுதுண்டுவந்தோம்.ஊர்,பெயர்,பந்து, ஜனங்கள்தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்றுமட்டும் கேள்வி..."


பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், "பாரு....ஓர் அநாதைக்குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து, பூணூல் போடப்போறார்! என்ன மனஸ் இவருக்கு.." கண்ணன் சொன்னார்: "அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக்கொண்டிருன்ந்தோம்!"

பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டுசொன்னார்கள்"

"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்;

ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்

என்று கேள்விப்பட்டிருக்கேன்.

அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையைஅந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்." பிரசாதம்பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.

No comments:

Post a Comment